

பென்னாகரம்,
உலக போதை பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், பென்னாகரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள் போதை பொருள் தீமைகள் குறித்து பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் அம்பேத்கர் சிலை முதல் பேரணியாக பேருந்து நிலையம் கடைவீதி வழியாக காவல் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிகழ்வில் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிம் செல்வன், மூர்த்தி, முருகன் உள்ளிட்ட காவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.