என் மலர்
தர்மபுரி
- ஒகேனக்கல் சின்ன ஆஞ்சநேயர் கோவில் சாலையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் பிணமாக கிடந்தார்.
- ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் காவல் உதவி ஆய்வா ளர்கள் நேரில் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சின்ன ஆஞ்சநேயர் கோவில் சாலையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் பிணமாக கிடந்தார்.
இதனை அடுத்து ஒகேனக்கல் வனத்துறை யினர் அளித்த புகாரின் பேரில் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் காவல் உதவி ஆய்வா ளர்கள் நேரில் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
இதில் 60 வயது மதிக்கத்தக்க நபர் என்றும், அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும், இறந்தவர் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உடையவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து அடை யாளம் தெரியாத தூக்கிட்டு இறந்த நபரை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுதந்திர தின விழா தருமபுரி முன்னாள் படை வீரர்கள் நல உதவி மையத்தில் நடந்தது.
- அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல சங்கம் மற்றும் தமிழக ஒருங்கிணைந்த பட்டாளம் சார்பில் சுதந்திர தின விழா தருமபுரி முன்னாள் படை வீரர்கள் நல உதவி மையத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி வைத்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழாவில், லெப்டினன்ட் கர்னல் சேரன் செங்குட்டுவன், கவுரவ தலைவர் உமாபதி, மாவட்ட தலைவர் நரசிம்மன், செயலாளர் புகழேந்தி, தமிழக ஒருங்கிணைந்த பட்டாள அமைப்பின் மாநில செயலாளர் வையாபுரி, செயற்குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், சேகரன், சோமசுந்தரம், முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உடல்கள் அடக்கம் செய்யப்படாத இடத்தில் அடக்கம் செய்து கொள்ளுங்கள் என காசி உறவினர்களிடம் கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- மீண்டும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுடுகாட்டு நிலம் மீட்கப்படும் என அதி–காரிகள் தெரிவித்ததை அடுத்து இறந்த காசியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
பாப்பிரெட்டிப்பட்டி,ஆக.16-
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி.துறிஞ்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் காசி (வயது65). இவர் உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். இவரது உடலுக்கு உறவினர்கள் பல்வேறு சடங்குகளை செய்து முடித்த பின்பு உடலை அடக்கம் செய்ய பி.துறிஞ்சிப்பட்டியில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.
சுடுகாட்டிற்கு அருகே வசித்து வரும் மக்கள் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய கூடாது என கூறினர்.
2.45 ஏக்கர் இடம் கொண்ட சுடுகாட்டை அருகில் உள்ள சில நில உரிமையாளர்கள் 2.30 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பை மீட்டு உடல்கள் அடக்கம் செய்யப்படாத இடத்தில் அடக்கம் செய்து கொள்ளுங்கள் என காசி உறவினர்களிடம் கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் முருகன், பொம்மிடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி மற்றும் வருவாய் துறையினர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலை யில் இறந்த காசியின் உடல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் அடக்கம் செய்ய முடியாமல் தவித்த னர்.
அப்பகுதி மக்களிடையே மீண்டும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுடுகாட்டு நிலம் மீட்கப்படும் என அதி–காரிகள் தெரிவித்ததை அடுத்து இறந்த காசியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
- 40 பேருக்கு அவரது சேவையினை பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
- மருத்துவர் கனிமொழிக்கு மருத்துவ சேவையினை பாராட்டி கலெக்டர் சாந்தி நற்சான்றிதழை வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த விழாவில் தருமபுரி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை சார்பில் சிறப்பாக மருத்துவ சேவை செய்த மருத்து வர்கள்,செவிலியர்கள், மருந்தாளுநர்கள், எக்ஸ்ரே டெக்னீசியன்கள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், முதல் -அமைச்சரின் விரிவான பாதுகாப்பு திட்ட மருத்துவர்கள் என மொத்தம் 40 பேருக்கு அவரது சேவையினை பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
அந்த வகையில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கேடயமும், அதே மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வரும் மருத்துவர் கனிமொழிக்கு மருத்துவ சேவையினை பாராட்டி கலெக்டர் சாந்தி நற்சான்றிதழை வழங்கினார்.
- கடந்த 2 தினங்களுக்கு முன்பு அணைகளில் 14 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது.
- சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
தருமபுரி:
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அணைகளில் 14 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இதனால் உடனடியாக பரிசல்களை கரைக்கு கொண்டு வந்தனர். பரிசல் இயக்க தடை விதிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- ரூ.10 லட்சம் பணத்தை மட்டும் பவுன்ராஜ், பார்வதியிடம் திருப்பி கொடுத்து உள்ளார்.
- மீதி பணத்தை திருப்பி தருமாறு அவரிடம் பார்வதி கேட்ட போது, தரு கிறேன் என்று ஏமாற்றி வந்ததாக தெரிகிறது/
தருமபுரி,
தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு பார்வதி (வயது83) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வடிவேல் கடந்த 2017-ம் ஆண்டு இறந்து விட்டார். இந்த நிலையில் பார்வதி தனது மகன் சுகுமாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வடிவேலுக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதற்காக இழப்பீடு தொகையாக வடிவேலுக்கு ரூ.75 லட்சம் கொடுக்கப்பட்டது. அந்த பணத்தை பார்வதி வங்கியில் டெபாசிட் செய்து வைத்திருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வடிவேலின் தங்கை மகனும், தொழில் அதிபரான பவுன்ராஜ் என்பவர் பார்வதியிடம் வந்து வங்கியில் உள்ள பணத்திற்கு தான் அதிக வட்டி தருவதாகவும், அந்த பணத்தை தன்னிடம் கொடுக்குமாறு கூறினார். அவரது ஆசைவார்த்தையை நம்பி பார்வதி, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.36 லட்சமும், தனது கணவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.31 லட்சமும் என மொத்தம் ரூ.67 லட்சத்தை எடுத்து பவுன் ராஜிடம் கொடுத்து உள்ளார்.
ஆனால், அவர் வட்டியும் தரவில்லை, அசலும் திருப்பி தரவில்லை. இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ரூ.10 லட்சம் பணத்தை மட்டும் பவுன்ராஜ், பார்வதியிடம் திருப்பி கொடுத்து உள்ளார். மீதி பணத்தை திருப்பி தருமாறு அவரிடம் பார்வதி கேட்ட போது, தருகிறேன் என்று ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பார்வதி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அங்காடிக்கு நேற்று 2,294 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன.
- மொத்தம் ரூ.11 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று 2,294 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிக பட்சமாக ரூ.607-க்கும், குறைந்தபட்சமாக ரூ.258-க்கும், சராசரியாக ரூ.480.70-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
- மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு ஊசி போட்ட போலி டாக்டர் முனியம்மாள் என்பவர் என்பது தெரிந்தது.
- மருத்துவ அலுவலர் அருண் அ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அருண், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி மற்றும் மருந்துகள் ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய போலி மருத்துவர் தடுப்பாய்வு குழுவினர் நேற்று அ.பள்ளிப்பட்டியில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கிளினிக்கில் சோதனை செய்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் (வயது 36) என்பவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு ஊசி போட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவர் போலி டாக்டர் என்பது தெரிந்தது.
இதையடுத்து கிளினிக்கில் இருந்து ஆங்கில மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து மருத்துவ அலுவலர் அருண்
அ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ்
சப்-இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் முனியம்மாளை கைது செய்தார்.
- தருமபுரி பகுதியில் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள 2 தங்கும் விடுதிகளில் தருமபுரி டவுன் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
- அந்த விடுதிகளில் அதிக சம்பளம் தருவதாக கூறி சில பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் போலீசார் தருமபுரி ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு கடை முன்பு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த சேலம், திருச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பெண்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் கூலி வேலை செய்து வந்ததாகவும், நல்ல சம்பளத்தில் வேலை தருவதாக தினேஷ் (வயது25) என்பவர் கூறியதால் இங்கு வந்ததாகவும் கூறினார்கள்.
இதுதொடர்பாக கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த தினேசை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்களை அவர் விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர். இதேபோல் தருமபுரி பகுதியில் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள 2 தங்கும் விடுதிகளில் தருமபுரி டவுன் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த விடுதிகளில் அதிக சம்பளம் தருவதாக கூறி சில பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக விடுதி மேலாளர்கள் மணிவண்ணன் (43), கோபால் (32), உடந்தையாக செயல்பட்ட செந்தில் (40), சிலம்பரசன் (29), வீராசாமி (42) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- இந்த திருவிழாவின் போது சாலையில் வண்ண அலங்கார விளக்குகள் பொறுத்தப்படும்.
- இதனை பொறுத்துக்கொள்ளாத மாற்று சமூகத்தினர் சாலையில் வண்ண அலங்கார விளக்குகள் போடக்கூடாது என மிரட்டி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மங்களக் கொட்டாய் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வே.முத்தம்பட்டி ஊராட்சிக்குபட்டது. மங்களக்கொட்டாய் காலனி. இங்கு 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம். இங்கு வருடத்திற்கு ஒரு முறை கோவில் திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த திருவிழாவின் போது சாலையில் வண்ண அலங்கார விளக்குகள் பொறுத்தப்படும்.
இதனை பொறுத்துக்கொள்ளாத மாற்று சமூகத்தினர் சாலையில் வண்ண அலங்கார விளக்குகள் போடக்கூடாது என மிரட்டி வருகின்றனர்.
எனவே மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 369 மனுக்கள் பெறப்பெற்றன.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 369 மனுக்கள் பெறப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிடப்பட்டுள்ளார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் கொரோனா தொற்று நோய் தடுப்புப் பணியின் போது கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை முன்னிட்டு, அவரது வாரிசுதாரரும் மனைவியுமான திருமதி எம்.பார்வதி என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) ஜெயக்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குருராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்க ளுக்கு பாராட்டு சான்றி தழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
- 29 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான அரசு நல திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நடந்தது.
விழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
புறாக்களை பறக்க விட்டார். பின்னர் அவர் திறந்த வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் கலெக்டர் வானில் வெண் புறாக்களை பறக்க விட்டார்.
தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
நல திட்ட உதவி:
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 50 ஆயிரம் மதிப்பில் 2 பேருக்கும், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 3 பேருக்கு பதக்கமும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) சார்பில் ரூ.5 லட்சத்து 98 ஆயிரத்து 806 மதிப்பில் 2 பேருக்கும், வருவாய்த்துறை சார்பில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 5 பேருக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்பில் 3 பேருக்கும், தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் ரூ.3 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் 5 பேருக்கும் என பல்வேறு அரசு துறைகள் சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான அரசு நல திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு வண்ண மிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.






