என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் படை வீரர்கள் சங்கத்தில் சுதந்திர தின விழா
    X

    முன்னாள் படை வீரர்கள் சங்கத்தில் சுதந்திர தின விழா

    • சுதந்திர தின விழா தருமபுரி முன்னாள் படை வீரர்கள் நல உதவி மையத்தில் நடந்தது.
    • அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல சங்கம் மற்றும் தமிழக ஒருங்கிணைந்த பட்டாளம் சார்பில் சுதந்திர தின விழா தருமபுரி முன்னாள் படை வீரர்கள் நல உதவி மையத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி வைத்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    விழாவில், லெப்டினன்ட் கர்னல் சேரன் செங்குட்டுவன், கவுரவ தலைவர் உமாபதி, மாவட்ட தலைவர் நரசிம்மன், செயலாளர் புகழேந்தி, தமிழக ஒருங்கிணைந்த பட்டாள அமைப்பின் மாநில செயலாளர் வையாபுரி, செயற்குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், சேகரன், சோமசுந்தரம், முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×