என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஏரியில் பிணமாக மிதந்த இன்ஸ் பெக்டரின் மகள் உடலை மீட்டு விசாரணை
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர் இன்ஸ் பெக்டராக உள்ளார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.  இதில் 2&வது மகள்  காவியா (எ) கார்முகில் (16).

    இவர், சென்னையில் தனியார் பள்ளியில் பிளஸ்&1 படித்து வந்தார். இவரது சகோதரி பிளஸ்&2 படித்து வருகிறார். படிப்பு சம்பந்தமாக மன அழுத்தம் ஏற்பட்டதால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கார்முகில் வீட்டிற்கு வந்துள்ளார்.
    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் கார்முகிலை திடீரென காணவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங் களில் தேடியும் கிடைக் கவில்லை.

    இந்நிலையில் சிறுகடம்பூர் செல்லியம்மன்  கோயில் அருகே உள்ள ஏரியில் சடலமாக கார்முகில் மிதந்துள்ளதை பார்த்த அப்பகுதியினர், இரும்புலிக் குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கார்முகில்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    100 நாள் பணியாளர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
    அரியலூர்: 

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத்திட்டம்) பணி ஒதுக்கீடு செய்யும்போது ஒரு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு அதிக நாட்கள் பணி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், 

    மற்றொரு பகுதியை சேர்ந்தவர்களுக்கு மிகக் குறைந்த நாட்களே பணி ஒதுக்கீடு செய்வதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரியலூர்-திட்டக்குடி சாலையில் வயலப்பாடி பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் மற்றும் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்ததை நடத்தினர். அப்போது இனி வரும் காலங்களில் பாரபட்சமின்றி பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அனைவருக்கும் விரைவாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததை தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதே போல், அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் 100 நாள் வேலைக்கு காலை 7 மணிக்கு பணியாளர்கள் வந்து கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், வீட்டு வேலைகளால் காலை 7 மணிக்கு வேலைக்கு வர சாத்தியமில்லை எனவே வேலை நேரத்தை  9 மணி என மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவிந்தபுரம் பேருந்து நிறுத்தம் முன்பு பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

    தகவலறிந்து வந்த தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி 8.30 மணிக்கு வருகைதர கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொண்ட பணியாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
    ரேசன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே 1,400 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 
    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி, விளாங்குடி ஆகிய பகுதிகளில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல், கடத்தல் தொடர்பான குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். 

    அப்போது விளாங்குடி கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மினிலாரியை சோதனை செய்தனர். 
    இதில் தமிழக அரசால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொது விநியோகத்திட்ட ரேசஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது, 

    இதனை தொடர்ந்து வாகனத்தின் உரிமையாளரான மேல வரப்பன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். 

    அவர் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கால்நடைகளுக்கான தீவனத்திற்குமாவாக அரைத்து அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்பதற்காக கொண்டு செல்வது தெரியவந்தது. 

    மோகனை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத் தப்பட்ட மினி லாரியை வாகனத்தையும் அதிலிருந்த 1,400 கிலோ ரேஷன் அரிசியையும் கைப்பற்றி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
    சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூ கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து இவரது மகன் சின்னத்தம்பி (வயது 26) கூலி தொழிலாளி. 

    இவர் 10-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் தன்னை காதலிக்க கூறி வற்புறுத்தியுள்ளார். அதற்கு சிறுமி ஒத்துக்கொள்ளாத நிலையில், அவரை மிரட்டியதாகவும், 

    சில மாதங்களுக்கு பின்னர் சின்னத்தம்பி, அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து சின்னத்தம்பியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    விக்கிரமங்கலம் அடுத்த கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(வயது 22). இவர், அதேபகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதில், அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள பாண்டியன் மறுத்ததால், கடந்த 2018& ம் ஆண்டு விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.

    அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் பாண்டியனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் பாண்டியனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், கட்ட தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனையும், இளம் பெண்ணை ஏமாற்றியமைக்காக 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கட்டத்தவறினால் 1 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
    தொழில்நுட்பத்தை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அரியலூர் :

    அரியலூர் சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளியில், மாநில ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்க திட்டத்தின் சார்பில் பள்ளி பரிமாற்ற திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் தொடக்கி வைத்து பேசுகையில், இனி வரும் காலங்களில் இணையதள வாயிலாக தேர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எனவே மாணவர்கள் தற்போதைய தொழில்நுட்பத்தை சிறப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர் நடத்தும் பாடத்தில் சந்தேகங்களை கேட்க வேண்டும் என்றார்.

    மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி பேசுகையில், இந்த பள்ளி பரிமாற்ற திட்டம் கடந்த 2016- 17 கல்வி ஆண்டில் தொடங்கப் பட்டது. கிராமப் புற மாணவர்கள் நகர்ப்புற பள்ளிகளுக்கும், நகர்ப்புற மாணவர்கள் கிராமப்புற பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு,

    பள்ளிகளில் உள்ள கட்டமைப்புகள், வசதிகள் குறித்து அறிந்து கொள் வதற்காக இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

     இதே போல் லிங்கத்தடிமேடு கே.ஆர்.வி நடுநிலைப் பள்ளி மற்றும் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.
    ஆக்ரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள்,  அரசுக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதனால் அந்த வழியாக வயலுக்குச் செல்லமுடியாமல், பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் அழிந்து வருகிறது.

    மழை காலங்களிலும் தண்ணீர் தேங்குவதால் நாங்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இது பற்றி பல முறை  அதிகாரிகளிடம் மனு அளித்தும்  எந்த விதமான  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

    இதனை கேட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக தெரிவித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
    தொழிலாளியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நத்தவெளி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் வயது 30. தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரம் வெட்டும் வேலைக்காக சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

     உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சுத்தமல்லி பெரிய ஓடை அருகே வேப்பமரத்தில் சவுந்தரராஜன் தூக்கில் பிணமாக தொங்கினார்.இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் சவுந்தரராஜனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை காசிநாதன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்நிலையில் நேற்று காலை நத்தவெளி கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரராஜனின் உறவினர்கள் ஒன்றுகூடி தா.பழூர்- விளாங்குடி சாலையில் சுந்தரேசபுரத்தில்,  சவுந்தரராஜன் கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


    இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி, சவுந்தரராஜனின் உறவினர்களிடம் விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    தேசிய தொழிற்சான்றிதழ்களில் திருத்தம் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது

    2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையில் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய தொழிற் சான்றிதழ்களில் உள்ள திருத்தங்களை

    அதாவது பயிற்சியாளரின் பெயர், தந்தை பெயர், தாயின் பெயர், புகைப்பட மாற்றம் மற்றும் பயிற்சி பெற்ற தொழிற்பிரிவு பெயரில் உள்ள தவறுகள் ஆகிவற்றை திருத்தம் செய்து கொள்ள அடுத்த மாதம் மார்ச் 2ம் தேதி வரையில் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது.

    மேலும், நேரடியாக விண்ணப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பு என்றும், வேறு ஏதும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, தேசிய தொழிற் சான்றிதழ்களில் திருத்தங்கள் இருப்பின் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி எண்.04329-228408, செல்போன் எண்.9499055877 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
    மாணவி தற்கொலை விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தார். இவர், விடுதியில் தங்கியிருந்தபோது ஜன 9ம்&ந் தேதி விஷம் குடித்ததால், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஜன19&ந் தேதி இறந்தார்.

    விடுதி வார்டன் சகாயமேரி விடுதியில் அறையை சுத்தம் செய்ய சொன்னதாகவும், வரவு செலவு கணக்குகளை எழுதச் சொல்லி திட்டியதாகவும் மாணவி அளித்திருந்த வாக்குமூலத்தின் அடிப்படை யில், திருக்காட்டுப்பள்ளி போலீசார் சகாயமேரியை கைது செய்தனர். தற்போது சகாயமேரி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    இதற்கிடையே கடந்த மாதம் 17&ந் தேதி, மாணவி சிகிச்சையில் இருந்தபோது, முத்துவேல் என்பவர் எடுத்த வீடியோவில், மதம் மாறச்சொல்லி பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்தியதாக மாணவி கூறிய தகவல் வெளியானது. மேலும், பள்ளி நிர்வாகிகள் மதம் மாற வற்புறுத்தியதால் தான், தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் தந்தை முருகாணந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ இணை இயக்குநர் வித்யா குல்கர்னி தலைமையிலான அதிகாரிகள், மாணவி படித்த பள்ளி மற்றும் விடுதியில்  விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் மாணவியின் ஊரான வடுகபாளையம் கிராமத்துக்கு சிபிஐ டிஎஸ்பி ரவி தலைமையில், டிஎஸ்பி சந்தோஷ், ஆய்வாளர் சுமதி உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா மற்றும் மாணவியின் சகோதரர்களிடம் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி விட்டு சென்றனர்.
    உடையார்பாளையம் பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க.வெற்றி பெற்றுள்ளது.
    அரியலூர்:

    உடையார்பாளையம் பேரூராட்சியில் 14 வார்டுகளுக்கு, 14 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

    அதில் தி.மு.க. 8 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி கட்சிகள்2 இடங்களிலும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 8 இடங்களில் வெற்றி பெற்று உடையார்பாளையம் பேரூராட்சியை தி.மு.க. வசப்படுத்தியுள்ளது.

    வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம்
    1-வது வார்டு - ராதிகா (திமுக)
    2-வது வார்டு - அன்னக்கிளி (விசிக)
    3-வது வார்டு - அக்பர் அலி (காங்)
    4-வது வார்டு  - கீதா (சுயேட்சை)
    5-வது வார்டு - காந்திமதி (பா.ஜ.க)
    6-வது வார்டு - பிரபாகரன் (திமுக)
    7-வது வார்டு - கஸ்தூரி (திமுக)
    8-வது வார்டு - அன்பழகன் (திமுக)
    9-வது வார்டு - ஆனந்த்பாபு (திமுக)
    10-வது வார்டு - லதா (அதிமுக)
    11- வது வார்டு - செல்வராஜ் (திமுக)
    12-வது வார்டு -  சங்கர் (திமுக)
    13-வது வார்டு - திமுக அன்னபோஸ்ட்
    14-வது வார்டு - ராதாகிஷ்ணன் (சுயேட்சை)
    வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் அதிகமாக சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
    அரியலூர்:

    வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு, 15 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தி.மு.க. 7 இடங்களிலும் சுயேட்சைகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

    வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம்:

    1-வது வார்டு - மார்க்கிரேட் (திமுக)
    2-வது வார்டு - பாதிமா மேரி (சுயேட்சை)
    3-வது வார்டு - சின்னப்பன் (சுயேட்சை)
    4-வது வார்டு - ஸ்டிபன் (சுயேட்சை)
    5-வது வார்டு - ஜோசப் (சுயேட்சை)
    6-வது வார்டு - கெலன்மேரி (திமுக)
    7-வது வார்டு - ஆரோக்கிய ஜெயராஜ் (சுயேட்சை)
    8-வது வார்டு - அருள் ஜெசி (சுயேட்சை)
    9-வது வார்டு - செலின் சகாயம் (சுயேட்சை)
    10-வது வார்டு - கனிமொழி (திமுக)
    11- வது வார்டு - பெனிடா இளஞ்செழியன் (திமுக)
    12-வது வார்டு - ராஜா (சுயேட்சை)
    13-வது வார்டு - ஆலோசனை மேரி (திமுக)
    14-வது வார்டு - எட்வின் ஆர்தர் (திமுக)
    15-வது வார்டு - ஜான்சன் விக்டர் (திமுக)

    ×