என் மலர்
ஈரோடு
- 60 அடி நீள குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அடுத்துள்ள ஒலகடம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீராஜராஜேஸ்வரி சொக்கநாச்சி அம்மன், மாரியம்மன், அக்கரை ப்பட்டி முனியப்பன் ஆகிய கோவில்களின் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக அம்மாபேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சொக்கநாச்சி அம்மன் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 15 நாட்களாக விரதம் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கோவில் முன் அமைக்கப்பட்ட 60 அடி நீள குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் பவானி, அந்தியூர், கோபி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் 9-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
- ஈரோடு மாவட்டத்தில் 4,383 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.
- தேர்வு 7 மையங்களில் நடக்கிறது.
ஈரோடு:
நாடு முழுவதும் நாளை மறுநாள் (7-ந் தேதி) நீட் தேர்வு நடக்கிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வு 7 மையங்களில் நடக்கிறது. இதில் ஈரோடு திண்டலில் உள்ள கீதாஞ்சலி அகில இந்திய சீனியர் பள்ளியில்555 மாணவ, மாணவிகளும், கூரப்பாளையம் நந்தா கலை அறிவியல் கல்லூரியில் 864 மாணவ, மாணவிகளும், நந்தா சென்ட்ரல் பள்ளி மையத்தில் 552 மாணவ, மாணவிகளும்,
அவல்பூந்துறை லயன்ஸ் மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 288 மாணவ, மாணவிகளும், ரங்கம் பாளையத்தில் உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் 1056 மாணவ, மாணவிகளும், கோபி ெசட்டி பாளையம் ஒத்தக்குதிரையில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி மையத்தில் 504 மாணவ, மாணவிகளும், கோபி வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் பள்ளியில் 564 மாணவ, மாணவிகளும் என ெமாத்தம் 4,383 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.
நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு4896 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதிய நிலையில் இந்த ஆண்டு 513 பேர் குறைந்து உள்ளனர்.
நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.
- வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
- மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
பவானி:
பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடிக்கம்பத்தில் ரிஷப வாகன கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் சன்னதி முன் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினசரி காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
சித்திரை தேர் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்கள் புறப்பாடு நடைபெற்று முடிந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் திருத்தே ரோட்டம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை பக்தர்கள் முன்னிலையில் வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னர் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் உற்சவமூர்த்திகள் தேரில் அமர்த்தப்பட்டு மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் பவானி தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து நாளை காலை சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. அதேபோல் வருகின்ற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
- போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
- இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு வரை தேடிவருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 சிறுமிக்கு 4 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக சிறுமியின் உறவினர் மற்றும் வாசுதேவன் ஆகிய 2 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இது தொடர்பாக நேற்று சிவக்குமார் (24) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு வரை தேடிவருகிறார்கள்.
+3
- 40-வது மாநாட்டை குறிக்கும் வகையில் 40 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.
- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
ஈரோடு:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது வணிகர் தினத்தையொட்டி வணிகர் உரிமை முழக்க மாநாடு இன்று ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் தொடங்கியது. மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தங்கினார்.
மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வணிகக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. 40-வது மாநாட்டை குறிக்கும் வகையில் 40 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.
மாநிலத்தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் வணிகக்கொடியை ஏற்றி வைத்தனர்.
அகில இந்திய வணிகர் சம்மேளனம் தேசிய தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டினை தொடங்கி வைத்தனர். ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதைத் தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 39-வது வணிகர் தினம் மாநில மாநாட்டை சிறப்பாக திருச்சியில் நடத்திய நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
இதனைத்தொடர்ந்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
முன்னதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாநாட்டு திடலில் அமைந்துள்ள ஷாப்பிங் ஸ்டால்களை நேற்று மாலை திறந்து வைத்தார். தமிழக அனைத்து சிறு, குறு நிறுவனங்கள் தங்களின் நிறுவனப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 115-க்கும் மேற்பட்ட ஷாப்பிங் ஸ்டால்களை அமைத்துள்ளன. அந்த ஸ்டால்களை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.
- தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் தங்களது குடும்பத்துடன் வந்தனர்.
- மாநாட்டையொட்டி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு:
ஈரோடு சித்தோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் இன்று 40-வது வணிகர் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் தங்களது குடும்பத்துடன் வந்தனர். மாநாட்டையொட்டி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு வ.உ.சி. காய்கறி பெரிய மார்க்கெட் வணிகர் மாநாட்டையொட்டி இன்று அடைக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஈரோட்டில் புகழ்பெற்ற கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) இன்று அடைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இதேப்போல் கொங்காலம்மன் கோவில் வீதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாநகர் பகுதி முழுவதும் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், மால்கள் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.எம்.கே.ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேப்போல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை என மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் அனைத்தும் வணிகர் மாநாட்டையொட்டி அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே நேரம் பால் பூத்துகள், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.
- ஆத்திரமடைந்த சஞ்சய் வீட்டில் இருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து யுவராணி மீது போட்டுள்ளார்.
- புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த சுங்கரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வன் (38). இவரது மனைவி யுவராணி. இவர்களது மகன் சஞ்சய் (14). அருள்செல்வன் சப்-காண்ட்ராக்ட் வேலை எடுத்து செய்து வந்தார். யுவராணி மின் வாரியத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சஞ்சயை அவரது தாய் பள்ளி விடுதியில் தங்கி படிக்குமாறு கூறினார். ஆனால் சஞ்சையோ நான் வீட்டில் இருந்து தான் படிப்பேன் என்று அவரிடம் கூறினார். இது தொடர்பாக அவர்கள் இருவர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சஞ்சய் வீட்டில் இருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து யுவராணி மீது போட்டுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் யுவராணி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து சஞ்சய் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு பிறகு சஞ்சய் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் புளியம்பட்டியில் உள்ள டுட்டோரியலில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சஞ்சய் தனது தாயை கொன்ற குற்ற உணர்ச்சியால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். அவரது உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி தோட்டத்தில் இருந்த கலைக்கொல்லி (விஷம்) மருந்தை எடுத்து சஞ்சய் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அதன் பின்னர் சஞ்சயை மீட்டு புளியம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சஞ்சய் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நேற்று சஞ்சய் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் இனிமேல் சஞ்சயை காப்பாற்றுவது இயலாது எனவே வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறிவிட்டனர். இதனையடுத்து சஞ்சயை வீட்டுக்கு அழைத்து சென்றனர். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே சஞ்சய் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புளியம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையில் வியாபாரம் முடிந்ததும் விற்பனையாளர் பூட்டி சென்றார்.
- கடையில் இருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்று விட்டனர்.
தாளவாடி:
தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு செல்லும் வழியில் உள்ளது ராமாபுரம். இந்த பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு இந்த கடையில் வியாபாரம் முடிந்ததும் விற்பனையாளர் பூட்டி சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்று விட்டனர்.
இதே போல் அருகில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலிலும் திருட்டு நடந்துள்ளது.
- சப்-இன்ஸ்பெக்டர் மேனகா 2 காதல் ஜோடிகளின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- காதல் தம்பதியர் மணமகன் வீட்டிற்கு சென்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பச்சமலையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பூமணிகண்டன் (25). டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் மளிகை பொருட்கள் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூரை சேர்ந்தவர் முத்துகுமார். டீ கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஜனனிபிரியா (21) கோபியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜனனி பிரியாவுடன், பூமணிகண்டனின் தங்கையும் படித்து வருவதால் ஜனனிபிரியா அடிக்கடி பூமணிகண்டன் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இதனால் ஜனனிபிரியா, பூமணிகண்டன் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளப்பியது.
அதைத்தொடர்ந்து காதலர்கள்2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி பச்சமலையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதேபோல் புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி மகள் ராகவி (18). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நஞ்சப்பன் மகன் பன்னீர்செல்வம் (23). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு பெரிச்சிகவுண்டன் புதூரில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக உள்ளார்.
இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி இருவரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதில் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும், இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் அந்தஸ்து காரணமாக இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
அதைத்தொடர்ந்து காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோபி அருகே உள்ள பவளமலையில் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
அதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மேனகா 2 காதல் ஜோடிகளின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் மணமகன்களின் பெற்றோர் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து காதல் தம்பதியர் மணமகன் வீட்டிற்கு சென்றனர்.
- வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 4.32 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
- 10 பேர் லைசென்ஸ் ரத்து செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் வாகன விதிமுறைகளை மீறுவதால் பல்வேறு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது.
எனவே இதனை கண்காணிக்க ஈரோடு தெற்கு, வடக்கு போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகள் மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த ஏப்ரலில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக 54 பேர் மீதும், செல்போன் பேசியப்படி வாகனம் இயக்கியதாக 3 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 594 பேர் மீதும் என மொத்தம் 851 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ரூ. 4.32 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
லைசென்ஸ் ரத்து
குடிபோதையில் வாகனம் இயக்கியதாக 9 பேர், அதிவேகமாக சென்ற ஒருவர் என 10 பேர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
- மத்திய அரசின் தர ஆய்வுக்குழுவால் சான்று வழங்கப்பட்டுள்ளது.
- விழிப்புணர்வு ஏற்படுத்த 104 பேர் பணி செய்து வருகின்றனர்.
ஈரோடு:
தூய்மை இந்தியா திட்டத்தில் தனி நபர் வீடுகளில் கழிப்பிடம் கட்டித்தரப்படுகிறது. டவுன் பஞ்சாயத்து பகுதிகளிலும் வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்தி கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு கழிப்பிடம் கட்டி கொடுக்கப்படுகிறது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 42 டவுன் பஞ்சாயத்து பகுதிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மண்டல உதவி இயக்குனர் அலுவலக (டவுன் பஞ்சாயத்துகள்) அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 42 டவுன் பஞ்சாயத்துகளில் 630 வார்டுகள் உள்ளன. இவற்றில் சுகாதாரம் சார்ந்த ஆய்வில் தனி நபர் கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு உடனடியாக கட்டித்தரப்படுகிறது.
இதன்படி கடந்த 2015–-16-ல் 5,264 தனி நபர் வீடுகளிலும், 2016–-17-ல் 11,104 வீடுகளிலும், 2017–-18-ல் 4,134 வீடுகள், 2018–-19-ல் 50 வீடுகளிலும் கழிப்பறை கட்டி தரப்பட்டது. இதற்கு ரூ.16.44 கோடி மானியம் வழங்கப்பட்டது.
பின் நடத்திய ஆய்வில் கடந்த 2020-–21-ல் 50 கழிப்பறை ஒதுக்கீடு செய்து 47 வீடுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 2021–-22-ல் 282 தனி நபர் வீடுகளில் கழிப்பறை ஒதுக்கீடு செய்து 166 வீடுகளிலும், 2022–-23-ல் 585 வீடுகளுக்கு கழிப்பறை ஒதுக்கீடு செய்து 278 வீடுகளுக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கு பணிகள் நடந்து வருகிறது.
இதன்படி 42 டவுன் பஞ்சாயத்துகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத டவுன் பஞ்சாயத்துகளாக மத்திய அரசின் தர ஆய்வுக்குழுவால் சான்று வழங்கப்பட்டுள்ளது.
டவுன் பஞ்சாயத்து பகுதியில் கழிப்பிடங்கள் பயன்படுத்துதல், கழிவுகளை மக்கும், மக்காத கழிவுகளாக தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒப்பந்த அடிப்படையில் பரப்புரையாளர்கள் 104 பேர் பணி செய்து உறுதி செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வணிகர் உரிமை முழக்க மாநாடு டெக்ஸ்வேலி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
- மாநாட்டை முன்னிட்டு கடைகள் அனைத்திற்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஈரோடு:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது வணிகர் தினத்தையொட்டி வணிகர் உரிமை முழக்க மாநாடு என்ற தலைப்பில் ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெறுகிறது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 8.30 மணி அளவில் வணிகக் கொடி ஏற்றும் விழா நடைபெற உள்ளது. கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் வணிகக்கொடியை ஏற்றுகிறார். அகில இந்திய வணிகர் சம்மேளனம் தேசிய தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டினை தொடங்கி வைத்து பேசுகின்றனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசுகின்றனர்.
மேலும் விருதுகளையும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர்கள் வழங்குகின்றனர்.
முன்னதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாநாட்டுத் திடலில் அமைந்துள்ள ஷாப்பிங் ஸ்டால்களை இன்று (வியாழக்கிழமை) மாலை திறந்து வைக்கிறார்.
தமிழக அனைத்து சிறு, குறு நிறுவனங்கள் தங்களின் நிறுவனப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ஷாப்பிங் ஸ்டால்களை அமைத்துள்ளன.
மாநாட்டை முன்னிட்டு தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், உள்ளிட்ட அனைத்திற்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.
மாநாடு குறித்து ஈரோடு மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40-வது மாநில மாநாடு வணிகர் உரிமை முழக்க மாநாடாக ஈரோட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதற்கான முன் ஏற்பாடு பணிகளை எனது தலைமையில் நிர்வாகிகள் பிரம்மாண்டமாக செய்து வருகிறார்கள்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் தங்களது குடும்பங்களோடு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
அனைவரையும் வரவேற்க மிக சிறப்பான ஏற்பாடுகளையும், பங்கேற்கும் அனைவருக்கும் இலவச உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வணிகர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசு விரைந்து தீர்வு காணும் வகையில் வெற்றி மாநாடாக நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
நாளை காலை 8.30 மணி அளவில் பேரமைப்பு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 9.05 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், 9.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 10 மணிக்கு குத்து விளக்கு ஏற்றுதல், 10.15 மணிக்கு மாநாட்டு தலைமை உரை நிகழ்கிறது. 10.30 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
தொடர்ந்து காலை 11 மணிக்கு முதுபெரும் வணிகர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். மதியம் 2 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 3 மணிக்கு மாநாட்டு தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
அதனைத்தொடர்ந்து 39-வது வணிகர் தினம் மாநில மாநாட்டை சிறப்பாக திருச்சியில் நடத்திய நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட செயலாளர் பொ.ராமச்சந்திரன், ஈரோடு மாவட்ட பொருளாளர் உதயம் பி.செல்வம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.






