என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசாரணை செய்து விட்டு வரும் சி.பி.ஐ. அதிகாரிகள்.
    X
    விசாரணை செய்து விட்டு வரும் சி.பி.ஐ. அதிகாரிகள்.

    மாணவி தற்கொலை விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

    மாணவி தற்கொலை விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தார். இவர், விடுதியில் தங்கியிருந்தபோது ஜன 9ம்&ந் தேதி விஷம் குடித்ததால், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஜன19&ந் தேதி இறந்தார்.

    விடுதி வார்டன் சகாயமேரி விடுதியில் அறையை சுத்தம் செய்ய சொன்னதாகவும், வரவு செலவு கணக்குகளை எழுதச் சொல்லி திட்டியதாகவும் மாணவி அளித்திருந்த வாக்குமூலத்தின் அடிப்படை யில், திருக்காட்டுப்பள்ளி போலீசார் சகாயமேரியை கைது செய்தனர். தற்போது சகாயமேரி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    இதற்கிடையே கடந்த மாதம் 17&ந் தேதி, மாணவி சிகிச்சையில் இருந்தபோது, முத்துவேல் என்பவர் எடுத்த வீடியோவில், மதம் மாறச்சொல்லி பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்தியதாக மாணவி கூறிய தகவல் வெளியானது. மேலும், பள்ளி நிர்வாகிகள் மதம் மாற வற்புறுத்தியதால் தான், தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் தந்தை முருகாணந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ இணை இயக்குநர் வித்யா குல்கர்னி தலைமையிலான அதிகாரிகள், மாணவி படித்த பள்ளி மற்றும் விடுதியில்  விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் மாணவியின் ஊரான வடுகபாளையம் கிராமத்துக்கு சிபிஐ டிஎஸ்பி ரவி தலைமையில், டிஎஸ்பி சந்தோஷ், ஆய்வாளர் சுமதி உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா மற்றும் மாணவியின் சகோதரர்களிடம் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி விட்டு சென்றனர்.
    Next Story
    ×