என் மலர்
திண்டுக்கல்
- கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமான மாணவியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
- வீட்டிற்கு சென்ற மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ்-தங்கம் தம்பதியின் மகள் ஜனனி(16). திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் மாணவியை மீட்டு அறிவுரைகள் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசா ரணையில் இவர் அதே ஊரை சேர்ந்த சிவக்கு மார்(19) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
அவரிடமிருந்து பிரித்து வந்ததால் வேதனையடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- பொதுமக்கள் எதிர்ப்பையடுத்து அந்த அறிவிப்பு பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு ஜே.சி.பி எந்திரம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் மட்டும் தடையின்றி பயன்படுத்துவது எப்படி?
கொடைக்கானல்:
கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் ஆர்.டி.ஓ ராஜா தலைமையில் நடைபெற்றது. உதவி வனபாதுகாவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். நகராட்சி மேலாளர் மீனா, தோட்டக்கலை உதவி இயக்குனர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர், ரேஞ்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்ததாவது, வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு வனத்துறையிடம் மனுக்கள் அளித்தும் அவற்றின் ஆவணங்கள் மாயமாகி விட்டதாக வனத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
மலைப்பகுதியில் விவசாயம் செய்யப்படும் காய்கறி பயிர்களை பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. கொடைக்கானல் பகுதியில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து நடிகர்கள் வீடு கட்டி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஜே.சி.பி எந்திரம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் மட்டும் தடையின்றி பயன்படுத்துவது எப்படி? அரசு நிலத்தை மறித்து சாலை அமைத்துள்ளனர். அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
பொதுமக்கள் எதிர்ப்பையடுத்து அந்த அறிவிப்பு பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
பேத்துப்பாறையை சேர்ந்த ஊர்தலைவர் மகேந்திரன்தெரிவிக்கையில், நடிகர் பிரகாஷ்ராஜ் அரசு அனுமதியை மீறி ஜே.சி.பி வாகனங்களை கொண்டு சாலை அமைத்துள்ளார். நடிகர் பாபிசிம்ஹா அனுமதியின்றி கட்டிடம் கட்டி வருகிறார். விதிகளை மீறி மின்இணைப்பு பெற்றுள்ளார். 24 மணிநேரமும் ஜே.சி.பி வாகனங்களை இயக்கி வேலைசெய்துவரும் நடிகர்கள் மீதும், இதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலசமுத்திரத்தில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டது.
- ஆனால் அமைக்கப்பட்டு உபயோகம் இல்லாமல் அந்த மையம் பூட்டியே கிடப்பதால் அப்பகுதியில் குற்ற சம்பவம் அதிகரித்து வருகிறது.
பழனி:
பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் பேரூராட்சியில் 10-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பாலசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகள் பழனி தாலுகா போலீஸ்நிலையத்துக்கு உட்பட்டது. ஆனால் தாலுகா போலீஸ்நிலையம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெய்க்காரப்பட்டியில் அமைந்துள்ளது.
இந்நிலையில் பாலசமுத்திரம் பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. அவ்வாறு நடக்கும்போது நெய்க்காரப்பட்டியில் இருந்துதான் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்து செல்கின்றனர். எனவே பாலசமுத்திரத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், குற்ற சம்பவங்களுக்கு உடனடி தீர்வு காணவும் போலீஸ் உதவி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதைத்தொடர்ந்து கடந்த மாதங்களுக்கு முன்பு பாலசமுத்திரத்தில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டது. ஆனால் அமைக்கப்பட்டு உபயோகம் இல்லாமல் அந்த மையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பாலசமுத்திரம் பகுதியில் குற்ற சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலசமுத்திரம் பகுதியில் மண் அள்ளி வரும் லாரிகள் அதிவேகத்தில் செல்வதாகவும், இதனால் விபத்துகள் அதிகம் நடப்பதாக கூறி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தாமதமாக வந்தனர்.
எனவே பாலசமுத்திரம் போலீஸ் உதவி மையத்தை திறந்து அங்கு பணியில் போதிய போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதால் அதற்கான முன்னேற்பாட்டு சோதனை முறை பயிற்சிகள் வழங்கப்பட்டது.
- உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் வரும் 27ம் தேதி முதல் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்த உள்ளனர். இந்நிலையில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதால் அதற்கான முன்னேற்பாட்டு சோதனை முறை பயிற்சிகள் வழங்கப்பட்டது.
பிள்ளையார்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் நடந்த காலை சிற்றுண்டி தயாரிப்பு பயிற்சியின் போது, குழந்தைகளுக்கு வழங்க இருக்கும் உணவை ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமையிலான குழுவினர் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.
அருகில் மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன், துணைத் தலைவர் கவிதா மனோகர், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜகணேஷ், ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் அருண், பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, உதவி ஆசிரியர் காமாட்சி, காலை சிற்றுண்டி உணவு தயாரிப்பாளர் முருகேஸ்வரி, ஊராட்சி மன்ற செயலர் அழகர்சாமி உட்பட பலர் இருந்தனர்.
- உரிய தொகை வழங்காததால் கடந்த 6-மாதத்திற்கு முன்பு, அமைச்சர் இ.பெரியசாமியிடம் நேரில் சந்தித்து விவசாயிகள் புகார் செய்தனர்.
- இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணத் தொகையை வழங்கும்படி கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே வி.கூத்தம்பட்டி வழியாக விருதுநகரிலிருந்து கோயம்புத்தூருக்கு உயர் மின் கோபுரம் செல்கிறது. ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரக்கல் ஊராட்சியில் வீ.கூத்தம்பட்டி, தெற்கு மேட்டுப்பட்டி, வடக்கு மேட்டுப்பட்டி, வண்ணம்பட்டி ஆகிய பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்ததற்கு உரிய தொகை வழங்காததால் கடந்த 6-மாதத்திற்கு முன்பு, அமைச்சர் இ.பெரியசாமியிடம் நேரில் சந்தித்து விவசாயிகள் புகார் செய்தனர்.
அதன்பின்னர் அவர் நடவடிக்கை எடுத்ததின் பேரில் விவசாயிகள் சிலருக்கு மட்டும் மின்வாரிய அதிகாரிகள் பணம் வழங்கியுள்ளனர். அதன்பின்னர் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு செல்லவில்லை. இந்நிலையில் வீ.கூத்தம்பட்டிக்கு சென்ற மின்வாரிய அதிகாரிகளை இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணத் தொகையை வழங்கும்படி கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தி.மு.க. ஒன்றியகுழு உறுப்பினர் வீ.கூத்தம்பட்டியை சேர்ந்த செல்வி காங்கேயன் கூறுகையில் விவசாயிகளிடம் இடம் கேட்க வரும்போது அதிகாரிகள் உங்கள் இடத்திற்குரிய பணத்தை தருகிறோம் என கூறி 3 வருடங்கள் ஆகிறது. இதுநாள்வரை முறையாக உரிய நிவாரண பணம் தரவில்லை. அதனால் இங்கு வந்த மின்சாரத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இதுகுறித்து அமைச்சர் இ.பெரியசாமியிடம் புகார் செய்துள்ளோம் என்றார். விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசார் மாணவியை மீட்டு அறிவுரைகள் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
- வீட்டிற்கு சென்ற மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ்-தங்கம் தம்பதியின் மகள் ஜனனி(16). திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் மாணவியை மீட்டு அறிவுரைகள் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர் அதேஊரை சேர்ந்த சிவக்குமார்(19) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
அவரிடமிருந்து பிரித்து வந்ததால் வேதனையடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஆத்தூர், செம்பட்டி பகுதிகளில் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்வு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் அரவிந்த் நாராயணன் தொடங்கி வைத்தார்.
- எச்.ஐ.வி நிலையை அறிந்திட டெஸ்ட் தான் பெஸ்ட் என்ற வாசகங்கள் உள்ளடக்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
செம்பட்டி:
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட மேற்பார்வையாளர் ஜெசிந்தா அறிவுறுத்தலின் பேரில் எய்ட்ஸ் இல்லாத தமிழகம் 2030 என்ற இலக்கை நோக்கி எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஆத்தூர், செம்பட்டி பகுதிகளில் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்வு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் அரவிந்த் நாராயணன் தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் செம்பட்டி மற்றும் ஆத்தூர் பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களில் எச்.ஐ.வி தொற்றுள்ளோரும் நம்மில் ஒருவரே மற்றும் எச்.ஐ.வி நிலையை அறிந்திட டெஸ்ட் தான் பெஸ்ட் என்ற வாசகங்கள் உள்ளடக்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி நம்பிக்கை மைய ஆற்றுனர் கண்ணன் மற்றும் ஆய்வக நுட்புநர் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.
- 3-வது வார்டு பகுதிக்கு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிதண்ணீர் வழங்கப்படததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
- அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று பலமுறை கூறியும், 3-வது வார்டு பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதில் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை பகுதியில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சாலை ஓரமாக கொண்டு செல்லப்பட்ட குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்படுவதால் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சரி செய்யப்பட்டு அவ்வப்போது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 3-வது வார்டு பகுதிக்கு, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிதண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிதண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று பலமுறை கூறியும், 3-வது வார்டு பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதில் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
எனவே உடனடியாக குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிருத்தி சித்தையன்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பேரூராட்சி அலுவலர்கள் குடிதண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பூமிராஜ் தனக்கு இந்த பெண்ணை பிடிக்கவில்லை என்றும் தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் பெற்றோரிடம் கூறினார்.
- பூமிராஜ் தனது காதலியுடன் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை நண்பர்களுக்கு அனுப்பி வீட்டில் தெரிவிக்குமாறு கூறி உள்ளார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் பூமிராஜ் (வயது25). இவருக்கும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டார் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் ஆகஸ்ட் 21ந் தேதியான (இன்று) திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
இதனிடையே பூமிராஜ் தனக்கு இந்த பெண்ணை பிடிக்கவில்லை என்றும் தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் பெற்றோரிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருமணம் ஏற்பாடுகள் செய்தாகிவிட்டது. அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விட்டது. இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் திருமணம் பிடிக்கவில்லை என்றால் பெண் வீட்டாரிடம் என்ன சொல்வது என கூறி உள்ளனர்.
தனது பெற்றோரை சமாதானப்படுத்தும் வகையில் நீங்கள் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி உள்ளார். பின்னர் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு வருவதாக கூறி பூமிராஜ் வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகனின் பெற்றோர் மற்றும் உறவினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது பூமிராஜ் தனது காதலியுடன் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை நண்பர்களுக்கு அனுப்பி இதனை வீட்டில் தெரிவிக்குமாறு கூறி உள்ளார். மேலும் தனது பெற்றோரிடம் தன்னை மன்னித்துக்கொள்ளும்படியும் தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் குரல் பதிவு மூலம் தகவல் அனுப்பினார்.
இதனால் திருமண வீட்டில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மணமகனின் பெற்றோர் மற்றும் உறவினர், ஊர் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து பெண்ணின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தனது மகன் செய்த தவறுக்கு தாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் திருமணத்திற்காக அவர்கள் செய்த செலவை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இதற்கு பெண் வீட்டார் ஒருமனதாக சம்மதம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் செலவு செய்த தொகை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் வீட்டிற்கு சென்றனர். ஏற்கனவே அழைப்பிதழ் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டதால் திருமணத்துக்கு வந்தவர்கள் நடந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அய்யலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
- 20 வருடங்களுக்கு மேலாக உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ளோம்.
- திண்டுக்கல் மாவட்டத்திலும் முன்னாள் மத்திய துணை ராணுவ படை வீரர்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட முன்னாள் மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் வசித்து வருகிறோம். 20 வருடங்களுக்கு மேலாக உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ளோம்.
கோயம்புத்தூர், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் முன்னாள் மத்திய துணை ராணுவ படை வீரர்களுக்கு விலக்கு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னேற்பாடு பணிகளை சீலப்பாடி ஊராட்சியில் உள்ள பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- ஒரு பள்ளிக்கு 3 நபர் வீதம் 2,781 சமையல் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட த்தில் அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கு வதற்கான முன்னேற்பாடு பணிகளை சீலப்பாடி ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி, முள்ளிப்பாடி ஊராட்சியைச் சேர்ந்த செல்லமான்தாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-
குடும்ப சூழ்நிலை காரணமாக பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது காலை உணவு சாப்பிடாமல் வருகின்றனர் என்பதை அறிந்து, அவர்க ளின் வயிற்றுப்பசியை நீக்க இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின்படி பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமைகளில் ரவா காய்கறி கிச்சடி, புதன் கிழமைகளில் அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வியாழக் கிழமைகளில் வரகு பொங்கலுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக் கிழமைகளில் சாமை கிச்சடி மற்றும் ரவா கேசரி(இனிப்பு) ஆகியவை சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
சமையல் மையப்பொறு ப்பாளர்கள் ஊரகம் பகுதியில் 14 வட்டாரங்களில் 927 பள்ளிகளுக்கு, ஒரு பள்ளிக்கு 3 நபர் வீதம் 2,781 சமையல் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளனர். நகர்ப்புறம் பகுதியில் 23 பேரூராட்சி களில் 107 பள்ளிகளுக்கு, ஒரு பள்ளிக்கு 3 நபர் வீதம் 321 சமையல் பொறுப்பா ளர்கள் தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளனர். சமையல் மையப் பொறுப்பாளர்க ளுக்கு அந்தந்த வட்டார ங்களில் தனித்தனி குழுவாக பயிற்சி அளிக்கப்பட்டு ள்ளது.
திண்டுக்கல் மாவட்ட த்தில் முதற்கட்டமாக ஊராட்சிப் பகுதிகளில் 34 பள்ளிகளைச் சேர்ந்த 951 மாணவ, மாணவிகளுக்கும், நகர்ப்புறங்களில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 1354 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 49 பள்ளிகளைச் சேர்ந்த 2,305 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட த்தில் ஊரகப் பகுதிகளில் 1,034 பள்ளிகளைச் சேர்ந்த 53,715 மாணவ- மாணவிகளுக்கும் நகர்ப்புறத்தில் 28 பள்ளிகளைச் சேர்ந்த 2,310 மாணவ, மாணவிகளுக்கும், என மொத்தம் 1,062 பள்ளிகளைச் சேர்ந்த 56,025 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் வருகிற 25ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 1068 பள்ளிகளில் பயிலும் 54,666 மாணவ- மாணவிகளுக்கும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 43 பள்ளிகளில் பயிலும் 3,664 மாணவ- மாணவிகளுக்கும் என மொத்தம் 1111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
- கூட்டத்தில் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள வருவாய்த்துறையினர் பட்டா வழங்க கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கூட்டத்தில் செயல் அலுவலர் , பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பழனி:
பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் ராஜராஜஸே்வரி சுப்புராம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் விஜய்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அனைத்து வார்டு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தி சந்தை அமைப்பது, நத்தம் புறம்போக்கு நிலங்களை பேரூராட்சி மன்ற ஆட்சேபனையின்மை தீர்மானமின்றி தனிநபருக்கோ, அமைப்புகளுக்கோ வருவாய்த்துறையினர் பட்டா வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயல் அலுவலர் சித்திரைக்கனி, பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






