என் மலர்
கடலூர்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடலூர் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. இதனால் வெளியூரில் இருந்து வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
கடலூர்:
அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் வாகன போக்குவரத்தில் மண்டல முறை ரத்து செய்யப்பட்டு மாவட்டத்திற்குள் மட்டுமே இ-பாஸ் இன்றி பயணம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த 1-ந் தேதி முதல் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கிய நிலையில் கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 550 பஸ்களில் நேற்று சுமார் 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
மண்டல முறை ரத்து செய்யப்பட்டதால் நேற்று மாவட்டத்திற்குள் மட்டுமே பஸ் போக்குவரத்து இயக்கப்பட்டது. அதாவது கடலூரில் இருந்து சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், வடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் இயக்கப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அதில் குறைந்தளவே பயணிகள் பயணித்தனர். பெரும்பாலான பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை.
மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதால் அதனை தீவிரமாக கண்காணிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு அங்கு பேரிகார்டுகள் மற்றும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிகளான சின்னகங்கணாங்குப்பத்தில் நேற்று காலை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களில் இ-பாஸ் பெற்று வருகின்றனவா? என சோதனை செய்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் இருந்து இ-பாஸ் இன்றி வெளியூர் செல்ல முயன்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் வெளியூர்களில் இருந்து கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய முயன்ற வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.
இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் கூட திருப்பி அனுப்பப்பட்டனர். அதேநேரத்தில் திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக இ-பாஸ் அனுமதி பெற்று வந்தவர்கள் மட்டுமே செல்ல போலீசார் அனுமதித்தனர். அதுபோல் அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்த தீவிர கட்டுப்பாடுகளால் மக்கள் கூட்டம் சற்று குறைந்து முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது 5-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்திய போதிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வருகிற 30-ந் தேதி வரை வாகன போக்குவரத்தில் மண்டல முறையை தற்காலிகமாக ரத்து செய்து, மாவட்டத்திற்குள் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றும், பஸ் போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் வாகன போக்குவரத்தில் மண்டல முறை ரத்து செய்யப்பட்டு மாவட்டத்திற்குள் மட்டுமே இ-பாஸ் இன்றி பயணம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த 1-ந் தேதி முதல் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கிய நிலையில் கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 550 பஸ்களில் நேற்று சுமார் 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
மண்டல முறை ரத்து செய்யப்பட்டதால் நேற்று மாவட்டத்திற்குள் மட்டுமே பஸ் போக்குவரத்து இயக்கப்பட்டது. அதாவது கடலூரில் இருந்து சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், வடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் இயக்கப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அதில் குறைந்தளவே பயணிகள் பயணித்தனர். பெரும்பாலான பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை.
மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதால் அதனை தீவிரமாக கண்காணிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு அங்கு பேரிகார்டுகள் மற்றும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிகளான சின்னகங்கணாங்குப்பத்தில் நேற்று காலை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களில் இ-பாஸ் பெற்று வருகின்றனவா? என சோதனை செய்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் இருந்து இ-பாஸ் இன்றி வெளியூர் செல்ல முயன்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் வெளியூர்களில் இருந்து கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய முயன்ற வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.
இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் கூட திருப்பி அனுப்பப்பட்டனர். அதேநேரத்தில் திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக இ-பாஸ் அனுமதி பெற்று வந்தவர்கள் மட்டுமே செல்ல போலீசார் அனுமதித்தனர். அதுபோல் அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்த தீவிர கட்டுப்பாடுகளால் மக்கள் கூட்டம் சற்று குறைந்து முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.
கடலூர், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 5 பேர் பலியாகினர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும், வெயிலின் தாக்கம் குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. தினசரி 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை கடலூரில் திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
பின்னர் காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் அடிக்க தொடங்கியது. இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மாலை 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டது. பின்னர் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
அது பற்றிய விவரம் வருமாறு:-
ஸ்ரீமுஷ்ணம் கொம்பாடி தெருவை சேர்ந்தவர் முருகன், கொத்தனார். இவருடைய மகன் ராம்குமார் (வயது 17). இவர் திட்டக்குடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார் மகன் பிரவீன்குமார்(16). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளார்.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேற்று விருத்தாசலம் சாலையில் உள்ள அருமைசெட்டிக்குளம் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ராம்குமார், பிரவீன்குமார் ஆகியோரும் சென்று இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மாலை 5 மணி அளவில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரவீன்குமார், ராம்குமார் ஆகியோரை மின்னல் தாக்கியது. இதில் அவர்கள் 2 பேருடைய உடல்களும் தீப்பற்றி எரிந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள், தீயை அணைத்து 2 பேரையும் சிகிச்சைக்காக ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்து வந்த பெற்றோர்கள், 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரின் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மின்னல் தாக்கியதில் 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் சின்னதுரை(58). தொழிலாளி. இவர் நேற்று மாலை அகரம் கிராமத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. பள்ளிப்பட்டு சுடுகாடு அருகே சின்னதுரை வந்த போது, அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல் கோ.பவழங்குடி கிராமத்தை சேர்ந்த துளசி என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகள், அங்குள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் செத்தன. இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு குடிசை வீடு தீ பற்றி எரிந்ததுடன், பசுமாடும் உடல் கருகி இறந்து போனது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் டி.புதுப்பாளையம் புதுக்காலனியை சேர்ந்தவர் வேம்பன் மகன் அஜித்குமார்(23). இவர் நேற்று மாலை 6.30 மணிக்கு அதே கிராமத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் சதீஷ்(25). இவர் பள்ளேரிப்பாளையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்ற போது, மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோல், செஞ்சி அருகே அன்னியூரை சேர்ந்தவர் தேவி. இவரது குடிசை வீட்டில் மின்னல் தாக்கியது. இதில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக தேவி அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டதால், உயிர் தப்பினார்கள். கொணலூரில் சடையன் என்பவரது பசுமாடு மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 750-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திட்டக்குடி:
திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 750-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மங்களூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, மாவட்ட கவுன்சிலர் செல்வி அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கிராம மக்களுக்கு, அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், ராமச்சந்திரன், சேகர், சுப்பிரமணியன், முன்னாள் நல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோதண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் பாக்கியராஜ், துணை செயலாளர்கள் ரெங்கநாதன், ஆவட்டி ராமு, மாரிமுத்து, அவைத்தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர்கள் செந்தில்குமார், சுரேஷ், திருமால், ராமு, பட்டூர் ஊராட்சி செயலாளர் காசிராஜன், தொழில்நுட்பபிரிவு நிர்வாகி விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. ஊழியர் உள்பட 72 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 821 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 489 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று சிலரது உமிழ்நீர் பரிசோதனை முடிவு வந்தது. இதில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
சென்னையில் வேலை பார்த்து வந்த பரங்கிப்பேட்டையை சேர்ந்த 9 பேர், மங்களூரை சேர்ந்த 5 பேர், புவனகிரி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர், குமராட்சி, அண்ணாகிராமத்தை சேர்ந்த தலா 2 பேர், கடலூரை சேர்ந்த 10 பேர், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 12 பேர், என்.எல்.சி. குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 7 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினர். இவர்களிடம் இருந்து உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேற்கண்ட 49 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதேபோல் ஓசூர், திருச்சியில் இருந்து கடலூர் வந்த தலா ஒருவர், சிங்கப்பூரில் இருந்து கடலூர், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளுக்கு வந்த தலா ஒருவர், பஞ்சாப்பில் இருந்து கீரப்பாளையம் வந்த ஒருவர், டெல்லியில் இருந்து விருத்தாசலம் வந்த ஒருவர், ராஜஸ்தான், ஐதராபாத்தில் இருந்து என்.எல்.சி. குடியிருப்புக்கு வந்த 3 பேர், கேரளாவில் இருந்து குமராட்சிக்கு வந்த ஒருவர், என்.எல்.சி. குடியிருப்புக்கு வந்த 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுதவிர கடலூரை சேர்ந்த 2 பேர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அப்போது அவர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில், 2 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதேபோல் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த என்.எல்.சி. ஊழியர் 2 பேருக்கும், குமராட்சி, புவனகிரியை சேர்ந்த தலா ஒருவர், வடலூர், அண்ணாகிராமத்தை சேர்ந்த தலா 2 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
இவர்கள் அனைவரும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 893 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 1,261 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. நேற்று மட்டும் 17 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீமுஷ்ணத்தில் 27 வயதுடைய வாலிபர், 27 வயதுடைய பெண், இவருடைய 3 வயது மகன் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே 27 வயது பெண், நேற்று காலை இந்தியன் வங்கிக்கும், அருகில் உள்ள காய்கறி கடைக்கும் சென்று வந்துள்ளார். இதனால் அந்த காய்கறி கடையை மூடுமாறு சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டதையடுத்து அந்த கடை மூடப்பட்டது. மேலும் இந்தியன் வங்கிக்கும் சென்று வந்ததால், வங்கி இன்றும்(புதன்கிழமை), நாளையும்(வியாழக்கிழமை) மூடப்படுவதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடலூர்:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 கடைசி தேர்வான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடத்தேர்வுகளும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மாணவ- மாணவிகளின் தேர்ச்சியை கணக்கிடும் வகையில் ஏற்கனவே நடந்து முடிந்த காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை கொண்டு, அதில் பெற்றுள்ள மதிப்பெண் மற்றும் வருகை பதிவேட்டை கணக்கிட்டு தேர்ச்சி பட்டியல் தயாரிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக மாணவர்களின் வருகை பதிவேடு அனைத்தும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கடலூர், வடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 4 கல்வி மாவட்ட அலுவலர்கள் தலைமையில் ஆசிரியர்கள் அடங்கிய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள், மதிப்பெண் பட்டியல்கள், தேர்ச்சி பட்டியல் மற்றும் பாடவாரியான மதிப்பெண் பதிவேடு ஆகியவை பெறப்படுகின்றன.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைத்து அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்களின் விடைத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து கோப்புகளும் பெறப்பட்டு வருகிறது. இதுவரை 90 சதவீத பள்ளிகள் மாணவர்களின் விடைத்தாள்களை ஒப்படைத்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து பள்ளிகளும் விடைத்தாள்களை ஒப்படைத்து விடும் என்றார்.
சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் விடைத்தாள்களை ஒப்படைப்பதற்காக சிதம்பரம் வீனஸ் பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து முகாம் அலுவலர் மோகன் மேற்பார்வையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மாணவர்களின் விடைத்தாள்களை வாங்கி சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 94 பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் விடைத்தாள்களையும், 51 பள்ளிகள் பிளஸ்-1 மாணவர்களின் விடைத்தாள்களையும் ஒப்படைத்துள்ளன. முன்னதாக பணிக்கு வந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது.

கடலூர் கிளை சிறைச்சாலையில் உதவி சிறை அலுவலர் மற்றும் வார்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பத்தில் கிளை சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 7 விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். உதவி சிறை அலுவலர் உள்பட 18 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் உதவி சிறை அலுவலர் மற்றும் ஒரு வார்டனுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே உதவி சிறை அலுவலர் மற்றும் வார்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சிறையில் இருந்த 7 கைதிகளுக்கும், மற்ற வார்டன்களுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உமிழ்நீர் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதன் முடிவு வந்த பிறகே சிறையில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவரும்.
இந்நிலையில் கிளை சிறையில் இருந்த கைதிகளும், வார்டன்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கிளை சிறைச்சாலை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

பண்ருட்டி அருகே சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர்:
பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று பண்ருட்டி அருகே எல்.ஆர்.பாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி (வயது 56) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான குப்புசாமி மீது பண்ருட்டி போலீஸ் நிலையம் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 9 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு,குப்புசாமியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து சாராய வியாபாரியான குப்புசாமியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மத்திய சிறையில் உள்ள குப்புசாமியிடம், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

கடற்கரை யோரத்தில் கிடந்த 4 கிலோ போதைப்பொருட்களை கைப்பற்றிய கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பரங்கிப்பேட்டை:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ளது புதுப்பேட்டை. இந்த கிராமத்தில் உள்ள கடற்கரையோரம் மர்மபொருள் ஒன்று கிடப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது போதைப்பொருட்கள் என்பதும், சுமார் 4 கிலோ எடை கொண்டது எனவும் தெரியவந்தது.
மேலும் அந்த பொருளின் கவரில் சீன எழுத்தில் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 883-ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 823 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இன்று மேலும் 60 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 883ஆக உயர்ந்துள்ளது.
கடலூரில் இதுவரை கொரோனாவுக்கு 492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நடுவீரப்பட்டில் சாலைப்பணியை தொடங்க கோரி கடலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு ஊரராட்சிக்குட்பட்ட சாலக்கரை வீதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சி அளித்தது. இதையடுத்து அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
இதை பரிசீலனை செய்த ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷம் ஆறுமுகம், அந்த சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி அரசு உத்தரவின் பேரில் அளவீடு செய்து சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
ஆனால் 2 பேர் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி விட்டனர். இதன் காரணமாக சாலைப்பணியை முடிக்க முடியவில்லை.
இது பற்றி அப்பகுதி மக்கள் கடலூர் தாலுகா அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் கடலூர் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிறுத்தப்பட்ட சாலைப்பணியை உடனே தொடங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்களை தாசில்தார் செல்வக்குமார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்தி, அதற்கு உரிய தீர்வு காணப்படும் என்றார். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் அருகே தொழிலாளிக்கு கத்தியால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
நெல்லிக்குப்பம்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள நல்லப்ப ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (வயது 38). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவருடைய மனைவி அம்சவல்லி, அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முரளி(29) மனைவி கற்பகம் என்பவர் அம்சவல்லியை திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அம்சவல்லி தனது கணவரிடம் கூறினார்.
பின்னர் சங்கர்கணேஷ், கற்பகத்தை திட்டி உள்ளார். இதையடுத்து முரளி, தனது உறவினர் செல்வகுமாரனுடன்(31) சென்று சங்கர் கணேசை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளி, செல்வகுமாரன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே அரசு ஊழியர் உள்பட 2 பேர் வீடுகளில் ரூ.25 லட்சம் நகை-பணம் கொள்ளைபோனது. நள்ளிரவில் கதவை உடைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சின்ன பரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்சாமி மகன் பாலமுருகன்(வயது 40). இவருடைய உறவினர் தேவேந்திரன் மகன் ராஜீவ்காந்தி(36).
இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். ராஜீவ்காந்தி வடலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டின் பின்புறம் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலமுருகன், ராஜீவ்காந்தி ஆகியோரது குடும்பத்தினர், வீட்டின் முன்புறம் படுத்து தூங்கினர். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது, 2 வீடுகளின் பின்பக்க கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்த அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
பாலமுருகன் வீட்டில் இருந்த 50 பவுன் நகை, 5½ கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இதேபோல் ராஜீவ்காந்தி வீட்டில் இருந்த 16 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் காணவில்லை.

பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ரெயில்வே தண்டவாள பகுதியின் அருகில் நகைகள் வைத்திருந்த பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக்கிடந்தன.
பாலமுருகன், ராஜீவ்காந்தி குடும்பத்தினர் தூங்கியதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் பின் பக்க கதவுகளை உடைத்து 2 வீடுகளில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்று நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் பெட்டிகளை அங்கேயே போட்டு விட்டுச்சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகை-பணத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது கொள்ளையர்களை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர் விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீடுகளில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது.
அது வீடுகளை மோப்பம்பிடித்தபடி, வீட்டின் பின்புறம், ரெயில்வே தண்டவாளம் அருகில் உள்ள விவசாய நிலங்கள் ஆகிய பகுதிகள் வரை ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரசு ஊழியர் உள்பட 2 பேர் வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.