தருமபுரியில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி

பாதாள கிணற்றில் இரண்டு பைக் ஒரு கார் சுற்றி வளம் வரும் சாகசங்கள் பார்ப்பவர்களை உறைய வைக்கும் காட்சியாக உள்ளது.பொருட்காட்சியில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் பனி மலையில் பனி தூவுவது போன்ற காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.
தருமபுரியில்  லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி
Published on

தருமபுரி,

தருமபுரி வள்ளலார் மைதானத்தில் டிஜே அம்யூஸ்மென்ட் நிறுவனம் சார்பில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் பணி உலகம் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்த மாபெரும் பொருட் காட்சியினை கடந்த 24-ம் தேதி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தொடங்கி வைத்தார். டி.ஜே அம்யூனிஸ்ட்மென்ட் மேனேஜிங் டைரக்டர் தினேஷ் குமார் வரவேற்றார்.

பொருட்காட்சியில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் பனி மலையில் பனி தூவுவது போன்ற காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.

மேலும் பனி மழையில் பனிக்கரடி, பனிக்குதிரை, பனி சிறுத்தைகள், பனி நாய்கள், பெண்குயின், உள்ளிட்ட பறவை மற்றும் விலங்குகள் தத்ரூபமாக மக்களை கவர்ந்து இருந்தது.

மேலும் வீட்டு உபயோக பொருட்கள் ஊட்டி ட்ரை ப்ரூட்ஸ், மைசூர் கான்டிமெண்ட்ஸ், பெண்களுக்கான வளையல்கள், மாலைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பரிசு போட்டி, விளையாட்டுகள் குழந்தைகளுக்கான ரயில் பயணம், ராட்சத ராட்டினம், பாதாள கிணற்றில் இரண்டு பைக் ஒரு கார் சுற்றி வளம் வரும் சாகசங்கள் பார்ப்பவர்களை உறைய வைக்கும் காட்சியாக உள்ளது.

மேலும் ஊட்டி மிளகாய் பஜ்ஜி, டெல்லி அப்பளம், ஐஸ்கிரீம், போன்ற திண்பன்டங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட் காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதுக்களத்தை தூண்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இந்நிலையில் தினந்தோறும் லண்டன் பிரிட்ஜ் மற்றும் பனி உலக பொருட்காட்சியில் பார்வையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com