என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியல் நடந்த போது எடுத்த படம்.
பொதுமக்கள் சாலை மறியல்
ஆக்ரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், அரசுக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதனால் அந்த வழியாக வயலுக்குச் செல்லமுடியாமல், பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் அழிந்து வருகிறது.
மழை காலங்களிலும் தண்ணீர் தேங்குவதால் நாங்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இது பற்றி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.
இதனை கேட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக தெரிவித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story