search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Image Chariot"

    • வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடிக்கம்பத்தில் ரிஷப வாகன கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் சன்னதி முன் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினசரி காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    சித்திரை தேர் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்கள் புறப்பாடு நடைபெற்று முடிந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் திருத்தே ரோட்டம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை பக்தர்கள் முன்னிலையில் வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    பின்னர் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் உற்சவமூர்த்திகள் தேரில் அமர்த்தப்பட்டு மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் பவானி தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து நாளை காலை சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. அதேபோல் வருகின்ற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×