என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி பரிமாற்ற திட்டத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் தொடங்கி வைத்து பேசிய காட்சி.
தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
தொழில்நுட்பத்தை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளியில், மாநில ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்க திட்டத்தின் சார்பில் பள்ளி பரிமாற்ற திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் தொடக்கி வைத்து பேசுகையில், இனி வரும் காலங்களில் இணையதள வாயிலாக தேர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எனவே மாணவர்கள் தற்போதைய தொழில்நுட்பத்தை சிறப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர் நடத்தும் பாடத்தில் சந்தேகங்களை கேட்க வேண்டும் என்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி பேசுகையில், இந்த பள்ளி பரிமாற்ற திட்டம் கடந்த 2016- 17 கல்வி ஆண்டில் தொடங்கப் பட்டது. கிராமப் புற மாணவர்கள் நகர்ப்புற பள்ளிகளுக்கும், நகர்ப்புற மாணவர்கள் கிராமப்புற பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு,
பள்ளிகளில் உள்ள கட்டமைப்புகள், வசதிகள் குறித்து அறிந்து கொள் வதற்காக இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதே போல் லிங்கத்தடிமேடு கே.ஆர்.வி நடுநிலைப் பள்ளி மற்றும் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.
Next Story






