மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.மனமுடைந்த காணப்பட்ட அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.
மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டி பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது56).

கூலித்தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே சவுளூப்பட்டியைச் சேர்ந்த லட்சுமி என்பவருடன் முதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் சேகர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சூர்யா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சேகருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வருவதால், கணவன்-மனைவிக்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அப்போது சேகர், தனது 2-வது மனைவி சூர்யாவை குடும்ப நடத்த அழைத்தார். அவர் வரமறுத்ததால், மனமுடைந்த காணப்பட்ட அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com