என் மலர்
தர்மபுரி
- மாடுகள், எருமை மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- நேற்றைய சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை வார சந்தை நடைபெற்று வருகிறது.
இச்சந்தைககு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டைகளை வாங்க வருகின்றனர்.
நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடுகள் ரூ. 8,500 முதல் ரூ. 37,000 வரையும், ஆடுகள் ரூ.6,000 முதல் ரூ.10,300 வரையும், ஆக மொத்தம் நேற்றைய சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- தற்போது உள்ள பள்ளி முதல்வர் பாகுபாடு பார்த்து செயல்படுவதாக வும், ஆசிரியைகளை பழிவாங்குவதாகவும், கூறப்படுகிறது.
- விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பள்ளிக்கு வழங்கிய நிதியில் ரூ. 1 கோடி அளவில் முறைகேடு செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தினுள் செயல்பட்டு வரும் ஆங்கில பள்ளியானது, சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை தொழிலாளர்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட 40 வருட பழமையான பள்ளியாகும்.
நல்ல நிலையில் இயங்கி கொண்டிருந்த இப்பள்ளியானது சமீப காலமாக கல்வி தரம் குறைந்ததால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இப்படியே சென்றால் பள்ளியை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்படும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது உள்ள பள்ளி முதல்வர் பாகுபாடு பார்த்து செயல்படுவதாகவும், ஆசிரியைகளை பழிவாங்குவதாகவும், கூறப்படுகிறது.
மேலும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பள்ளிக்கு வழங்கிய நிதியில் ரூ. 1 கோடி அளவில் முறைகேடு செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர்.
எனவே உடனடியாக பள்ளி முதல்வரை பணி நீக்கம் செய்துவிட்டு அதே பள்ளியில் பணிபுரியும் அனுபவமும், தகுதியும் வாய்ந்த ஒருவரை பள்ளி முதல்வராக நியமனம் செய்ய வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு கரும்பு அலுவலர் மற்றும் பள்ளி தாளாளர் கதிரவரனிடம் புகார் அளித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டி ருந்த கண்காட்சி அரங்கு களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
- 3 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகள் என மொத்தம் 126 பயனாளிகளுக்கு ரூ. 80,27,622 மதிப்பிலான பல்வேறு அரசு நல திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கோணங்கி அள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
முகாமில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 4 பயனாளிக்கு பட்டா மாறுதலையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.24.45 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், இந்திராகாந்தி தேசிய முதியோர்கள், தற்காலிக இயலாதோர்கள், திருமணம் மற்றும் இயற்கை மரண உதவித்தொகைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 32 பயனாளிகளுக்கு ரூ.19.20 லட்சம் மதிப்பீட்டில் இ-பட்டாகளையும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.14.40 லட்சம் மதிப்பீட்டில் இ-பட்டாகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1.34 இலட்சம் மதிப்பீட்டில் விசை தெளிப்பான், துவரை நாற்றுகள், சொட்டுநீர் பாசன கருவி உள்ளிட்ட வேளாண் உதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.85,000 மதிப்பீட்டில் பவர் டிரில்லர் கருவிகளையும், தோட்டகலைத் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசன கருவிகளையும், தக்காளி, மிளகாய், கொய்யா நாற்றுகளையும் வழங்கினார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 25 விவசாயிகளுக்கு ரூ.12.91 லட்சம் கடன் உதவிகளைவும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.72 இலட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரணம், திருமண உதவி, ஒய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகைகளையும், மகளிர் திட்டம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகள் என மொத்தம் 126 பயனாளிகளுக்கு ரூ. 80,27,622 மதிப்பிலான பல்வேறு அரசு நல திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
முகாமில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் டி.கே.கீதாராணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரஸ்வதி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் ராஜேஸ்வரி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தனலட்சுமி, கோணங்கிஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் அலமேலு, கோணங்கிஅள்ளி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரிய கருப்பசாமிக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழிகள் பலியிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
- குதிரை வாகனத்தில் வந்த பூசாரி கத்தி மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள பெரிய கருப்பசாமி கோவிலில் ஆடி அமாவாசையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விழாவில் கும்பளபாடி குண்டத்து மாரியம்மன், செல்லியம்மன் மற்றும் நடப்பண அள்ளிமுத்து மாரியம்மன், ஊர் மாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அழைப்பின்போது பெண்கள் மாவிளக்கு ஊர்வலம் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து பெரிய கருப்பசாமிக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழிகள் பலியிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னர் மிளகாய் யாகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் வந்த பூசாரி கத்தி மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
மேலும் பக்தர்கள் குடும்பங்களில் தீ வினைகள் அகலவும், துன்பம் தீரவும் வெற்றுடலில் இடுப்பில் ஒரு வேட்டியை மட்டும் கட்டி கொண்டு, கரைத்து வைக்கப்பட்டிருந்த 108 கிலோ மிளகாய் கூட்டு கரைசலில் பூசாரி கோவிந்தன் குளித்து பக்தர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் கருப்ப சாமியிடம் வேண்டி வினோத வழிபாடு செய்தார்.
இந்த வினோத வழிபாடு கோவிலுக்கு வந்த பக்தர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிளகாய் கூட்டு கரைசல் வழிபாடு மற்றும் மிளகாய் யாகத்திற்காக அனைவரும் மிளகாய் கொண்டு வந்து கோவிலில் வழங்கி வேண்டுதல்கள் நிறைவேற கருப்பசாமியை வழிபட்டு சென்றனர்.
- பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஒகேனக்கல்:
கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இந்த இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரத்து 473 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதையடுத்து இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரித்து வந்தது.
நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 2-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- பந்தல் விழுந்த விபத்தில் 3 வகுப்பு படிக்கும் ரக்க்ஷா என்ற குழந்தையின் தலைமீது இரும்பு பைப் விழுந்தது.
- குழந்தையை மீட்டு கடத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு தையல் போடப்பட்டது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள திண்டாலனூர் பொம்மிடி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் போது பந்தல் விழுந்த விபத்தில் 3 வகுப்பு படிக்கும் ரக்க்ஷா என்ற குழந்தையின் தலைமீது இரும்பு பைப் விழுந்தது.
இதில் மண்டையில் ரத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்திய நிலையில் குழந்தையை மீட்டு கடத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு தையல் போடப்பட்டது.
பின்பு தருமபுரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கபட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் . சுதந்திர தினவிழாவில் நடந்த இந்த சம்பவம் அதிர்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
- தருமபுரியில் முன்னாள் படை வீரர் களுக்கென மருத்துவ மனைக்கான இடம் வேண்டும்.
- முன்னாள் படை வீரர்கள் தங்கி ஓய்வெடுக்க தங்கும் விடுதி வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி அடுத்த உங்கரான அள்ளி கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு கேப்டன் நாகராஜன் தலைமை தாங்கினார். சங்க துணை செயலாளர் மாதன், முருகன், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்புரை வழங்கினார். வேப்பாடி ஆறுமுகம் கருத்துரை வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக, முன்னாள் பிரிகேடியர் சிவராமன் கலந்து கொண்டு பேசுகை யில் முன்னாள் ராணுவ வீரர்கள் எப்படி யெல்லாம் இருக்க வேண்டும்.
இந்திய நாட்டின் ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபட வேண்டும். இந்தியாவை இன்னும் வலிமையான இந்தியாவாக மாற்றிட இளைஞர்கள் முன் வர வேண்டும்.
நாட்டில் பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் கூட ஒரே தேசம் என ஒற்று மையுடன் இருக்க வேண்டும் என பேசினார்.
விழாவின் தருமபுரியில் முன்னாள் படை வீரர் களுக்கென மருத்துவ மனைக்கான இடம் வேண்டும். இதே போல ராணுவ கேன்டீ னுக்கு சொந்த இடம் வழங்க வேண்டும்.முன்னாள் படை வீரர்கள் தங்கி ஓய்வெடுக்க தங்கும் விடுதி வேண்டும் என முன்னாள் படை வீரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் கோரி க்கைகள் வைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் தரை, கப்பல் மற்றும் வான் படை வீரர்கள் சங்கம் சார்பில் செய்யப்பட்டி ருந்தது. விழா முடிவில் கேப்டன் நாகராஜன் நன்றி தெரிவித்தார்.
- கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்திட வேண்டும்.
- நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க ஊராட்சி முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள், ஒரு லட்சம் பனை விதைகள், நடவு செய்திட வேண்டும்
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் எர்ரபையன அள்ளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் நேற்று கிராமசபை கூட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட 42 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பழ தோட்டத்தில் நடைபெற்றது.
இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு தீர்மா னங்களாக ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து நீர் நிலைகளையும் முழுமையாக புனரமைத்து அடுத்த ஆண்டிற்குள் மழை நீர் முழுவதையும் ஏரிகளில் தேக்கியும், புதிய நீர் நிலைகளை அமைத்தும், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்தும் பணிகளை முடிப்பதாகவும், அதன் மூலம் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்திட வேண்டும்.
அது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க ஊராட்சி முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள், ஒரு லட்சம் பனை விதைகள், நடவு செய்திட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 42 ஏக்கர் பரப்பள வில் அமைக்க பட்ட பழத்தோட்டத்தை தொடர் பராமரிப்பு மூலம் பலன் தரும் பத்தாயிரம் மரக்கன்று களையும் பராமரித்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட வேண்டும்.
அதேபோல் எர்ர பையனஹள்ளி ஊராட்சி முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத தூய்மை யான பசுமையான கிராம மாக மாற்றுவதே இலக்கு என்பதையும் பொதுமக்கள் ஆதரவுடன் செயல்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பழ தோட்டம் பகுதியில் புதிதாக சீரமைக்கபட்ட ஏரி கரை பகுதியில் 100 நாள் திட்ட பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் மரக்கன்று களை நட்டு வைத்தனர்.
மேலும் அக்கிராமத்தில் அம்ருத் மஹோத்சவ் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் உள்ளி ட்டோருக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் வழங்கினார்.
இதில் ஊராட்சி துணைத் தலைவர் ரஞ்சித் குமார், செயலாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், வார்டு உறுப்பி னர்கள், ஊராட்சியை சேர்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அனைத்து திட்ட பணியாளர்கள் எர்ரபையனஹள்ளி ஊராட்சியை சேர்ந்த இளைஞ ர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஒசல்லி பஞ்சாயத்து பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் போசி நாயக்கனஅல்லி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
- ஒசஅல்லி, வேடியூர், போசினா யக்கனஅள்ளி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஒசல்லி பஞ்சாயத்து பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் போசி நாயக்கனஅல்லி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஒசஅல்லி, வேடியூர், போசினா யக்கனஅள்ளி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இந்த பகுதி யில் உள்ள பொது மக்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் கடத்தூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், மாணவர்கள் பாதிக்கும் வகையில் தருமபுரி -கடத்தூர் மெயின் ரோட்டில் உள்ளஅரசு டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் முனைவர் ஆறுமுகம் தலைமையில் பொதுமக்கள் பெண்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
- எம்.கே. நகர் கிருஷ்ணாபுரம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசு, விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள எம்.கே. நகர் கிருஷ்ணாபுரம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது.
அதேபகுதியை சேர்ந்த தொழிலாளி பிரதாப் (வயது 30), அன்பரசு(20), விக்னேஷ் (19), சசிகுமார் (21) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வின்னேஷ் தரப்பினர் பிரதாப்பை தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசு, விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
- பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.
- ஒகேனக்கல்லில் நேற்று தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலைமோதியது.
ஒகேனக்கல்,
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் அமாவாசை நாட்களில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த வருடம் ஆடி மாதத்தில் 2 முறை அமாவாசை தினம் வந்தது. இதில் கடந்த மாதம் 17-ந் தேதியன்று அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை விட இன்று ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாக பக்தர்கள் கருதுகின்றனர்.
இதைத்தொடர்ந்து 2-வது ஆடி அமாவாசையான இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
முதலைப்பண்ணை பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.
பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.
இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் ஒகேனக்கல்லுக்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஒகேனக்கல்லில் நேற்று தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலைமோதியது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 5000 கனஅடியாக இருந்த தண்ணீர் அளவு நேற்று வினாடிக்கு 8,000 கன அடியாக சற்று அதிகரித்து வந்தது. இன்றும் அதே அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், மெயினருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் சீராக பாய்ந்து வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.
அதிக பஸ்கள் இயக்க வேண்டும்
ஒகேனக்கல்லுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமே கூட்டம் அதிகளவில் வரும், இதைத்தவிர வருடத்தில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுப்பதற்காகவே அதிகளவில் கூட்டம் வருவதால், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் தருமபுரிக்கு, தருமபுரியில் இருந்து ஒகேனக்கல்லுக்கும் செல்லக்கூடிய பஸ்கள் அதிகளவில் இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்கள் தங்கள் கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து தூய்மையாக வைத்து கொண்டால் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறும் வாய்ப்பினை அனைத்து ஊராட்சிகளும் பெறலாம்.
- பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பொம்மஅள்ளி ஊராட்சியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் சாந்தி கலந்து கொண்டார்.
இக்கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது தெரிவித்த தாவது:-
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறுகின்றது.
இந்த பொம்மஅள்ளி ஊராட்சியில் நடைபெறு கின்ற இக்கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், தருமபுரி மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.
அத்தகைய திட்டங்களை கடைக்கோடி கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப் போடு செயல்படுத்தி வரு கின்றது.
கிராமங்களின் வளர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் கிரா மங்களின் வளர்ச்சிக்கு அரசு செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை பொதுமக்களும் முழுமை யாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து தூய்மையாக வைத்து கொண்டால் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறும் வாய்ப்பினை அனைத்து ஊராட்சிகளும் பெறலாம்.
இந்த ஊராட்சியும் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறுவதற்கு உரிய அனைத்து நடவடிக்கை களையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் படிப்படியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. நீர் சேமிப்பு இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.
பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். இந்த கிராம சபைக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் நேரி டையாகவும், மனுக்களின் வாயிலாகவும் தெரி வித்துள்ளீர்கள்.
அதுகுறித்து உரிய ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நிறைவேற்றக்கூடிய அனைத்து திட்டங்களும் படிப்பாயாக நிறை வேற்றப்படும்.
மேலும். தகுதியான நபர்களுக்கு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தீபா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பழனியம்மாள், பொம்மஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் தீர்த்தகிரி உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






