என் மலர்
கடலூர்
தைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் :
வடலூரில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சத்தியஞான சபையில் இன்று(வியாழக்கிழமை) ஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்காக அங்கு பக்தர்கள் குவிந்துள்ளனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகள் உள்ளன. அந்த திரைகள் ஒவ்வொன்றாக விலக்கி நிலை கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை காண்பதே ஜோதி தரிசனமாகும்.
தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

அதன்படி காலை 6 மணிக்கு நடந்த முதல் ஜோதி தரிசனத்தை காண, சத்திய ஞானசபையின் முன்பு ஆயிரகணக்கான பக்தர்கள் திரண்டனர். பின்னர் நிலை கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது. அப்போது நிலை கண்ணாடிக்கு பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது.
இதை பார்த்த அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்ற மகா மந்திரத்தை உச்சரித்து ஜோதியை தரிசனம் செய்தனர்.கொரோனா ஊரடங்கு விதிமுறையின் காரணமாக அன்னாதானம் வழங்கவும் கடைகள் மற்றும் ராட்டினம் அமைக்கவும் என எதற்கும் அனுமதி இல்லை. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களின் வருகை என்பது குறைவாகவே காணப்பட்டது.
தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளது.
வடலூர் :
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு தைபூச திருவிழாவையொட்டி வடலூர் வள்ளலார் ஞானசபையில் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெறுகிறது.
நாளை (28-ந்தேதி) தைப்பூச திருவிழாவையொட்டி காலை 6 மணி 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 , மணி 10 மணி, மறுநாள் காலை 5.30 ஆகிய 6 காலங்களில் 7 திரைநீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரளுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் வடலூ ருக்கு சிறப்பு பஸ் மற்றும் ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தைப்பூசத்தன்றுகாலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் சந்திர சேகர் சாகமூரி முன்னிலையிலும், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தலைமையிலும் நடைபெறுகிறது.
இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ. க்கள், மாவட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். தைப்பூச விழாவிற்கு பின்னர் ஒருநாள் இடைவெளி விட்டு (30-ந் தேதி) பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறைதரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திரு அறையில் உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும்.
அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும் தைப்பூச திருவிழா வையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களும், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு அந்த கலை நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளது. தைப்பூச விழாவை யொட்டி வடலூர் பகுதிகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் அமைக்கப்படவில்லை.

குளத்தில் மூழ்கி இரட்டை குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதனால் 2 கிராமங்கள் சோகத்தில் மூழ்கின.
கடலூர்:
கடலூர் மாவட்டம் இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 4 வயதில் விக்னேஸ்வரன், சர்வேஸ்வரன் என இரட்டை குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் மணிமேகலை தனது குழந்தைகளுடன் திருப்பெயர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்தார். மணிமேகலையை பார்ப்பதற்காக அந்த கிராமத்தில் வசித்து வரும் அவரது சகோதரி மல்லிகா தனது 4 வயது மகன் விவேகனுடன் பாட்டி வீட்டு வந்திருந்தார்.
நேற்று முன்தினம் மாலை விவேகன், விக்னேஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகிய 3 சிறுவர்களும் அங்குள்ள குளத்திற்கு அருகே விளையாடிய போது துரதிருஷ்டவசமாக குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். நேற்று குளத்திற்குள் இருந்து தீயணைப்பு வீரர்கள் சிறுவர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டுவந்தனர். இதை பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதேபோல் பண்ருட்டி அருகே மற்றொரு துயரசம்பவம் நடந்துள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள ஏ.புதூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் லட்சபூபதி. காய்கறி வியாபாரி. இவரது மகள்கள் நந்தினி(18), வினோதினி(17). அதே பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் மகள் புவனேஸ்வரி (20).
இதில் வடலூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வினோதினி பிளஸ்-2-வும், நந்தினி வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டும் படித்து வந்தனர். புவனேஸ்வரி குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவிலில் கன்னிவிடு திருவிழாவையொட்டி நேற்று சாமிக்கு அங்குள்ள குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு குளத்தில் நீராடினர். மாணவிகள் நந்தினி, வினோதினி, புவனேஸ்வரி ஆகியோரும் குளத்தில் இறங்கி நீராடினர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மாணவிகள் 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குளத்தில் மூழ்கி இரட்டை குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவங்களால் மேற்படி இரு கிராமங்களும் சோகத்தில் மூழ்கின.

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஒரே நாளில் 85 திருமணங்கள் நடைபெற்றது. இதன் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
நெல்லிக்குப்பம்:
கடலூர் அருகே புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாதசுவாமிகோவிலில் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் கோவில் எதிரில் உள்ள மலையில் 50 முதல் 200-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். அதேபோல் திருவந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் சுமார் 50 திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு உத்தரவின்பேரில் தேவநாதசுவாமிகோவில் முன்பு உள்ள மலையில் கடந்த 10 மாதங்களாக திருமணம் நடைபெறாமல் இருந்து வந்தது. இதற்கிடையில் தமிழக அரசு தற்போது தளர்வுகள் அறிவித்துள்ளதால் மலையில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் திருமணம் செய்பவர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு பெற்று, அதன்பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு முன்பு கோவில் அலுவலகத்தில் நேரடியாக அனுமதி பெற்று திருமணம் நடத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் அதிகாலை முதல் திருமணம் நடைபெற்று வந்தது. இதில் மலையில் சுமார் 50 திருமணமும், கோவிலை சுற்றி உள்ள தனியார் மண்டபங்களில் 35 திருமணமும் என மொத்தம் 85 திருமணங்கள் நடைபெற்றது.
இதன் காரணமாக கடலூர் - பாலூர் சாலையில் வழக்கத்தை விட அதிக அளவில் வாகனங்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இந்த போக்குவரத்து நெரிசலால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். நேற்று தை மாதத்தில் வரக்கூடிய முதல் முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது.
கடலூர் அருகே மணமக்களுக்கு ஆசி வழங்கி பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் திருநங்கைகள் தாக்கப்பட்டனர். அவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் நேற்று 80-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. அப்போது திருமணம் முடிந்த ஒரு மணமக்களுக்கு 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆசி வழங்கி பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு மணமக்கள் தரப்பினர் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் திருநங்கைகளுக்கும், மணமக்கள் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திருமணத்திற்கு வந்த சீருடை அணியாத போலீசார் ஒருவர் இது பற்றி அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் போலீசார், அங்கிருந்த திருநங்கைகளை தாக்கி அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள், தங்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் புகார் தெரிவிக்க வந்தனர். தொடர்ந்து அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் எதிரே குண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும். மற்றவர்கள் வெளியே காத்திருங்கள் என்று கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வடலூர் ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நாளை மறுநாள்(புதன்கிழமை) தொடங்குகிறது.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை மறுநாள்(புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணமும், காலை 7.30 மணிக்கு தருமசாலையில் சன்மார்க்க கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேசமயத்தில் மருதூர், நற்கருங்குழி, மேட்டுக்குப்பம் வள்ளலார் சன்னதிகளிலும் கொடியேற்றப்படுகிறது. அதன்பிறகு காலை 10 மணியளவில் ஞானசபையில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு 7 மணியளவில் தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிநடைபெறும்.
சிகர விழாவாக 28-ந்தேதி(வியாழக்கிழமை) தைப்பூச விழாவையொட்டி காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் மறுநாள் 29-ந்தேதி காலை 5.30 மணி ஆக 6 காலம், 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
இதையடுத்து வருகிற 30-ந்தேதி மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறைதரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.
கொரோனா வழிகாட்டுதலின்பேரில் தைப்பூச திருவிழாவையொட்டி சன்மார்க்க சங்கங்கள் சார்பில் நடைபெறும் சொற்பொழிவு, இசைநிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க ஏதுவாக இந்தாண்டு கடைகள், நடன நாட்டிய அரங்குகள், ராட்டினம் உள்ளிட்டவைகள் வைக்க தடைசெய்யப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு ஞானசபை வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலையத்தின் செயல் அலுவலர் சரவணன் மற்றும் பார்வதிபுரம் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

நெய்வேலியில் மருத்துவக்கல்லூரி மாணவி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி 5-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரது மனைவி சுந்தரி. இவர் விருத்தாசலம் அடுத்த பரவளூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் ரம்யாகவுரி(வயது 19) ரஷ்யா நாட்டில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக மருத்துவக்கல்லூரி மூடப்பட்டதால் ரம்யாகவுரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.
நேற்று காலை வீட்டில் இருந்த ரம்யாகவுரியின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. இதைகேட்ட அவரது தாயார் சுந்தரி, மகளிடம் உன்னிடம் செல்போனில் பேசியது யார்? என கேட்டுள்ளார். அதற்கு ரம்யாகவுரி பதில் ஏதும் கூறாமல் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டு கொண்டார்.
இதனால் பதறிய சுந்தரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்தபோது, ரம்யா கவுரி துப்பட்டாவால் தூக்குப்போட்டபடி மயங்கிய நிலையில் தொங்கினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சுந்தரி அவரை மீட்டு நெய்வேலியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரம்யா கவுரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாகவுரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி 1,611 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. இதில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
கடலூர்:
போலியோ நோயை தடுப்பதற்காக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் இம்முகாம் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

சாலை அமைக்கக்கோரி தே.பவழங்குடி கிராம மக்கள் சாலை மறியில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தே.பவழங்குடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்குள் நுழையும் சாலையில் குறிப்பிட்ட 200 மீட்டருக்கு மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமல் உள்ளது. மண் சாலையாக உள்ளதால் மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் அதிகாரிகள் சாலை அமைக்க முற்படுவதும், தனிநபர் ஒருவர், அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று தடுத்து நிறுத்துவதும், பின்னர் சாலை அமைக்காமல் வி்ட்டுவிடுவதுமாக உள்ளது. ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சாலை அமைப்பதற்காக அதிகாரிகள் நேற்று சாலையை அளவீடு செய்தனர். அப்போது தனிநபர் ஒருவர், அங்கு வந்து இந்த இடம் எங்களுடைய பட்டாவில் உள்ளது, அதனால் அளவிட செய்யக்கூடாது என தடுத்து நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தே.பவழங்குடி பஸ் நிறுத்தத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் விரைந்து வந்து, குறிப்பிட்ட இடத்தை சர்வேயர் மூலம் அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை ஏற்ற கிராம மக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வேப்பூர் பகுதிக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் கல்லூரிக்கு சென்று வரும் மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தாமதமாக வரும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அரை நாள் ஆப்சென்ட் போடப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை கல்லூரி வளாகத்தில் முகப்பு வாசல் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் மீனாவிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் பேராசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறவில்லை.
கடலூர் அருகே தூக்குபோட்டு பெண் போலீஸ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு போலீஸ் சரகம் பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் நாகமுத்து. அவரது மகள் சரண்யா (வயது 27). இவர் அரியலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசாக இருந்து வந்தார். சரண்யாவுக்கு முடக்குவாதம் நோய் இருந்து வந்ததால் கடந்த 2 மாதமாக விடுமுறை எடுத்து சிகிச்சை பெற்று வந்தார்.
மீண்டும் பணிக்கு திரும்பியவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 3 நாட்கள் விடுமுறையில் வீட்டிற்கு வந்தார். நேற்று வெளியில் சென்று வந்த அவரது தாயார், வீட்டு கதவு நீண்ட நேரம் திறக்காத நிலையில் இருந்ததால் சந்தேகமடைந்து கதவைத் திறந்து பார்த்தார். அப்போது சரண்யா தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்ததை பார்த்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
தகவல் அறிந்த நடுவீரப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெண் போலீஸ் சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே டிராக்டர் மோதிய விபத்தில் ஆசிரியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
புவனகிரி:
புவனகிரி அருகே உள்ள தம்பிக்கு நல்லான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 36). ஆசிரியையான இவர், புவனகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு வர்ஷினி (8) என்ற மகளும், விஷ்ணுவர்தன் (6) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் ராஜேஸ்வரி, தனது மகள் வர்ஷினியுடன் ஸ்கூட்டரில் புவனகிரியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டார். பள்ளிக்கூடம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக ராஜேஸ்வரி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும் வர்ஷினி காயமடைந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த வர்ஷினி சிகிச்சைக்காக புவனகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.