என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன நூலகம்"

    • கூடலூா் நகரின் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மனு அளித்து முறையிட்டனா்.
    • நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்தை, கூடலூர் நகராட்சி கவுன்சிலர்கள் வெண்ணிலா சேகா், வா்கீஸ், சத்தியசீலன், ஆபிதா பேகம், தனலட்சுமி, ஏ.உஸ்மான் உள்ளிட்டோா் நேரில் சந்தித்து கூடலூா் நகரின் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மனு அளித்து முறையிட்டனா்.

    அதில், கூடலூரில் கடந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த தொடா் கனமழையால் நூலக கட்டிடம் இடிந்து யாரும் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது.

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் பயன்பாட்டுக்காகவும், போட்டித் தோ்வு எழுதும் இளைஞா்களின் நலனுக்காகவும் அந்த இடத்தில் வாகன நிறுத்தத்துடன் கூடிய நவீன நூலக கட்டிடம் கட்டித் தரவேண்டும்.

    நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இளைஞா்களின் நலனுக்காக அரசு கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள வெற்றிடத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.

    கூடலூா் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியின் மைதானத்தை சீரமைத்து மாணவா்களின் பயன்பா ட்டுக்கு விடவேண்டும்.

    கூடலூா் நகராட்சியில் மேலாளா், வருவாய் ஆய்வாளா் மற்றும் சுகாதார ஆய்வாளா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

    அனைத்து காலிப் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

    • ரூ.25 லட்சம் மதிப்பில் ஏசி வசதியுடன் கூடிய நவீன நூலகம் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்.எல்.ஏ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நூலகம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    காரிமங்கலம், 

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூ ராட்சியில் பாலக்கோடு ரோட்டில் ராஜ்யசபா எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் ஏசி வசதியுடன் கூடிய நவீன நூலகம் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.

    இதில் பேரூராட்சி தலைவர் மனோகரன், செயல் அலுவலர் ஆயிஷா, ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெரியண்ணன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்.எல்.ஏ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நூலகம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் காவேரி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், நகர செயலாளர் காந்தி, அண்ணா தொழி ற்சங்க மண்டல தலைவர் சிவம், ஒன்றிய கவுன்சிலர் காவேரியம்மாள் மாணிக்கம், பேரூராட்சி கவுன்சிலர் இந்திராணி ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×