என் மலர்
செங்கல்பட்டு
பொத்தேரி அருகே கல்லூரி மாணவரை தாக்கி மோட்டார் சைக்கிள் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு:
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் பிரபு. இவர் பொத்தேரியில் தங்கி அங்கு உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் காட்டாங்கொளத்தூர் பகுதியில் இருந்து கொருக்கந்தாங்கல் பகுதிக்கு விலையுயர்ந்த கே.டி.எம். மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழிமறித்த 2 மர்ம வாலிபர்கள் ஆனந்த்பிரபுவை தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் அவர் அணிந்து இருந்த நகையை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் கல்லூரி மாணவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது காட்டாங்கொளத்தூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குட்டி என்ற ராகவேந்திரன், அவரது நண்பர் தைலாவரம் பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து மோட்டார்சைக்கிள் மற்றும் நகையை பறிமுதல் செய்தனர்.

மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு, சத்தியா நகரை சேர்ந்தவர் சிட்டி பாபு. இவரது மகன் பாலாஜி(வயது26). பெயிண்டர்.
இவர் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தார். அப்போது வந்த ராட்சத அலை பாலாஜியை கடலுக்குள் இழுத்து சென்றது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பாலாஜியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கடலில் மூழ்கி மாயமானார். அவரை தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் சூலேரிக்காடு கடற்கரையில் பாலாஜியின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த 80 பேருக்கும் தொல்லியல் துறை நிர்வாகம் இலவச அனுமதி வழங்கியது.
மாமல்லபுரம்:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் இருந்து 80 பேர் நேற்று சென்னை சரக்கு போக்குவரத்து நண்பர்கள் குழு சார்பில் சென்னை மாநகர பஸ் மூலம் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு உடன் வந்த டாக்டர்கள், ஊழியர்கள், சென்னை சரக்கு போக்குவரத்து நண்பர்கள் குழுவினர் அங்குள்ள ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி காட்டினர்.
குழுவாக அவர்களை அமர வைத்து புகைப்படம் எடுத்தனர். புராதன சின்னங்களை சுற்றி பார்த்த அவர்கள் மீண்டும் மனநல காப்பகத்திற்கு பஸ்சில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் அனைவருக்கும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண தொல்லியல் துறை நிர்வாகம் இலவச அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

அச்சரப்பாக்கம் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த தம்பதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம் அருகே உள்ள இந்தலூர் ஊராட்சி, பெரியார் நகரில் வசிப்பவர் முருகேசன் (வயது 57). விவசாய கூலித் தொழிலாளி.
இவரது மனைவி அஞ்சலை (54). அவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அரசால் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்தப் பகுதியில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் 5 வீடுகள் மட்டுமே உள்ளன. இதில் இரண்டு வீட்டில் மட்டும் மக்கள் வசிக்கின்றனர். முருகேசன் மிகவும் பழுதடைந்த தனது தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அவரது வீடு மேலும் சேதம் அடைந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கினர். நள்ளிரவு அவர்களது வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த முருகேசனும் அவரது மனைவி அஞ்சலையும் பலத்த காயம் அடைந்தனர்.
வீடு இடிந்து விழுந்த சத்தம் கேட்ட அருகில் வசித்து வந்தவர்கள் படுகாயம் அடைந்த முருகேசன் அவரது மனைவி அஞ்சலையை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில் அருகே மணற்பரப்பை அரித்து நிலப்பரப்பில் கடல்நீர் புகுந்து தேங்கி உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. கடற்கரை கோவில் அருகே கடல் நீர் பல அடிதூரம் வெளியேறி மணற்பரப்பை சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் அமர்ந்து கோயிலை பார்த்து ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடல் அலை சீற்றம் குறித்து மீனவர்கள் கூறியதாவது:
வங்க கடலின் நீரோட்டம் ஜனவரி, ஜூன் மாதங்களில் தெற்கில் இருந்து வடக்கும், ஜூலை, டிசம்பர் காலங்களில் வடக்கில் இருந்து தெற்கும் நீரோட்டம் அமைவது வழக்கம். தற்போது நேராக வந்து கடல்நீர் பல அடிதூரத்துக்கு வெளியேறி உள்ளது.
நேற்று பவுர்ணமி என்பதால் கடல் சீற்றம் மட்டும் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் மணற்பரப்பை அரித்து நிலப்பரப்பில் கடல்நீர் புகுந்து தேங்கி உள்ளது. வானிலை ஆய்வு மையம் இங்கு வைத்திருந்த கடல் பேரிடர் முன் எச்சரிக்கை ஒலிப்பான் செயல்படவில்லை. இதுபோன்ற புதிய வானிலை மாற்றங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் உடனடியாக எங்களுக்கு தகவல் கொடுத்தால் எங்கள் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்க உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாமல்லபுரம் அருகே தனியார் கம்பெனி வேனும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
மாமல்லபுரம்:
சென்னை. பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் மனைவி திவ்யா, தாய் லட்சுமி ஆகியோர் காரில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கல்பாக்கம் நோக்கி சென்ற தனியார் கம்பெனி வேனும், காரும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த ஆனந்தன்,அவரது மனைவி திவ்யா, தாய் லட்சுமிகாந்தன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதேபோல் வேனில் இருந்த கல்பாக்கம் , சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், வெங்கம்பாக்கம் பகுதிகளை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் 12 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்போரூர் முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் இடத்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருப்போரூர்:
திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் பணம் மற்றும் நகை, வெள்ளிப்பொருட்களை காணிக்கையாக செலுத்தும் உண்டியல்கள் நேற்று கோவில் ஆய்வாளர் பாஸ்கர், செயல் அலுவலர்கள் வெங்கடேசன், சக்திவேல், சரவணன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டன.
பின்னர் கோவில் வளாகத்தில் கோவல் ஊழியர்கள், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் காலை முதல் மாலை 6 மணிவரை எண்ணப்பட்டன. இதில் பணமாக 35 லட்சத்து 15 ஆயிரத்து 46ம் சில்லரை காசுகளாக 6 லட்சத்து 49 ஆயிரத்து 342ம் ஆக மொத்தம் 41 லட்சத்து 64 ஆயிரத்து 802 கிடைத்தது. மேலும் தங்கம் 290 கிராம், வெள்ளி 4990 கிராம் காணிக்கையாக கிடைத்தன. முன்னதாக உண்டியல் எண்ணும் இடத்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.