என் மலர்tooltip icon

    கடலூர்

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதையடுத்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.

    தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரதொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,623 கனஅடி நீர் ஏரிக்கு வந்தது.

    இன்று வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து சற்று அதிகரித்து 1,844 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.87 அடியாக இருந்தது. இன்று சற்று அதிகரித்து 46.46 அடியாக உயர்ந்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 32 கனஅடி நீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதையடுத்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து வருகிற 24-ந் தேதி விவசாயிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இதையடுத்து வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 32 கனஅடி நீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.

    தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரத்தொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,574 கனஅடி நீர் ஏரிக்கு வந்தது.

    இன்று வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்து 1,623 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.28 அடியாக இருந்தது. இன்று சற்று அதிகரித்து 45.87 அடியாக உயர்ந்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 32 கனஅடி நீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    வீராணம் ஏரிக்கு இதேபோல் தண்ணீர் வந்து கொண்டிருந்தால் நாளைக்குள் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ராமநத்தம் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநத்தம்:

    ராமநத்தம் அடுத்துள்ள கொரக்கவாடி பகுதியில் ராமநத்தம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெள்ளாற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையில் மணல் கடத்தி வந்ததாக, பெரம்பலூர் மாவட்டம் வெல்லுவாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் மகன் வேல்முருகன் (வயது 28) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மணல் மூட்டையையும் பறிமுதல் செய்தனர்.
    வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    வீராணம் ஏரியில் கடந்த 6 மாதமாக பராமரிப்பு பணி நடந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்று வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது.

    கீழ்அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.

    தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்தவிடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரதொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,773 கனஅடி நீர் ஏரிக்கு வந்தது.

    இன்று வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்து 1,364 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 44.07 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று அதிகரித்து 44.66 அடியாக உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு நேற்று 30 கனஅடி நீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இன்று 32 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

    ஏரியின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    பரங்கிப்பேட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை அருகே ஆணையங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி லட்சுமி (வயது 24).இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 வருடத்தில் லட்சுமி இறந்ததால், வரதட்சணை கொடுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    குடிநீர் கேட்டு என்.எல்.சி. சுரங்கம் 2 அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 80 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மந்தாரக்குப்பம்:

    நெய்வேலி அருகே வடக்கு வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சுற்றியும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி குடியிருப்புகளில் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வறண்டது. ஒரு சில ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் கலங்கிய நிலையில் வந்தது. இதனை குடிக்கும் மக்களுக்கு தோல் நோய், வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட வடக்கு வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட தொல்காப்பியர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, அருந்ததியர் தெரு, ஓம் சக்தி நகர் ஆகிய பகுதி மக்கள் தங்களுக்கு சுகாதாரமான குடிநீரை என்.எல்.சி. நிர்வாகம் தினந்தோறும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று என்.எல்.சி. நிர்வாகம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தது.

    அதன்பிறகு கடந்த 10 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் என்.எல்.சி. நிறுவனத்திடம் குடிநீர் கேட்டு கோரிக்கை வைத்தனர். ஆனால் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று குடிநீர் கேட்டு என்.எல்.சி. 2-வது சுரங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர்.

    அதன்படி நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வக்கீல் திருமாறன் தலைமையில் நேற்று காலை கலைமகள் பஸ் நிறுத்தத்தில் இருந்த ஊர்வலமாக சென்று 2-வது சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி, நிலக்கரி சுரங்கம் 2 மனித வளத்துறை அதிகாரி ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இன்று (அதாவது நேற்று) தங்களது பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் எனவும், மேலும் இந்த பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளுடன் நாளை திங்கட்கிழமை (அதாவது இன்று) விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேசி நிரந்தர தீர்வு காணலாம் என கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கூட்டமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டதாக 50 பெண்கள் உள்பட 80 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேப்பூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த அ.தி.மு.க. பிரமுகர் மனைவியிடம் 4 பவுன் தாலி சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
    வேப்பூர்:

    வேப்பூர் அருகே உள்ள பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 59). அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மகேஸ்வரி(55), மகள் கல்பனா(21) ஆகியோருடன் வீட்டின் முன்பக்கம் உள்ள வரண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் மகேஸ்வரி கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த மகேஸ்வரி திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதைகேட்டு எழுந்த கொளஞ்சி தப்பியோடிய மர்மநபர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது மர்மநபர்கள் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் கொளஞ்சியை தாக்கிவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டனர். மர்மநபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த கொளஞ்சி வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயகீர்த்தி வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். இதற்கிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தை திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் நேரில் பார்வையிட்டு நகையை பறிகொடுத்த மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தி சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுகிறது என்று கடலூரில் வானதி சீனீவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.
    கடலூர் முதுநகர்:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் கடலூர் முதுநகரில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் விநாயகம் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் விஜயரங்கன், பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி, ராணுவ பிரிவு மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் பாபு, மாவட்ட துணைத்தலைவர் ஜெனித் மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி தலைவர் மீனாட்சி நித்திய சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலை் அம்மாள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு தேசியக்கொடியும் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் ஊடகப்பிரிவு தலைவர் ஸ்ரீதர், நிர்வாகி பந்தல் பரசுராமன், மேற்கு மாவட்ட விவசாய அணி நிர்வாகி ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் வேலு வெங்கடேசன் நன்றி கூறினார்.

    இதைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறி மரியாதை செலுத்தும் விதமாக கடலூர் முதுநகர் தென்னிந்திய ஜான்சிராணி என மகாத்மா காந்தியால் பாராட்டு பெற்ற அஞ்சலை அம்மாள் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தியாகிகளின் சுதந்திர வாழ்க்கையை நினைவு கூரும் விதமாகவும், தியாகிகளின் வாழ்க்கை குறிப்பை இன்றைய இளைஞர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அருங்காட்சியம் அமைக்க வேண்டும். மேலும் அஞ்சலை அம்மாளுக்கு மணிமண்டபம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமலும், மக்களுக்கு எதுவும் செய்யாமலும் தி.மு.க. அரசு ஏமாற்றுகிறது. இது வேதனைக்குரியதாகும்.

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக குறிப்பிட்ட தலைவர்களின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிப்போம். வெள்ளை அறிக்கை என்பது தங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்கு இந்த அரசின் அறிவிப்பாகும்.

    இவ்வாறு அவா் கூறினார்.

    முன்னதாக கடலூர் முதுநகரில் அஞ்சலையம்மாள் வாழ்ந்த வீட்டிற்கு சென்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அஞ்சலையம்மாளின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
    கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்று வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரத்து இருக்கும்.

    வீராணம் ஏரியில் கடந்த 6 மாதமாக பராமரிப்பு பணி நடந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்று வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது.

    கீழ்அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் 600 கனஅடி நீர் மட்டும் வடவாறு வழியாக வந்தது. இதனால் நீர்மட்டம் 16 அடியிலிருந்து படிப்படியாக உயரத்தொடங்கியது. ஆனால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது.

    தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்தவிடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரதொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு இன்று 1,227 கனஅடி நீர் வடவாறு வழியாக வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,080 கனஅடி நீர் வந்தது.

    இன்றைய நிலவரப்படி வீராணம் ஏரி நீர்மட்டம் 44.46 அடி தண்ணீர் உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சென்னை மாநகர் குடிநீருக்காக கூடுதலாக 27 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. நேற்று 18 கன அடியாக நீர் மட்டுமே அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று நீர் வரத்து இருந்தால் வீராணம் ஏரி விரைவில் நிரம்பிவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
    கடலூர் முதுநகர்:

    நாட்டின் சுதந்திர தின விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸ் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த வகையில் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின்பேரில், கடலூர் முதுநகர் ரெயில் நிலைய பகுதியில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில், காவலர்கள் பாரதி, ஜெகதீசன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் கடும் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரெயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலம் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ரெயில்வே தண்டவாளங்களையும் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

    இதேபோல் சிதம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஜூலியட் தலைமையில், தனிப்பிரிவு ஏட்டு பாஸ்கர் மற்றும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தண்டவாள பகுதியில் நடந்து சென்று மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். மேலும் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடைமைகளையும் போலீசார் சோதனை நடத்தினர்.

    விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே இருப்புப்பாதை சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுமித், தனிப்பிரிவு ராம்குமார், கணேசன் மற்றும் போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம், ரெயில் தண்டவாளம், நடைமேடை, ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

    வேப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    வேப்பூர்:

    வேப்பூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார். விவசாயி. இவருடைய மனைவி செல்வி(வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் கீழ் தளத்தை பூட்டிவிட்டு மேல் தளத்தில் குடும்பத்துடன் தூங்கினார். பின்னர் நேற்று அதிகாலை செல்வி மேல்தளத்தில் இருந்து இறங்கி கீழே வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததுடன், துணி மணிகளும் சிதறிக்கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த 12 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை காணவில்லை.

    பின்னர் இதுபற்றி வேப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    புவனகிரி அருகே மனைவி கோபித்து சென்றதால் மாமியார் வீட்டின் முன்பு விஷம் குடித்து அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த ஆனைவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். வெங்கடேசனுக்கு திருமணமாகி ஜெயஸ்ரீ (30) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    வெங்கடேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வார் இதை அவரது மனைவி கண்டித்ததால் கணவன்- மனைவி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஜெயஸ்ரீ அவரது கணவரிடம் கோபித்து கொண்டு சாவடி நத்தம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் வெங்கடேசன் அவரது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வெங்கடேசன் மாமியார் வீட்டின் முன்பு நின்று அவர் வைத்திருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்தார்.

    சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×