என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் பணியின் போது கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
தருமபுரி குறைதீர்க்கும் முகாமில் 369 மனுக்கள் பெறப்பட்டன
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 369 மனுக்கள் பெறப்பெற்றன.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 369 மனுக்கள் பெறப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிடப்பட்டுள்ளார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் கொரோனா தொற்று நோய் தடுப்புப் பணியின் போது கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை முன்னிட்டு, அவரது வாரிசுதாரரும் மனைவியுமான திருமதி எம்.பார்வதி என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) ஜெயக்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குருராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






