என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "They broke the lock of"

    • கடையில் வியாபாரம் முடிந்ததும் விற்பனையாளர் பூட்டி சென்றார்.
    • கடையில் இருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்று விட்டனர்.

    தாளவாடி:

    தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு செல்லும் வழியில் உள்ளது ராமாபுரம். இந்த பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.

    நேற்று இரவு இந்த கடையில் வியாபாரம் முடிந்ததும் விற்பனையாளர் பூட்டி சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்று விட்டனர்.

    இதே போல் அருகில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலிலும் திருட்டு நடந்துள்ளது.

    ×