உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக சென்ற போது விபத்து: சரக்கு வாகனம் மோதி கட்டிட மேஸ்திரி பலி

எதிரே பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியது.தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சின்னசாமி பலியானார்.
விபத்தில் சிக்கிய சரக்குவாகனம்-இருசக்கர வாகனத்தை படத்தில் காணலாம்.
விபத்தில் சிக்கிய சரக்குவாகனம்-இருசக்கர வாகனத்தை படத்தில் காணலாம்.
Published on

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள திப்பட்டிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது53). இவர் கோயம்புத்தூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று சொந்த ஊரான திப்பட்டிபள்ளம் வந்தார். நேற்று மாலை உறவினரின் துக்கி நிகழ்ச்சிக்காக சின்னசாமி திப்பட்டிபள்ளம் கிராமத்தில் இருந்து பென்னாகரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது எதிரே பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சின்னசாமி பலியானார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com