என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரும்பாக்கத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
- பெரும்பாக்கம், கிருஷ்ணா நகர், 4-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாபு.
- பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரும்பாக்கம், கிருஷ்ணா நகர், 4-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சரஸ்வதி(62). இவர் அருகில் உள்ள காய்கறி கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென சரஸ்வதி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டான். இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






