என் மலர்
தர்மபுரி
- தனது பைக்கை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார்.
- ஆசையாக வாங்கிய பைக்கை ஏன் அடமானம் வைத்தாய், பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேட்டிருக்கலாம் தானே என கூறியுள்ளார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ரம்யா தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 1 மகள் 2 மகன்கள் உள்ளனர். முதல் மகன் வேல்முருகன் (வயது 20) கார் டிரைவாக வேலை பார்த்து வந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் புதியதாக விலை உயர்ந்த மோட்டார் பைக் வாங்கினார்.
இந்நிலையில் தனது பைக்கை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். கடந்த 20-ம் தேதி வேல்முருகனின் தந்தைக்கு பைக் அடமானம் வைத்து கடன் வாங்கியது தெரிய வந்தது.
மகனிடம் ஆசையாக வாங்கிய பைக்கை ஏன் அடமானம் வைத்தாய், பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேட்டிருக்கலாம் தானே என கூறியுள்ளார்.
இதனால் வேதனையடைந்த வேல்முருகன் அன்றிரவு எலி பேஸ்ட் தின்று மயக்கமடைந்தார். இதனை கண்ட குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சையில் இருந்தவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் ஓய்வூதிய பணப்பன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
- இறந்த பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நியமனம் உத்தரவுகளை வழங்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு அகவிலைப்படி உயர்வு மீட்புகுழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் தமிழக முதல்-அமைச்சர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தேர்தல் பரப்புரையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நவம்பர் 2015 முதல் நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வினை தி.மு.க ஆட்சிக்கு வந்த நூறு நாளில் வழங்கப்படும் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்ற வேண்டும்.
ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வுகால பணப்பலன்களை வழங்க வேண்டும்.
அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தினை அமல் படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை அரசு கருவூலம் வழியாக அரசே வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்றவர்களுக்கு ஊதிய ஒப்பந்த பணப்பலன்களை ஓய்வூதியத்தில் உயர்த்தி வழங்க வேண்டும்.
ஜனவரி 2023 வரை பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் விஆர்எஸ் பெற்ற அனைவருக்கும் மற்றும் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் ஓய்வூதிய பணப்பன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
இறந்த பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நியமனம் உத்தரவுகளை வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா விட்டால் சென்னையில் மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் 90 மாதம் நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் அரசு அறிவிக்கும் வரை காலவரையின்றி போராட்டத்தை நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய படிவத்தை நிறைவு செய்து போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அவர்களிடம் கொடுத்திட வேண்டும்.
- கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துக் கொண்டு பயன்பெறலாம்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2022-2023-ஆம் ஆண்டில் 11, 12-ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
11, 12-ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 04.07.2023 அன்று தருமபுரி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 5.7.2023 அன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியிலும் நடைபெறவுள்ளன.
கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு தலா முதல் பரிசாக ரூ.10000- இரண்டாம் பரிசாக ரூ.7000- மூன்றாம் பரிசாக ரூ.5000- என வழங்கப்படும்.
ஒரு பள்ளி, கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று மாணவர்களை மட்டும் தெரிவு செய்து உரிய படிவத்துடன் மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9.00 மணிக்குள் வருகையைப் பதிவு செய்திடல் வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய படிவத்தை நிறைவு செய்து போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அவர்களிடம் கொடுத்திடல் வேண்டும்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்கள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், மருத்துவக் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துக் கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சாந்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- சுமார் 13 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
- பின்னர் அருகில் உள்ள ஒட்டப்பட்டி காப்பு காட்டில் விட்டனர்.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் அடர்ந்த மலைகள் மற்றும் காடுகள் சூழ்ந்த பகுதியாகும். இதனால் வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று புதுப்பேட்டை நகர் கவுஸ் பின்புறம் சுமார் 13 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து உடனடியாக ஒகேனக்கல் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார் தலைமையில் வனவர் மணிவண்ணன், வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 13 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாபமாக பிடித்தனர்.
பின்னர் அருகில் உள்ள ஒட்டப்பட்டி காப்பு காட்டில் விட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்யும் கடைகளை காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
- தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு த்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தா லோசிக்கப்பட்டது.
ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது.
தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகள் உபயோகம் மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்யும் கடைகளை காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்கள். Eat Right Challenge (ERC) Activity குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் அசைவ உணவு தயாரிக்கும் அனைத்து உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் அயோடின் விழிப்புணர்வு உடன், உணவு பொருட்கள், திண்பண்டங்கள் லேபிள்களில் (தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி) குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சாந்தி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் கடைகளில் அயோடின் கலந்த உப்புகளை விற்பனை செய்வது குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகர வர்த்தகர் சங்கம், நுகர்வோர் சங்கம், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வீட்டில் விற்பனை க்காக வைத்திருந்த சுமார் 150 மேற்பட்ட அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- விசாரணை மேற்கொண்ட தில் விசாரணையில் ரவி மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 35) என்பது தெரிய வந்தது.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதிக்கு ட்பட்ட ராஜீவ் நகரில் கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்கள் பதுக்கி விற்பதாக பென்னாகரம் காவல்துறை கண்கா ணிப்பாளர் மகாலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவர் உத்தரவின் பேரில் பென்னாகரம் காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வன் தலை மையில் 5 பேர் கொண்ட காவல் துறையினர் விரைந்து சென்று அரசு மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை கையும் களவுமாக பிடித்தனர்.
காவல்துறை வருவதை அறிந்து 2 பேர் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை காவல்துறையினர் பிடித்து அவரது வீட்டில் விற்பனை க்காக வைத்திருந்த சுமார் 150 மேற்பட்ட அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பென்னாகரம் போலீசார் விசாரணை மேற்கொண்ட தில் விசாரணையில் ரவி மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 35) என்பது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் தப்பி ஓடிய தலைமறைவான கமலஹாசன் மகன் ரவி (வயது 40), மாது மனைவி மகேஸ்வரி (41) ஆகிய 2 பேரையும் பென்னாகரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- இரவில் வருகின்ற வாகனங்களில் போக்குவரத்து விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என சோதனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தமிழக முழுவதும் ஆப்ரேஷன் ஸ்டோமிங் என இரவு முழுவதும் வரும் வாகனங்களை காவல் துறையினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் வாகனங்களில் ஏதேனும் தடை செய்ய ப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகி ன்றனவா? மேலும் ஆயுதங்களை குற்ற சம்பவங்களை செய்வதற்கு பயன்படுத்துவதற்காக யாரேனும் எடுத்துச் செல்கிறார்களா? அதேபோல் இரவில் வருகின்ற வாகனங்களில் போக்குவரத்து விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? ஓட்டுநர் உரிமம், மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுதல் போன்றவை குறித்தும் சோதனை நடத்தினர்.
அதேபோல் இரவு நேர வாகனங்களில் வருபவர்கள் ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வழக்கில் சிக்கி இருக்கிறவரா உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலும் காவல் துறையினர் நேற்று இரவு முதல் விடிய விடிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் தீவிர சோதனையை நடத்தினர்.
- எதிரே பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியது.
- தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சின்னசாமி பலியானார்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள திப்பட்டிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது53). இவர் கோயம்புத்தூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று சொந்த ஊரான திப்பட்டிபள்ளம் வந்தார். நேற்று மாலை உறவினரின் துக்கி நிகழ்ச்சிக்காக சின்னசாமி திப்பட்டிபள்ளம் கிராமத்தில் இருந்து பென்னாகரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது எதிரே பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சின்னசாமி பலியானார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டமான உயர்கல்விக்கான விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் நடத்தப்படும்.
- தற்போதைய தொழில்நுட்பக்காலத்தில் செல்போன்களின் பாதகங்களை தவிர்த்து அதில் உள்ள சாதகமான விஷயங்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூரில் நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் உயர்வுக்கு படி எனும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டமான உயர்கல்விக்கான விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் நடத்தப்படும்.
இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்திடவும் செயல்படுத்த ப்பட்டு வருகின்றது.
தற்போதைய தொழில்நுட்பக்காலத்தில் செல்போன்களின் பாதகங்களை தவிர்த்து அதில் உள்ள சாதகமான விஷயங்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
இதில் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) கவுரி சங்கர், வட்டாட்சியர் பெருமாள் மற்றும் தொடர்புடைய துறைச் சார்ந்த அலுவலர்கள், ஆசிரியா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கண்டக்டர்களுக்கு பணியின் போது பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டியது எப்படி? என்பது குறித்து கூறப்பட்டது.
- மனச்சுமை இல்லாமல் பணியாற்றுவது எப்படி? குறித்து விளக்கப்பட்டது.
தருமபுரி,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பணியாளர்களு க்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கலந்தாய்வுக் கூட்டம் தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள மண்டல தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த பயிற்சி கலந்தாய்வு கூட்டத்தை அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.
பொது மேலாளர் ரவிலட்சுமணன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு பணியின் போது பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டியது எப்படி? என்பது குறித்தும், மனச்சுமை இல்லாமல் பணியாற்றுவது எப்படி? என்பது குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி கூட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர்கள் ராஜராஜன், கலைவாணன், கோட்ட மேலாளர் அரவிந்தன், உதவி மேலாளர் ஹர்ஷபாபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அவரது மனைவி தனது கணவரின் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக தெரிவித்தார்.
- விடிய, விடிய செந்தில்குமாரின் உடலில் உள்ள உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி அருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது45). தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஸ்ரீ நிகேஷ் (14), கவின் நிலவன் (8), இரண்டு மகன்களும் உள்ளனர்.
செந்தில்குமார் கடந்த புதன்கிழமை பள்ளி முடித்து விட்டு மாலை வீட்டிற்கு வந்த போது விபத்தில் இருசக்கர வாகன மோதி படுகாயம் அடைந்துள்ளார்.
அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மருத்துவர்கள் செந்தில்குமார் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவர் உறவினர்களிடம் உடல் உறுப்புகள் தானம் குறித்து தெரிவித்தனர். இதனால் அவரது மனைவி தனது கணவரின் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக மருத்துவ குழுவினர் நேற்று இரவு 9 மணி முதல் இன்று விடியற்காலை இரண்டு மணி வரை விடிய, விடிய செந்தில்குமாரின் உடலில் நல்ல நிலையில் உள்ள இருதயம், நுரையீரல், லிவர், கிட்னி, கணையம், கண் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
கண் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து மனைவி விஜயலட்சுமி கூறும் போது என் கணவர் தான் எங்களுடைய வாழ்க்கை என்று இருந்தோம். அவர் இல்லாத இந்த வாழ்க்கையை நானும் என் இரண்டு பிள்ளைகளும் எப்படி வாழ்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். இதனால் தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு வேலை ஒன்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
- தடை செய்யப்பட்ட ஆன்ஸ் 48 பாக்கெட்டுகள், பாக்கு 100 பாக்கெட்டுகள், பான் மசாலா 176 பாக்கெட்டுகள், கூல் பைப் 134 பாக்கெட் என மொத்தம் 546 பாக்கெட்டுகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டனர்.
- போலீசார் கையும் காலுமாக பிடிபட்டவுடன் போலீசார் அவரை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பாப்பிரெட்டிபட்டி,
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஏசு பாதம் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்யும் பணியில் அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் பேரில் பொம்மிடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள துரிஞ்சிப்பட்டி, பள்ளிப்பட்டி, முத்தம்பட்டி, சுங்கர ஹள்ளி, வேப்பிலைப்பட்டி மற்றும் மலை கிராமங்கள் என 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கு பொம்மிடியில் உள்ள பெரிய மளிகை கடைகள் சிலவற்றிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒட்டுமொத்த விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் பொம்மிடி காவல் ஆய்வாளர் பொறுப்பு நாகலட்சுமி உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான போலீசார் பொம்மிடி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை குறித்து ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது பொம்மிடி ரயில் நிலையத்திற்கு முன்பு உள்ள பாலசுப்பிரமணியன் மளிகை கடை அருகில் அதன் உரிமையாளர் விஸ்வநாதன் (வயது 45) இருசக்கர வாகனத்தில் வெள்ளை பையில் மூட்டையை வைத்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வருவதை கண்டனர்.
வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் 48 பாக்கெட்டுகள், பாக்கு 100 பாக்கெட்டுகள், பான் மசாலா 176 பாக்கெட்டுகள், கூல் பைப் 134 பாக்கெட் என மொத்தம் 546 பாக்கெட்டுகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் மளிகை கடை உரிமையாளர் விஸ்வநாதனை போலீசார் கையும் காலுமாக பிடிபட்டவுடன் போலீசார் அவரை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஒட்டுமொத்த கொள்முதல் மளிகை உரிமையாளர் விஸ்வநாதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பொம்மிடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஒட்டுமொத்த கடைகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு பொருட்களை பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






