என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • மாணவியின் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • மாமல்லபுரம் போலீசார், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி கஜ சுபமித்ரா, பள்ளி கட்டடத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    அவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவியின் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்கொலைக்கான காரணம் குறித்த மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்டமாக ஆசிரியர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். பின்னர் மாணவியிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் பிளஸ்2 மாணவி உயிரிழந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்த தற்கொலை முயற்சிகள், பெற்றோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருக்கழுகுன்றம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (27) ஜெயக்குமார் (21) என்பதும் கஞ்சா கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல்.
    • கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த சிவானந்தம் (வயது 32), ராமநாதபுரத்தை சேர்ந்த சிவா (வயது 24), ஆக இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல வண்டலூர் வெளிவட்ட சாலை டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த பாபு (வயது 59), என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்.

    தாம்பரம்:

    பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் யோகேஸ்வரன். இவர்கள் அனகாபுத்தூர் பஜார் வீதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையில் இருந்த சசிக்குமார் மற்றும் அவரது மகன் யோகேஸ்வரனிடம் வாலிபர்கள் சிலர் மாமூல் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்தனர்.

    இந்த நிலையில் கடையில் இருந்து வீட்டுக்கு சென்ற யோகேஸ்வரனை 4 பேர் கும்பல் கத்தி முனையில் பொழிச்சலூர் பகுதிக்கு கடத்தி சென்று தாக்கினர்.

    மேலும் அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின், ஒரு பவுன் மோதிரம் மற்றும் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து யோகேஸ்வரன் சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெரும்பாக்கம், கிருஷ்ணா நகர், 4-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாபு.
    • பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரும்பாக்கம், கிருஷ்ணா நகர், 4-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சரஸ்வதி(62). இவர் அருகில் உள்ள காய்கறி கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென சரஸ்வதி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டான். இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அனகாபுத்தூரை சேர்ந்தவர் செல்வமணி(வயது53). கொத்தனார்.

    தாம்பரம்:

    அனகாபுத்தூரை சேர்ந்தவர் செல்வமணி(வயது53). கொத்தனார். இவர்இன்று காலை தனது வீட்டின் அருகே உள்ள கடையில் டீ குடித்து விட்டு சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். காமராஜபுரம் அருகே பம்மல் மெயின் ரோட்டில் வந்த போது, எதிரே வந்த டிராக்டர் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே, செல்வமணி உடல் நசுங்கி பலியானார். டிராக்டர் டிரைவர் கோபாலகிருஷ்ணன் போலீசில் சரண் அடைந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடங்குகிறது.
    • செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் பார்க்க 155 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடங்குகிறது.

    இந்த போட்டியை மாணவ-மாணவிகள் நேரில் பார்வையிட 38 மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் தற்போது செஸ் ஒலிம்பியாட்போட்டியை நேரில் பார்க்க 155 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த வெளியூர்களில் இருந்து வரும் பள்ளி மாணவர்கள் எங்கு தங்குகிறார்கள்? எந்த அரங்கத்தை பார்க்கிறார்கள்? என்பது குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாமல்லபுரம் வந்தார்.

    அவர் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தை பார்வையிட்டார். அப்போது அமைச்சர் தா.மோ. அன்பரசன், கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஆய்வின் போது அங்கு தயார் நிலையில் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் செஸ் போர்டில், அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் செஸ் காய்களை நகர்த்தி பரிசோதனை விளையாட்டாக செஸ் விளையாடினர்.

    அப்போது கலெக்டர் ராகுல்நாத் டிஜிட்டல் போர்டின் பயன்பாடு குறித்தும் இணையத்தில் இணைந்து விளையாடும் புதிய தொழில்நுட்பம் குறித்தும் அவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

    • வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
    • படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜுலை மாதத்தில் நான்காவது வெள்ளிக்கிழமை 22.07.2022 அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 22.07.2022 ஆகிய தேதியில் காலை 10மணி முதல் 1. மணி வரை வெண்பாக்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும்

    இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தன.

    • மாமல்லபுரம் அடுத்த பையணூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையணூர்பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(வயது40), சிற்பியான இவர் மாமல்லபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொன்டிருந்தார். கூத்தவாக்கம் ஓ.எம்.ஆர் சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத கார் ஒன்று திடீரென மோட்டார் சைக்களில் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில்படுகாயம் அடைந்த ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    • கடப்பாக்கத்தை அடுத்த விளம்பூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.
    • தேவகி அதிகாலை நேரத்தில் தினமும் மாடுகளுக்கு தீவனம் வைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

    மதுராந்தகம்:

    செய்யூர் அருகே உள்ள கடப்பாக்கத்தை அடுத்த விளம்பூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தேவகி (வயது 68).கணவன்-மனைவி இருவரும் தனியாக வசித்து வருகிறார்கள். அவர்களது 2 மகன், 2 மகள்கள் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக சென்னையில் வசித்து வருகிறார்கள்.

    நேற்று அதிகாலை தேவகி வீட்டின் பின்புறத்தில் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.

    நீண்ட நேரத்துக்கு பின்னர் மனைவி திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த கணவர் சுப்பிரமணி வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார்.

    அப்போது அங்குள்ள சாக்கு மூட்டையில் தேவகி கொலை செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. தலையில் பலத்த காயங்கள் இருந்தன.

    மேலும் அவர் அணிந்து இருந்த 10 பவுன் நகை மாயமாகி இருந்தது. வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு மர்மகும்பல் தேவகியை கொலை செய்து 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    மேலும் உடலை சாக்குப்பையில் கட்டி வைத்து சென்று உள்ளனர்.

    இது குறித்து சூனாம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவகி அதிகாலை நேரத்தில் தினமும் மாடுகளுக்கு தீவனம் வைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். இதனை நோட்டமிட்டு மர்ம கும்பல் அவரை கொன்று நகையை பறித்து சென்று உள்ளனர். எனவே அவர்களது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். வயதான தம்பதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு இந்த கொடூர கொலையில் ஈடுபட்டு உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டத்தில் 346 மெட்ரிக் பள்ளிகளும், 148 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் உள்ளது.
    • இன்று பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 6 மெட்ரிக் பள்ளிகளும், அம்பத்தூர் கல்வி மாவட்டத்தில் ஒரு மெட்ரிக் பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மர்மமாக இறந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று காலை பள்ளி முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது கலவரமாக மாறியது.

    ஏராளமானோர் பள்ளிக்குள் புகுந்து பஸ்களுக்கு தீவைத்தனர். மேலும் பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தையும் நொறுக்கி சூறையாடினர்.

    இதனை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் தொடர்ந்து தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தனியார் பள்ளிகள் விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இதனால் இன்று காலை தனியார் பள்ளிகள் செயல்படுமா? அல்லது மூடப்ப டுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவியது.

    இந்த நிலையில் அரசின் எச்சரிக்கையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் 7 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டத்தில் 346 மெட்ரிக் பள்ளிகளும், 148 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் உள்ளது.

    இன்று பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 6 மெட்ரிக் பள்ளிகளும், அம்பத்தூர் கல்வி மாவட்டத்தில் ஒரு மெட்ரிக் பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    விடுமுறை அளித்துள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர் விளக்கம் அளிக்க திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் உத்தரவிட்டு உள்ளார்.

    செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் மொத்தம் 1,702 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் 860, 842 தனியார் பள்ளிகள் என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டன.

    தனியார் பள்ளிகள் இயங்குவதை கண்காணித்து வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா தெரிவித்து உள்ளார்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கியது.

    • மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம் பேட்டையை சேர்ந்தவர் அய்யனார்.
    • தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம் பேட்டையை சேர்ந்தவர் அய்யனார் (வயது48). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான வீரமுத்து(39) என்பவருடன் மேல்மருவத்தூர் அருகே கீழாமூர் ஆற்றுப்படுகைக்கு சென்றார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த 6 பேர் கும்பல் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அய்யனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வீரமுத்து பலத்த வெட்டுக்காயத்துடன் தப்பினார்.

    உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட அய்யனாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த வீரமுத்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    விசாரணையில் உத்திரமேரூர் அருகே உள்ள திருபுலிவனம் கிராமத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவர் தனது கூட்டாளிகளுடன் அய்யனாரை தீர்த்து கட்டியது தெரிய வந்தது. கருங்குழி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கஞ்சா வியாபாரியை பிடிக்க போலீசார் விரைந்து உள்ளனர்.

    கஞ்சா விற்பனை தகராறில் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×