என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு;  பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
    X

    பிடித்த மலைபாம்பை வனப்பகுதியில் வனத்துறையினர் விட்ட போது எடுத்தபடம்.

    ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு; பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

    • சுமார் 13 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • பின்னர் அருகில் உள்ள ஒட்டப்பட்டி காப்பு காட்டில் விட்டனர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் அடர்ந்த மலைகள் மற்றும் காடுகள் சூழ்ந்த பகுதியாகும். இதனால் வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று புதுப்பேட்டை நகர் கவுஸ் பின்புறம் சுமார் 13 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இது குறித்து உடனடியாக ஒகேனக்கல் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார் தலைமையில் வனவர் மணிவண்ணன், வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 13 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாபமாக பிடித்தனர்.

    பின்னர் அருகில் உள்ள ஒட்டப்பட்டி காப்பு காட்டில் விட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×