search icon
என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    தருமபுரியில் சுதந்திர தின விழா:  ரூ.94.68 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
    X

    தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் சாந்தி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய காட்சி. அருகில் மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளார்.

    தருமபுரியில் சுதந்திர தின விழா: ரூ.94.68 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

    • தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்க ளுக்கு பாராட்டு சான்றி தழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
    • 29 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான அரசு நல திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நடந்தது.

    விழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

    புறாக்களை பறக்க விட்டார். பின்னர் அவர் திறந்த வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் கலெக்டர் வானில் வெண் புறாக்களை பறக்க விட்டார்.

    தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

    நல திட்ட உதவி:

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 50 ஆயிரம் மதிப்பில் 2 பேருக்கும், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 3 பேருக்கு பதக்கமும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) சார்பில் ரூ.5 லட்சத்து 98 ஆயிரத்து 806 மதிப்பில் 2 பேருக்கும், வருவாய்த்துறை சார்பில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 5 பேருக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்பில் 3 பேருக்கும், தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் ரூ.3 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் 5 பேருக்கும் என பல்வேறு அரசு துறைகள் சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான அரசு நல திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு வண்ண மிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×