பள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாரண்ட்‌அள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
பள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி
Published on

மாரண்டஅள்ளி,

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாரண்ட்அள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு தொகையை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்டத் துணைச் செயலாளர் ராஜகுமாரி மணிவண்ணன், மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், கோபால் முனியப்பன், கிருஷ்ணன், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜெயா மற்றும் மாரண்டஅள்ளி பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், கவுன்சில ர்கள் சத்யா சிவகுமார், வெங்கடேசன், யதிந்தர், கார்த்திகேயன், ரீனா, கீதா, லட்சுமி, அபிராமி, சுகந்தி, மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com