என் மலர்
தர்மபுரி
- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சிக்கு மாரண்ட்அள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாரண்ட்அள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு தொகையை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்டத் துணைச் செயலாளர் ராஜகுமாரி மணிவண்ணன், மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், கோபால் முனியப்பன், கிருஷ்ணன், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜெயா மற்றும் மாரண்டஅள்ளி பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், கவுன்சில ர்கள் சத்யா சிவகுமார், வெங்கடேசன், யதிந்தர், கார்த்திகேயன், ரீனா, கீதா, லட்சுமி, அபிராமி, சுகந்தி, மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 2 மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை.
- வீட்டிற்கு பணம் அனுப்ப முடி யாமலும், காலுக்கு செருப்பு வாங்கி அணிய முடியாமலும் பரிதவித்து வருகிறார்கள்.
பாலக்கோடு,
கொச்சின் முதல் பெங்களூர் வரை கேஸ் குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.
தற்போது தருமபுரி - ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை பகுதியில் குழாய் பதிக்கும் பணி பாலக்கோடு அருகே எர்ரணஹள்ளி பகுதியில் நடைபெற்று வருகிறது.
பீகார், ஒரிசா, உத்தரபிர தேசம் உள்ளிட்ட வட மாநிலத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் இப்பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
கெயில் நிறுவனம் கடந்த 2 மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் தங்களுடைய வீட்டிற்கு பணம் அனுப்ப முடி யாமலும், காலுக்கு செருப்பு வாங்கி அணிய முடியாமலும், மேலும் தங்களுடைய அடிப்படை தேவை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காத கெயில் நிறுவனத்தை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- குண்டர் சட்டத்தில் குப்புராஜை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்தார்.
- அரூர் போலீசார் குப்புராஜை குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எஸ்.பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 36). இவர் மீது சாராயம் காய்ச்சியது தொடர்பான வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் அண்மையில் சாராயம் காய்ச்சியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது 450 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
இதையடுத்து குண்டர் சட்டத்தில் குப்புராஜை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை ஏற்று குண்டர் சட்டத்தின் கீழ் குப்புராஜை கைது செய்ய கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து அரூர் போலீசார் குப்புராஜை குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்தனர்.
- கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
- மனமுடைந்த காணப்பட்ட அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டி பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது56).
கூலித்தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே சவுளூப்பட்டியைச் சேர்ந்த லட்சுமி என்பவருடன் முதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் சேகர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சூர்யா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சேகருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வருவதால், கணவன்-மனைவிக்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அப்போது சேகர், தனது 2-வது மனைவி சூர்யாவை குடும்ப நடத்த அழைத்தார். அவர் வரமறுத்ததால், மனமுடைந்த காணப்பட்ட அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.4 கோடி 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
- தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
தருமபுரி,
தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, ஏமகுட்டியூர் பிரிவு செல்லும் சாலையில் நேருநகர் அருகில் தடுப்பு சுவர் அமைத்து, சாலையை அகலப்படுத்தி 1.4 கிலோ மீட்டர் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4 கோடி 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் நாகராஜ், உதவி கோட்டப் பொறியாளர் ஜெயசங்கர், உதவி பொறியாளர் கிருபாகரன், தடங்கம் கவுன்சிலர் மகேஸ்வரி, வார்டு உறுப்பினர் சக்தி, உள்ளிட்ட ஊர்பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
- ஆர்.டி.ஒ, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் 50-க்கும் மேற்பட்ட முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு மனைப்பட்டா வழங்கவேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் அத்திமரத்துப்பள்ளம், சக்கிலிநத்தம், ஈச்சம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த 100 -க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் தருமபுரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
3 தலைமுறைகளாக, சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக அத்திமரத்துப்பள்ளம், சக்கிலிநத்தம், ஈச்சம்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் தனது சொந்த செலவில் வீடுகட்டி வசித்து வருகிறோம் நாங்கள்
குடியிருக்கும் வீட்டிற்கு பஞ்சாயத்து வீட்டு வரி, மின்இனைப்பு கட்டண ரசீது,குடிநீர் இணைப்புக்கான ரசீது ஆகியை முறையாக செலுத்தி வருகின்றோம். விவசாய பணிகளுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம் கூலிவேலை செய்யும் நாங்கள் வேறு வீட்டுமனை வாங்க வசதி இல்லை. நீண்ட ஆண்டுகாலமாக வசிக்கும் எங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஒ, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் 50-க்கும் மேற்பட்ட முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
எனவே நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு மனைப்பட்டா வழங்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
- பாதாள கிணற்றில் இரண்டு பைக் ஒரு கார் சுற்றி வளம் வரும் சாகசங்கள் பார்ப்பவர்களை உறைய வைக்கும் காட்சியாக உள்ளது.
- பொருட்காட்சியில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் பனி மலையில் பனி தூவுவது போன்ற காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.
தருமபுரி,
தருமபுரி வள்ளலார் மைதானத்தில் டிஜே அம்யூஸ்மென்ட் நிறுவனம் சார்பில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் பணி உலகம் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த மாபெரும் பொருட் காட்சியினை கடந்த 24-ம் தேதி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தொடங்கி வைத்தார். டி.ஜே அம்யூனிஸ்ட்மென்ட் மேனேஜிங் டைரக்டர் தினேஷ் குமார் வரவேற்றார்.
பொருட்காட்சியில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் பனி மலையில் பனி தூவுவது போன்ற காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.
மேலும் பனி மழையில் பனிக்கரடி, பனிக்குதிரை, பனி சிறுத்தைகள், பனி நாய்கள், பெண்குயின், உள்ளிட்ட பறவை மற்றும் விலங்குகள் தத்ரூபமாக மக்களை கவர்ந்து இருந்தது.
மேலும் வீட்டு உபயோக பொருட்கள் ஊட்டி ட்ரை ப்ரூட்ஸ், மைசூர் கான்டிமெண்ட்ஸ், பெண்களுக்கான வளையல்கள், மாலைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பரிசு போட்டி, விளையாட்டுகள் குழந்தைகளுக்கான ரயில் பயணம், ராட்சத ராட்டினம், பாதாள கிணற்றில் இரண்டு பைக் ஒரு கார் சுற்றி வளம் வரும் சாகசங்கள் பார்ப்பவர்களை உறைய வைக்கும் காட்சியாக உள்ளது.
மேலும் ஊட்டி மிளகாய் பஜ்ஜி, டெல்லி அப்பளம், ஐஸ்கிரீம், போன்ற திண்பன்டங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட் காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதுக்களத்தை தூண்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்நிலையில் தினந்தோறும் லண்டன் பிரிட்ஜ் மற்றும் பனி உலக பொருட்காட்சியில் பார்வையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- மல்லுப்பட்டி கிராமத்தில் பள்ளி வளாகத்தில் இருந்து முக்கிய வீதி வழியாக உலகப் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- இப்பேரணியை பாலக்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிந்து பேரணியை தொடங்கி வைத்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மல்லுப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மல்லுப்பட்டி கிராமத்தில் பள்ளி வளாகத்தில் இருந்து முக்கிய வீதி வழியாக உலகப் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை பாலக்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிந்து பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணியில் புகை பிடித்தால் புற்றுநோய் உண்டாகும் குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு புகைத்தால் உங்களையும் எங்களையும் நேசிப்பவர்களையும் பாதிக்கும் குடிபோதையில் குடும்ப சந்தோஷத்தை இழப்பீர்கள்.
போதை நம் காசு கொடுத்து வாங்கும் வேதனை இறுதியில் மரணம். போதையை ஒழிப்போம் பாதையை வளர்ப்போம் போதையில் மோதி பாதை மாறாதே உயிரை அளிக்கும் உடலை உறிஞ்சும் கொடிய எதிரி போதை என்று பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தடைந்தனர்
விழிப்புணர்வு பேரணிக்கு மகேந்திர மங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மாற்றுத்திற னாளிகளுக்கு உதவி த்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 518 மனுக்கள் வரப்பெற்றன.
- 6 இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி யும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு உதவி த்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 518 மனுக்கள் வரப்பெற்றன.
பாலக்கோடு வட்டம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த இருளர் இன மக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி கடந்த வாரம் 19.6.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு வழங்கி னார்கள். இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளமாறு சம்பந்த ப்பட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதனடிப்படையில், இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாலக்கோடு வட்டம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த 6 இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பென்னாகரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- அம்பேத்கர் சிலை முதல் பேரணியாக பேருந்து நிலையம் கடைவீதி வழியாக காவல் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.
பென்னாகரம்,
உலக போதை பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், பென்னாகரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள் போதை பொருள் தீமைகள் குறித்து பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் அம்பேத்கர் சிலை முதல் பேரணியாக பேருந்து நிலையம் கடைவீதி வழியாக காவல் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிகழ்வில் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிம் செல்வன், மூர்த்தி, முருகன் உள்ளிட்ட காவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
- ரூ.25 லட்சம் மதிப்பில் ஏசி வசதியுடன் கூடிய நவீன நூலகம் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
- முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்.எல்.ஏ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நூலகம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூ ராட்சியில் பாலக்கோடு ரோட்டில் ராஜ்யசபா எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் ஏசி வசதியுடன் கூடிய நவீன நூலகம் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
இதில் பேரூராட்சி தலைவர் மனோகரன், செயல் அலுவலர் ஆயிஷா, ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெரியண்ணன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்.எல்.ஏ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நூலகம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் காவேரி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், நகர செயலாளர் காந்தி, அண்ணா தொழி ற்சங்க மண்டல தலைவர் சிவம், ஒன்றிய கவுன்சிலர் காவேரியம்மாள் மாணிக்கம், பேரூராட்சி கவுன்சிலர் இந்திராணி ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலை மேலும் சேதமடைவதற்குள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
- தரமாக சாலை அமைப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
அரூர்,
மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலை மேலும் சேதமடைவதற்குள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
தரமாக சாலை அமைப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தருமபுரி மாவட்டம், அரூர் நகரில் இருந்து சிட்லிங், நரிப்பள்ளி, கோட்டப் பட்டி, தீர்த்த மலை, பையர்நாயக்கன் பட்டி, செல்லம்பட்டி, வேப்பம்பட்டி, வேடகட்ட மடுவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையில் பயணித்து வருகின்றனர்.
குறிப்பாக கார்கள்,சிறிய ரக சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் இந்த சாலையில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் பல வருடங்களாக குண்டும், குழியுமாக இருந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. பலமுறை கோரிக்கை விடப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சிமெண்ட் சாலை அமைத்து 3 மாதங்களே ஆன நிலையில் தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது.
நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தரமில்லாமல் போடப்பட்டதால் குறைந்த காலத்திலேயே சேதமடைந்துள்ளது.
மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலை மேலும் சேதமடைவதற்குள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தரமாக சாலை அமைப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






