என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் தேர்தல் பறக்கும் படை அலுவலரான தாசில்தார் கனகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், ஏட்டு தவசீலன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை அரியலூர் மாவட்ட எல்லை பகுதியான மதனத்தூர் போலீஸ் சோதனைச்சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நெய்வேலி நகரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் இருந்த ரத்தினாண்டவர்(வயது 60) என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், நெய்வேலியில் இருந்து கும்பகோணத்தில் நடைபெறும் உறவினர் இல்ல திருமணத்திற்கு செல்வதாகவும், அதற்கான தேவைக்காக அந்த பணத்தை கொண்டு செல்வதாகவும், அவர் கூறியுள்ளார். ஆனால் அவரிடம் அந்த தொகைக்கு உரிய ஆவணம் இல்லாததால், பறக்கும் படை அலுவலர், அந்த பணத்தை பறிமுதல் செய்தார். மேலும் இது பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் கலைவாணனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் கருவூல அதிகாரி சுரேஷிடம், அந்த பணத்தை ஒப்படைத்தார்.
இதேபோல் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டையை அடுத்த பூலாம்பாடி அரசு மருத்துவமனை அருகே உள்ள வேப்படி-பாலக்காடு சாலையில் நேற்று வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சிவக்குமார், சுரேஷ், சாந்தி ஆகிய போலீசார் அடங்கிய தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அந்த சாலையில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளுடன் நின்றவர்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த ரத்தினம் மகன் நல்லமுத்து (24), மற்றொருவர் தேவராஜ் என்பதும், அவர்கள் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியர்களாக பணிபுரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.63 ஆயிரத்து 767 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பெரம்பலூர் (தனி) தொகுதி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான பத்மஜாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் ‘சீல்' வைக்கப்பட்டு பெரம்பலூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உடும்பியம் கிராமத்தில் பறக்கும் படையை சேர்ந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை துணை தாசில்தார் பாக்கியராஜ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் பாடாலூரை சேர்ந்த குமார் (39), திருச்சியை சேர்ந்த பேட்டரி கணேசன் (60) ஆகியோர் கொண்டு வந்த ரூ.55 ஆயிரத்துக்கு உரிய ஆவணம் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை பெரம்பலூர் சப்-கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.

தா.பழூர் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய கண்டக்டரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 45). அரசு பஸ் கண்டக்டரான இவர் நேற்று சாலையோரத்தில் சென்றவாறு, அந்த வழியாக வந்தவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் திடீரென ஆவேசம் அடைந்த ஜெய்சங்கர் கையில் வைத்திருந்த அரிவாளால், சாலையோரத்தில் உள்ள ஒரு வீட்டில் வைக்கோல் அடுக்க பரண் அமைக்கும் வேலை செய்து கொண்டிருந்த கலைவாணன்(35) என்பவரின் தலையில் வெட்டியதாகவும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியதாகவும் கூறப்படுகிறது.
அருகில் இருந்த பொதுமக்கள் சுதாரித்துக்கொண்டு கலைவாணனை ஜெய்சங்கரிடம் இருந்து காப்பாற்றவும், ஜெய்சங்கரை தடுத்து நிறுத்தவும் முயற்சி செய்தனர். ஆனால் ஜெய்சங்கர் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். இதனால் கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து, ஜெய்சங்கரை தாக்கி, சாலையோரத்தில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த கலைவாணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கட்டி வைக்கப்பட்டிருந்த ஜெய்சங்கரை மீட்டனர். மேலும் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப போலீசார் முயன்றனர். ஆனால் ஆம்புலன்சில் ஏறாமல் போலீசாருடன், ஜெய்சங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
அங்கு விரைந்து வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தி.மு.க. 4 முறை, அ.தி.மு.க. 4 முறை, காங்கிரஸ் 4 முறை வென்ற ஜெயங்கொண்டம் தொகுதியின் கண்ணோட்டம்.
தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க தொகுதிகளில் ஜெயங்கொண்டமும் ஒன்றாகும். அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 தொகுதிகளை கொண்டது. தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழன் பெரிய கோவிலை கட்டினான். அவரது மகன் ராஜேந்திரசோழன் கங்கை கொண்டசோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தான்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றார். அதன் நினைவாக தஞ்சை பெரிய கோவிலை போல கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயத்தை அமைத்தார். யுனெஸ்கோ நிறுவனம் இந்த கோவிலை உலக புராதன சின்னமாக அறிவித்து போற்றி பாதுகாத்து வருகிறது. இவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க கோவில் ஜெயங்கொண்டம் தொகுதியில் அமைந்துள்ளது.

சோழ மன்னரால் வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரியான பொன்னேரி. இந்த பகுதியில்தான் அமைந்துள்ளது இந்தியாவிலேயே பழுப்பு நிலக்கரி உள்ள பகுதி ஜெயங்கொண்டம் பகுதியாகும். 1991-ல் வெற்றி பெற்ற கே.கே. சின்னப்பன் ஜெயலலிதாவின் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்ததும், 2006-ல் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்ததும் அரசியலில் பரப்பரப்பாக பேசப்பட்டதும் ஜெயங்கொண்டம் தொகுதியாகும்.

ஜெயங்கொண்டம் தொகுதியில் 1 நகராட்சி, 2 பேரூராட்சி, ஜெயங்கொண்டம், தா.பழுர் என 2 ஊராட்சி ஒன்றியங்களும் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 35 கிராம ஊராட்சிகளும், தா.பழுர் ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகளும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகளும் உள்ளது.
ஜெயங்கொண்டம் பகுதியில் 1,31,663 ஆண்வாக்காளர்களும், 1,34,347 பெண் வாக்காளர்களும், இதர 3 வாக்காளர்கள் உட்பட 2,66,013 வாக்காளர்கள் உள்ளனர்.

இதுவரை நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 4 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், பா.ம.க. 1 முறையும், சுயேட்சை 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2011-ல் நடைபெற்ற தேர்தலில் பேட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் இளவழகனை (77,601) விட பா.ம.க. வேட்பாளர் ஜெ.குரு (92,739), 15,138 வாக்குகள் பெற்று பா.ம.க. வெற்றி பெற்றது. 2016-ல் நடைபெற்ற தேர்தலில் பாமக வேட்பாளர் ஜெ.குருவை (53,380) விட அ.தி.மு.க. வேட்பாளர் ராம ஜெயலிங்கம் (75,431) 23,051 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஜெயங்கொண்டம் தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வன்னியர் ஓட்டாகதான் உள்ளது.
தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு
ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலைய பணி துவங்கப்படவேண்டும், பணிகள் துவங்கப்படாத நிலை ஏற்பட்டால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

தா.பழுர் ஒன்றியத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், நெசவாளர்களுக்கு கைத்தறி ஜவுளி பூங்கா அமைத்து கொடுக்க வேண்டும், வேலை வாய்ப்பை பெருக்க முந்திரி தொழிற்சாலை, ஜூஸ் தொழிற்சாலை, வாசனை திரவியங்கள் தொழிற்சாலை அமைக்க வேண்டும், பொன்னேரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி ஆழப்படுத்த வேண்டும், முந் திரி கொட்டைகளை அரசே கொள்முதல் செய்யவேண்டும், பொன்னேரிக்கும், சுத்தமல்லி நீர்தேக்கத்திற்கும் கொள்ளி டம் ஆற்றுநீரை வாய்க்கால் மூலம் கொண்டு வர வழித்தடம் அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
தேர்தல் வெற்றி

1952 கே.ஆர்.விஸ்வநாதன் (சுயேட்சை)
1957 கே.ஆர்.விஸ்வநாதன் (காங்கிரஸ்)
1962 ஜெகதாம்பாள் வேலாயுதம் (தி.மு.க.)
1967 ஏ-.கே.மூர்த்தி (தி.மு.க.)
1971 சின்னசாமி (தி.மு.க.)
1977 கருணாமூர்த்தி (அ.தி.மு.க.)
1980 தங்கவேல் (காங்கிரஸ்)
1984 மாசிலாமணி (காங்கிரஸ்)
1989 கணேசன் (தி.மு.க.)
1991 சின்னப்பன் (காங்கிரஸ்)
2001 அண்ணாதுரை (அ.தி.மு.க.)
2006 ராஜேந்திரன் (அ.தி.மு.க.)
2011 ஜெ.குரு (பா.ம.க.)
2016 ராமஜெயலிங்கம் (அ.தி.மு.க.)
தி.மு.க. 4 முறை, அ.தி.மு.க. 4 முறை, காங்கிரஸ் 4 முறை, பா.ம.க. ஒரு முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
தா.பழூர் அருகே சாலையோரத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் ஊராட்சியில் இலவச மாடு வழங்கும் திட்டத்தில் மாடுகளை பெற்ற பயனாளிகளுக்கு, மாட்டுக்கொட்டகை அமைக்கும் திட்டத்தின் கீழ் கொட்டகை அமைக்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர்.
அதில் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இதுவரை மாட்டுக்கொட்டகை அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்படவில்லை.ஊராட்சி மன்ற தலைவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் மாட்டுக்கொட்டகை அமைக்க பணி ஆணை பெற்றுத் தரப்பட்டதாக குற்றம்சாட்டி கோட்டியால் பாண்டிபஜார் நால்ரோடு பகுதியில் தா.பழூர்-சுத்தமல்லி சாலையில் சாலை மறியல் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து, சாலை மறியல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து இருகையூர் கிராம மக்கள், தங்களுக்கு மாட்டுக் கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலையோரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமானூர் அருகே கரும்பு வயலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட செங்கராயன் கட்டளை கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் சின்னமணி என்பவர் ஊரின் வடக்குப்புறம் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவரது கரும்பு வயலில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென பரவி கரும்புகள் எரிய தொடங்கின.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அரியலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தாலும், சுமார் 2 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
கரும்பு வயலுக்கு மேலே சென்ற மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பொறி எழுந்து இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

விக்கிரமங்கலம் அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் இந்திரா நகரை சேர்ந்தவர் மலர்(வயது 46). பட்டகட்டாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (24). சம்பவத்தன்று நாகமங்கலம் பஸ் நிறுத்தத்தில் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் கோவிந்தராசு ஆகிய இருவரும் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மலர், கோவிந்தராசுவிடம் உங்கள் உறவினர் சேகர் இறைச்சி வாங்கிய வகையில் தனக்கு பாக்கி இன்னும் தரவில்லை என்று கூறியுள்ளார். அப்போது, உதயகுமார் என் தந்தை எப்போது இறைச்சி வாங்கினார் என்று மலரிடம் கேட்டார். இதுதொடர்பாக உதயகுமாருக்கும், மலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது உதயகுமார், மலரின் சாதிப்பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் அப்பெண் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தார்.
அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் சொத்து பத்திரங்கள் மற்றும் பீரோவில் இருந்த பட்டுப்புடவைகளை எரித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த தாதம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் பொன்னம்பலம்(வயது 70). இவர் நேற்று மாலை 6 மணி அளவில் சிலால் கிராமத்தில் உள்ள கோவில் விசேஷத்திற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அவர் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே செல்ல முயன்றபோது உள்பக்கமாக கதவு தாழிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொன்னம்பலம் வீட்டின் பின்புறமாக சென்று பார்த்தபோது பின் கதவு திறக்கப்பட்டிருந்தது.
மேலும் வீட்டுக்குள் புகை மண்டலமாக இருந்தது. உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரது படுக்கை அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 20 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தன. மேலும் பீரோவில் இருந்த பல்வேறு சொத்து பத்திரங்கள், பட்டுப்புடவைகள் ஆகியவற்றை தீ வைத்து கொளுத்தி விட்டு மர்ம நபர்கள் நகை- பணத்துடன் தப்பிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினரை அவர் உதவிக்கு அழைத்து, படுக்கை அறையில் மேலும் தீ பரவாமல் தண்ணீர் ஊற்றி அணைத்தார். இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டதுடன், சொத்து பத்திரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூரில் செல்போன் காணாமல் போனதால் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பியக்குடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமாரின் மகன் நிஷாந்த்(வயது 15). இவர் இலந்தைகூடம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்ட நிஷாந்த், செல்போனை எடுத்து சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல், அதன் அருகே உள்ள பகுதியில் நண்பர்களுடன் விளையாடியுள்ளார். மேலும் அவருடைய செல்போனை, இலந்தைக்கூடம் கிராமத்தில் உள்ள அவருடைய நண்பர் ஒருவரது வீட்டில் சார்ஜ் போட்டுள்ளார். பின்னர் மாலையில் அவர் அங்கு சென்று பார்த்தபோது செல்போனை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த நிஷாந்த், வீட்டில் தனது பெற்றோர் செல்போன் பற்றி கேட்டால் என்ன சொல்வது என்ற அச்சத்துடனேயே வீட்டிற்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்றிருந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு திரும்பாததால், நிஷாந்த் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் தூக்குப்போட்டு தொங்கியதாக தெரிகிறது.
சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் நிஷாந்த் தூக்கில் தொங்கியதை கண்டு, அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நிஷாந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீப்பற்றிய வைக்கோலை டிரைவர் சாலையில் இறக்கிவிட்டு அலட்சியமாக சென்றது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நடுவலூர் செல்லும் சாலையில் ஒரு டிராக்டரில் நேற்று மதியம் வைக்கோல் ஏற்றி வரப்பட்டது. நால்ரோடு பகுதியில் நடுவலூருக்கு மிக அருகில் சாலையில் அந்த டிராக்டர் வந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக வைக்கோலில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. அந்த வழியாக பின்னால் வந்த வாகன ஓட்டிகள், டிராக்டர் டிரைவரிடம் வைக்கோல் தீப்பற்றி எரிவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், டிராக்டரை உடனடியாக நிறுத்தி, வைக்கோல் பாரத்தை டிராக்டரில் இருந்து சாலையில் இறக்கிவிட்டு டிராக்டரோடு சென்றுவிட்டார். இந்நிலையில் சாலையில் இறக்கப்பட்ட வைக்கோல் மளமளவென எரிந்து தீ நாலாபுறமும் பரவியது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதை கண்டு, ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் தீயை உடனடியாக அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தா.பழூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வைக்கோல் எரிந்த சாலையின் அருகே நிலக்கடலை வயல்கள் மட்டுமே இருந்ததாலும், அருகில் குடியிருப்பு பகுதிகள் இல்லாததாலும் காற்றில் பறந்த தீப்பொறிகளால் அதிர்ஷ்டவமாக பெரும் விபத்து ஏற்படவில்லை. டிராக்டரில் அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தீப்பற்றிய வைக்கோலை டிரைவர் சாலையில் இறக்கிவிட்டு அலட்சியமாக சென்றது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரியலூரில் பஸ் நிலையம் அருகே அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை மறைப்பதற்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா வேட்டி, சேலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தாமரைக்குளம்:
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து அரியலூரில் பஸ் நிலையம் அருகே உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் துணிகளை கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.
இதில் சிலைகளை மறைப்பதற்கு தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கிய விலையில்லா வேட்டி, சேலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் பொதுமக்களுக்கு சேலைகள், வேட்டிகள் வழங்கியதில் முறைகேடு எதுவும் உள்ளதா என்று மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டத்தில் கல்லூரி சென்ற மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் வாசுகி(வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கல்லூரி சென்ற வாசுகி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பன்னீர் செல்வம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து 2 லாரிகளில் கொண்டு சென்ற 3,520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர்:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பறக்கும்படை அதிகாரி சரவணன் தலைமையில் அதிகாரிகள் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி சமத்துவபுரம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சென்னை கும்மிடிபூண்டியில் இருந்து தஞ்சைக்கு சென்ற 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு லாரி டிரைவர் வெறும் காலி அட்டைப்பெட்டிகளை எடுத்து செல்வதாக கூறி அதிகாரிகள் ஏமாற்றி லாரியை எடுத்து சென்றுள்ளார். மற்றொரு லாரியை மறித்து விசாரணை மேற்கொண்டதில் அதில் குக்கர்கள் இருப்பதும், அதில் தஞ்சை மாவட்ட அ.ம.மு.க.வினர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா என ஜெயலலிதா படம் மற்றும் டி.டி.வி. தினகரன் உருவப்படம் போட்டு கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக லாரியையும், குக்கர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பி சென்ற மற்றொரு லாரியை திருமானூர் கொள்ளிடம் பாலம் சோதனை சாவடிக்கு தொடர்பு கொண்டு லாரியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். தப்பிச்சென்ற லாரி திருமானூர் சோதனை சாவடியில் பிடிக்கப்பட்டு அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து 2 லாரிகளையும் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 2 லாரிகளிலும் ரூ.12 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரத்து 520 குக்கர்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த குக்கர்கள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என அரியலூர் சட்டமன்ற தேர்தல் அலுவலர் ஏழுமலை விசாரணை நடத்தி வருகிறார்.