என் மலர்
செய்திகள்

கைப்பற்றிய போதைப்பொருள்
கடற்கரை யோரத்தில் கிடந்த 4 கிலோ போதைப்பொருட்கள் - போலீசார் விசாரணை
கடற்கரை யோரத்தில் கிடந்த 4 கிலோ போதைப்பொருட்களை கைப்பற்றிய கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பரங்கிப்பேட்டை:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ளது புதுப்பேட்டை. இந்த கிராமத்தில் உள்ள கடற்கரையோரம் மர்மபொருள் ஒன்று கிடப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது போதைப்பொருட்கள் என்பதும், சுமார் 4 கிலோ எடை கொண்டது எனவும் தெரியவந்தது.
மேலும் அந்த பொருளின் கவரில் சீன எழுத்தில் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story