என் மலர்
செய்திகள்

கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி.
திட்டக்குடி அருகே கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள்- கணேசன் எம்.எல்.ஏ. வழங்கினார்
திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 750-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திட்டக்குடி:
திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 750-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மங்களூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, மாவட்ட கவுன்சிலர் செல்வி அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கிராம மக்களுக்கு, அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், ராமச்சந்திரன், சேகர், சுப்பிரமணியன், முன்னாள் நல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோதண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் பாக்கியராஜ், துணை செயலாளர்கள் ரெங்கநாதன், ஆவட்டி ராமு, மாரிமுத்து, அவைத்தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர்கள் செந்தில்குமார், சுரேஷ், திருமால், ராமு, பட்டூர் ஊராட்சி செயலாளர் காசிராஜன், தொழில்நுட்பபிரிவு நிர்வாகி விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






