என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து
மாமல்லபுரம் அருகே வேன்-கார் மோதல்: 15 பேர் படுகாயம்
மாமல்லபுரம் அருகே தனியார் கம்பெனி வேனும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
மாமல்லபுரம்:
சென்னை. பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் மனைவி திவ்யா, தாய் லட்சுமி ஆகியோர் காரில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கல்பாக்கம் நோக்கி சென்ற தனியார் கம்பெனி வேனும், காரும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த ஆனந்தன்,அவரது மனைவி திவ்யா, தாய் லட்சுமிகாந்தன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதேபோல் வேனில் இருந்த கல்பாக்கம் , சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், வெங்கம்பாக்கம் பகுதிகளை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் 12 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






