என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனு அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
வீட்டு மனை பட்டா கேட்டு கிராம மக்கள் மனு
- ஆர்.டி.ஒ, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் 50-க்கும் மேற்பட்ட முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு மனைப்பட்டா வழங்கவேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் அத்திமரத்துப்பள்ளம், சக்கிலிநத்தம், ஈச்சம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த 100 -க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் தருமபுரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
3 தலைமுறைகளாக, சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக அத்திமரத்துப்பள்ளம், சக்கிலிநத்தம், ஈச்சம்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் தனது சொந்த செலவில் வீடுகட்டி வசித்து வருகிறோம் நாங்கள்
குடியிருக்கும் வீட்டிற்கு பஞ்சாயத்து வீட்டு வரி, மின்இனைப்பு கட்டண ரசீது,குடிநீர் இணைப்புக்கான ரசீது ஆகியை முறையாக செலுத்தி வருகின்றோம். விவசாய பணிகளுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம் கூலிவேலை செய்யும் நாங்கள் வேறு வீட்டுமனை வாங்க வசதி இல்லை. நீண்ட ஆண்டுகாலமாக வசிக்கும் எங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஒ, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் 50-க்கும் மேற்பட்ட முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
எனவே நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு மனைப்பட்டா வழங்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.






