search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திண்டுக்கல் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர கற்களை பறித்த கும்பல் கைது
    X

    திண்டுக்கல் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர கற்களை பறித்த கும்பல் கைது

    • அழகரை அடித்து தாக்கி கத்தி முனையில் அவரிடம் இருந்த வைர கற்களை பறித்துச் சென்றனர்.
    • போலீசார் தப்பி ஓடிய 4 பேர்களை பிடிக்க பரமக்குடிக்கு விரைந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    மதுரை விரகனூர் மகாராஜா நகரைச் சேர்ந்தவர் அழகர் (வயது 42). இவர் சிவகங்கை மாவட்டம் தத்தனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னிடம் இருந்த நகைகளை விற்று விட்டு ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர கற்கள் வாங்கினார். தற்போது அதனை விற்க முடிவு செய்தார்.

    இதற்காக மதுரை தெப்பக்குளம் அடைக்கலம்பிள்ளை தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (33), பரமக்குடி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அழகர் மணிகண்டன் (30) ஆகியோரை அணுகினார். அவர்கள் கோவையில் வைர கற்கள் வியாபாரி உள்ளதாகவும் அவர்களிடம் விற்றுத் தருவதாகவும் கூறினார்.

    அதன்படி அழகர், அழகர் மணிகண்டன், மதுரை ஜே.கே.நகரைச் சேர்ந்த கண்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கோவை நோக்கி சென்றனர். அழகர் 2 வைர கற்களையும் ஒரு பர்சில் வைத்திருந்தார். திண்டுக்கல் பாலம் ராஜக்காபட்டி அருகே வந்த போது அழகர் மணிகண்டன் தனக்கு களைப்பாக இருப்பதாக கூறி காரை நிறுத்தினார்.

    அப்போது முன்னால் சென்று கொண்டு இருந்த காரில் இருந்து 4 பேர் திடீரென இறங்கி வந்து ராமகிருஷ்ணன், அழகர், மணிகண்டனை அடித்து தாக்கி கத்தி முனையில் அவர்களிடம் இருந்த வைர கற்களை பறித்துச் சென்றனர். காயமடைந்த அழகர் இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்தார்.

    அப்போது அவருடன் வந்த ராமகிருஷ்ணன், அழகர் மணிகண்டன் ஆகியோர் தப்பிச் சென்றனர். போலீசார் விசாரணை நடத்தியதில் ராமகிருஷ்ணன், அழகர் மணிகண்டன், பரமக்குடியைச் சேர்ந்த தினேஷ் பாண்டி ஆகியோர்தான் வைர கற்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய 4 பேர்களை பிடிக்க பரமக்குடிக்கு விரைந்துள்ளனர்.

    Next Story
    ×