என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

    இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    விக்கிரமங்கலம் அடுத்த கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(வயது 22). இவர், அதேபகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதில், அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள பாண்டியன் மறுத்ததால், கடந்த 2018& ம் ஆண்டு விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.

    அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் பாண்டியனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் பாண்டியனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், கட்ட தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனையும், இளம் பெண்ணை ஏமாற்றியமைக்காக 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கட்டத்தவறினால் 1 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
    Next Story
    ×