என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • உரிம நிபந்தனைகளை மீறி மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது.
    • இதனையடுத்து கலால் துறை அதிகாரிகள் தனியார் மது பாருக்கு சீல் வைத்தனர்.

    நத்தம்:

    நத்தம் கோவில்பட்டியில் தனியார் கிளப்பில் மதுபான பார் உள்ளது. அது தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி சட்டத்தின் கீழ் எப்.எல்.2 உரிமம் பெற்று செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அங்கு உரிம நிபந்தனைகளை மீறி மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கலெக்டர் பூங்கொடி உத்தரவின்பேரில் தனியார் மதுபாரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து கலால்துறை ஆணையாளர் விஜயா, கலால் தாசில்தார் நவநீதகிருஷ்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மதுபான பாரை பூட்டி சீல் வைத்தனர்.

    • குளத்தை முறையாக பராமரிக்காததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கார், வேன், ஆட்டோ நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளனர்.
    • பேரூராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தை முறையாக பராமரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்ைட மினிபஸ்நிலையம் அருகே குமுந்தான்குளம் உள்ளது. இப்பகுதியில் பேரூராட்சி சார்பாக எம்.எல்.ஏ நிதியில் நாடகமேடை கட்டப்பட்டது. இந்தநிலையில் குளத்தை முறையாக பராமரிக்காததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கார், வேன், ஆட்டோ நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளனர்.

    மேலும் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் இங்கேயே நிறுத்தி விடுகின்றனர். சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் குளத்தில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் குப்பைகளுக்கு தீ வைப்பதால் அவ்வழியாக செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

    பேரூராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும். இதனை மீட்டு பூங்கா அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்க வேண்டும். இப்பகுதியில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒட்டன்சத்திரத்தில் இருந்து காமலாபுரம் வரை சுமார் 36 கி.மீ தூரத்திற்கு, புதிய 4 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • வீடுகளை இடிப்பதற்கு கால அவகாசம் கேட்டு, வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து காமலாபுரம் வரை சுமார் 36 கி.மீ தூரத்திற்கு, புதிய 4 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது சுமார் 60 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் 4 வழிச்சாலை பணிகளுக்கு இடையூறாக உள்ள, 13 வீடுகளை அகற்ற 4 வழி நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்திருந்தனர். வீடுகளுக்கான இழப்பீடு தொகை கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் முதல் கட்டமாக எஸ்.புதுக்கோட்டை சேர்ந்த மகாலட்சுமி (45), ராமமூர்த்தி (35), மாயாண்டி (45), பூபதியம்மாள் (56) ஆகியோரது வீடுகளை இடிக்க முடிவு செய்தனர்.

    ஆனால் வீடுகளை இடிப்பதற்கு கால அவகாசம் கேட்டு, வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சம்பவ இடத்திற்கு, ஒட்டன்சத்திரம் டிஎஸ்.பி முருகேசன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    சம்பவ இடத்திற்கு, நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வீட்டின் உரிமையாளரின் கடும் எதிர்ப்பை மீறி, பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கினர். இதனால், இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை செந்தில் பாலாஜியிடம் கொடுத்து வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
    • செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன். இவர் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தார் என புகார் எழுந்தது. மேலும் தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை செந்தில் பாலாஜியிடம் கொடுத்து வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    தற்போது சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் செந்தில்பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள வீரா.சாமிநாதன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை திண்டுக்கல் மாவட்ட தி.மு.க.வினரிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அழகரை அடித்து தாக்கி கத்தி முனையில் அவரிடம் இருந்த வைர கற்களை பறித்துச் சென்றனர்.
    • போலீசார் தப்பி ஓடிய 4 பேர்களை பிடிக்க பரமக்குடிக்கு விரைந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    மதுரை விரகனூர் மகாராஜா நகரைச் சேர்ந்தவர் அழகர் (வயது 42). இவர் சிவகங்கை மாவட்டம் தத்தனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னிடம் இருந்த நகைகளை விற்று விட்டு ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர கற்கள் வாங்கினார். தற்போது அதனை விற்க முடிவு செய்தார்.

    இதற்காக மதுரை தெப்பக்குளம் அடைக்கலம்பிள்ளை தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (33), பரமக்குடி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அழகர் மணிகண்டன் (30) ஆகியோரை அணுகினார். அவர்கள் கோவையில் வைர கற்கள் வியாபாரி உள்ளதாகவும் அவர்களிடம் விற்றுத் தருவதாகவும் கூறினார்.

    அதன்படி அழகர், அழகர் மணிகண்டன், மதுரை ஜே.கே.நகரைச் சேர்ந்த கண்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கோவை நோக்கி சென்றனர். அழகர் 2 வைர கற்களையும் ஒரு பர்சில் வைத்திருந்தார். திண்டுக்கல் பாலம் ராஜக்காபட்டி அருகே வந்த போது அழகர் மணிகண்டன் தனக்கு களைப்பாக இருப்பதாக கூறி காரை நிறுத்தினார்.

    அப்போது முன்னால் சென்று கொண்டு இருந்த காரில் இருந்து 4 பேர் திடீரென இறங்கி வந்து ராமகிருஷ்ணன், அழகர், மணிகண்டனை அடித்து தாக்கி கத்தி முனையில் அவர்களிடம் இருந்த வைர கற்களை பறித்துச் சென்றனர். காயமடைந்த அழகர் இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்தார்.

    அப்போது அவருடன் வந்த ராமகிருஷ்ணன், அழகர் மணிகண்டன் ஆகியோர் தப்பிச் சென்றனர். போலீசார் விசாரணை நடத்தியதில் ராமகிருஷ்ணன், அழகர் மணிகண்டன், பரமக்குடியைச் சேர்ந்த தினேஷ் பாண்டி ஆகியோர்தான் வைர கற்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய 4 பேர்களை பிடிக்க பரமக்குடிக்கு விரைந்துள்ளனர்.

    • உலக மக்களின் நலன் வேண்டி ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு குபேர பூஜை, நவகிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை உள்ளது. இந்த சபை சார்பாக உலக மக்களின் நலன் வேண்டி ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு குபேர பூஜை, நவகிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதனை ஆதி பரஞ்சோதி சகலோக சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

    இந்த பூஜையில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்பையா, தமிழரசி மற்றும் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், கோவை, திருப்பூர், உடுமலைப்பேட்டை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர்.

    இதற்கு முன்பாக கோவிலில் உள்ள கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்கப்பட்டு பவுர்ணமி கோபூஜை நடந்தது. நிறைவாக யாக பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று அனைத்து பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
    • கடந்த வாரத்தை விட இன்று பூக்கள் விலை 2 மடங்கு வரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு சின்னாளபட்டி, செம்பட்டி, கன்னிவாடி, தாடிக்கொம்பு, வெள்ளோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மல்லிகை, கோழிக் கொண்டை, முல்லை, சம்மங்கி உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பூக்கள் வரத்தைப் பொறுத்து நாள்தோறும் விலைகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று அனைத்து பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்,

    மல்லிகை பூ - ரூ. 1000, முல்லை பூ ரூ. 500, கனகாம்பரம் ரூ.400, ஜாதிப் பூ ரூ. 400, சம்பங்கி ரூ. 250, கோழி கொண்டை ரூ. 80, செண்டு மல்லி ரூ. 80, ரோஸ் ரூ. 150க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பூ விவசாயம் நடைபெறும் பகுதிகளில் மழை இல்லாததால் பூக்கள் வரத்து குறைந்துள்ளதாகவும், திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு 30 டன் பூக்கள் மட்டுமே வரத்து வந்துள்ளது. மேலும் நாளை ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு குல தெய்வம் மற்றும் கோவில் விழாக்கள் நடைபெறுவதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளதாகவும் பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த வாரத்தை விட இன்று பூக்கள் விலை 2 மடங்கு வரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் கொடைரோடு ஆகிய பகுதிகளில் மலர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மலர் சந்தையில் இருந்து அதிக அளவில் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவிற்கும் அதிக அளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக நிலக்கோட்டை மலர் சந்தை என்பது தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மலர் சந்தைகளில் ஒன்றாகும்.

    இந்நிலையில் நாளை ஆடிப்பெருக்கு 18 விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் வரத்து வெகுவாக உயர்ந்துள்ளது. பூக்களை கொள்முதல் செய்வதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மலர் சந்தை பகுதியில் குவிந்தனர்.

    நிலக்கோட்டை மலர் சந்தையை பொருத்தமட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக மல்லிகை கிலோவிற்கு ரூ.250 முதல் 300 வரை விற்பனையானது. இன்று ஒரே நாளில் கிலோ மல்லிகை பூ ரூ.850 முதல் ரூ.900 வரை விற்பனையானது. முல்லை ரூ.450, ஜாதி பூ ரூ.400, சம்பங்கி பூ ரூ.200, கனகாம்பரம் ரூ.350, பட்டன் ரோஸ் ரூ.200, சாதா ரோஸ் ரூ.220, செண்டு மல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.100, மரிக்கொழுந்து ரூ.120, துளசி ரூ.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு பூக்கள் விற்பனையானது.

    • இந்நிலையில் கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தீவனப்புல் அதிகமாக தேவைப்படுவதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் நிலங்களில் தீவனப்புல்லை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • கால்நடை வளர்ப்போர் தேடி வந்து தீவனப்புல்லை வாங்கி செல்கின்றனர்.இதனால் எங்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது என்றார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே மூர்த்திநாயக்கன்பட்டி, தண்டல்காரன்பட்டி, உரிமைக்காரன்பட்டி, சிறுநாயக்கன்பட்டி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தீவனப்புல் அதிகமாக தேவைப்படுவதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் நிலங்களில் தீவனப்புல்லை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்கள். தீவனப்புல்லை தேடி வந்து வாங்கி செல்வதால் நல்ல வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    இதுகுறித்து விவசாயி கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,

    திண்டுக்கல் அருகே மூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள என்னுடைய நிலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கம்பு நேப்பியர் தீவனப் புல்லை சாகுபடி செய்து வருகின்றேன். இதில் ஊடுபயிராக சோளம் மற்றும் உளுந்து கொடியை பயிரிட்டுள்ளேன். சுமார் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யப்படுவதால் நல்ல வருவாய் கிடைக்கிறது.

    ேமலும் இயற்கை உரமான மாட்டுச்சாணம், ஆட்டுப்புழுக்கை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு ஆகியவற்றை உரமாக பயன்படுத்துவதால் நல்ல மகசூல் கிடைக்கிறது. தீவன புல்லில் வெட்டுப்பூச்சி மற்றும் வேர் அழுகல் நோய் ஏற்படும்போது இயற்கையாக மாட்டு கோமியம் மற்றும் மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்து ஸ்ப்ரே அடிக்கிறோம். அனைத்தும் இயற்கையான முறையில் பயன்படுத்தப்படுவதால் இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் தீவனப்புல்லை உண்ணும் மாடுகளிடம் நல்ல சுகாதாரமான சத்தான பால் அதிகமாக கிடைக்கும். ஆகவே கால்நடை வளர்ப்போர் தேடி வந்து தீவனப்புல்லை வாங்கி செல்கின்றனர்.இதனால் எங்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது என்றார்.

    • விழாவில் தாய்ப்பாலின் நன்மைகள், தாய்ப்பால் கொடுக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து டாக்டர்கள் எடுத்துரைத்தனர்.
    • சிறு வயதில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆரோக்கியமான உணவுகளே அவர்கள் நோய் தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டு ஆரோக்கியமான குழந்தைகளாக வளர உதவுகிறது என்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனையில் திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவி நிஷா தேவி தலைமை தாங்கினார். செயலாளர் கிஷோர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் ஹரி கிருஷ்ணன், உமாதேவி, அன்புச்செல்வன், குழந்தை நல மருத்துவர் டாக்டர் பாலாஜி பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் தாய்ப்பாலின் நன்மைகள், தாய்ப்பால் கொடுக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து டாக்டர்கள் எடுத்துரைத்தனர். மேலும் குழந்தைகள் வளர்ப்பில் தாய்மார்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். சிறு வயதில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆரோக்கியமான உணவுகளே அவர்கள் நோய் தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டு ஆரோக்கியமான குழந்தைகளாக வளர உதவுகிறது என்றனர்.

    தொடர்ந்து நடந்த விழாவில் 50 கொழுகொழு குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசுகளும், புரோட்டின் பவுடர்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேவை திட்ட இணைச்செயலாளர் சண்முகம், மண்டல ஒருங்கிணைப்பாளர் காலிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தலைவர் ஊராட்சி நிதியில் இருந்து குடிநீர் பைப் லைன் உடைந்ததை சரிசெய்ததாக கணக்கு காண்பித்து ரூ.13.8 லட்சத்தை கையாடல் செய்துள்ளார்.
    • நோட்டீஸ் தொடர்பாக கடந்த 6 மாதமாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி அருகே காவலப்பட்டி ஊராட்சி நிதியில் தலைவர் கையாடல் செய்திருப்பதாக, வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணனிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பழனி ஊராட்சி ஒன்றியம் காவலப்பட்டி ஊராட்சியில் ஏப்ரல் 2020 முதல் அக்டோபர் 2021 வரை தலைவர் கமலவேணி, ஊராட்சி நிதியில் இருந்து குடிநீர் பைப் லைன் உடைந்ததை சரிசெய்ததாக கணக்கு காண்பித்து ரூ.13.8 லட்சத்தை கையாடல் செய்துள்ளார்.

    இதே போல், சுகாதார பொருட்கள் வாங்கியதாக ரூ.4.58 லட்சம், குடிநீர் பைப் போன்ற பொருட்கள் வாங்கியதாக ரூ.8.17 லட்சம், மோட்டார் பழுது பார்த்ததாக ரூ.1.87 லட்சம் கையாடல் செய்து ள்ளார்.

    இது தொடர்பாக, தணிக்கை அதிகாரி ஆய்வு செய்தார். இதில் பணம் கையாடல் செய்தது கண்டு பிடிக்கப்பட்டு, தலைவர் மற்றும் துணைத் தலைவர் சிவகாமி ஆகியோர் மீது ஊராட்சிகள் சட்டப்பிரிவின் படி நடவடிக்கை எடுப்ப தற்கு 2023 பிப்.8-ம் தேதி இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப ப்பட்டுள்ளது.

    ஆனால், நோட்டீஸ் தொடர்பாக கடந்த 6 மாதமாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் சின்னையா பேசி வந்துள்ளார்.
    • மீண்டும் மறுநாள் தனது கணவருக்கு போன் செய்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் சின்னையா (45). கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவியும், மாரிச்செல்வம் (14), கவிவரதன் (11) ஆகிய மகன்களும், பிரணிஷா (5) என்ற மகளும் உள்ளனர். உள்ளூரில் சரிவர வேலை கிடைக்காததால் சின்னையா வெளிநாடு செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனியார் ஏஜெண்ட் மூலம் ஈராக் நாட்டில் கம்பி கட்டும் வேலைக்கு சென்றார்.

    அங்கு சென்ற பின்பு அவ்வப்போது தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் சின்னையா பேசி வந்துள்ளார். வேலை சற்று கடினமாக இருப்பதாகவும் இருந்தபோதும் சில மாதங்கள் இங்கு இருந்துவிட்டு பின்னர் ஊருக்கு வந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவியிடம் சின்னையா அழுகுரலுடன் பேசியுள்ளார். மனைவி கோகிலா கேட்டபோது நான் இனிமேல் ஊருக்கு வரமுடியாது. பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்குமாறு கூறியுள்ளார்.

    இதனால் பதறிப்போன கோகிலா மீண்டும் அவரிடம் கேட்டபோது, தன்னை இங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் சிலர் ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இனிமேல் நான் உயிர் வாழக்கூடாது. இந்த வீடியோவை நமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் பார்த்தால் தலைகுனிவாகி விடும் என கண்ணீர் விட்டு பேசியுள்ளார். அதற்கு மனைவி கோகிலா எது நடந்தாலும் பரவாயில்லை. நீங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்துவிடுங்கள். இங்கே கிடைக்கும் வேலையை செய்துகொண்டு வாழலாம் என அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

    பின்னர் மீண்டும் மறுநாள் தனது கணவருக்கு போன் செய்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதட்டமான கோகிலா தனது கணவருடன் வேலைக்குச் சென்ற வீரப்புலி என்பவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கோகிலாவிடம் உனது கணவர் தூக்குப்போட்டு இறந்துவிட்டார் என கூறினார்.

    இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த கோகிலா தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் நத்தம் மண்டல துணை வட்டாட்சியர் அண்ணாமலையிடம் மனு அளித்தார். அதில் தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் அண்ணாமலை இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து சின்னையா உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்காக காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை அரசு மற்றும் தனியார் பஸ்களில் செல்வது வழக்கம்.
    • இன்று காலை 8 மணியிலி ருந்து 9 மணி வரை அரசு பஸ்கள் வராததால் பஸ்சு க்காக காத்திருந்த மாண வர்கள் வேறு வழியின்றி ஆட்டோ பிடித்து வேக வேகமாக பள்ளியை நோக்கி சென்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இருந்து தினந்தோறும் வத்தலகுண்டு அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பாலிடெக்னிக், பட்டிவீரன்பட்டி, அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்காக காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை அரசு மற்றும் தனியார் பஸ்களில் செல்வது வழக்கம்.

    ஆனால் கடந்த சில நாட்க ளாகவே போதிய நேரத்தில் பஸ்கள் வராததால் மாண வர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இன்று காலை 8 மணியிலி ருந்து 9 மணி வரை அரசு பஸ்கள் வராததால் பஸ்சு க்காக காத்திருந்த மாண வர்கள் வேறு வழியின்றி ஆட்டோ பிடித்து வேக வேகமாக பள்ளியை நோக்கி சென்றனர். இதில் சில மாணவர்கள் ஆட்டோ விற்கு காசு இல்லாமல் சக மாணவர்களிடம் கடன் கேட்டு வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    நிலக்கோட்டையில் சமீப காலமாகவே இது போன்ற அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோ ர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து ஆட்டோக்க ளில் பயணிக்கும் நிலை தொடர்ந்தால் கிராமப்புற ங்களில் இருந்து வரும் மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்படு வார்கள். நிலக்கோட்டை மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து ஊழியர் பற்றாக்குறையால் இது போன்ற நிலை தொடர்வ தாக பொதுமக்கள் தெரி விக்கின்றனர். எனவே போக்குவரத்து கழக அதிகாரி கள் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ×