அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு

ஒகேனக்கல் சின்ன ஆஞ்சநேயர் கோவில் சாலையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் பிணமாக கிடந்தார்.ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் காவல் உதவி ஆய்வா ளர்கள் நேரில் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு
Published on

ஒகேனக்கல்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சின்ன ஆஞ்சநேயர் கோவில் சாலையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் பிணமாக கிடந்தார்.

இதனை அடுத்து ஒகேனக்கல் வனத்துறை யினர் அளித்த புகாரின் பேரில் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் காவல் உதவி ஆய்வா ளர்கள் நேரில் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

இதில் 60 வயது மதிக்கத்தக்க நபர் என்றும், அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும், இறந்தவர் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உடையவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து அடை யாளம் தெரியாத தூக்கிட்டு இறந்த நபரை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com