என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோட்ட மேலாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்.
  X
  கோட்ட மேலாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்.

  கால்பந்து போட்டியில் சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை அணி வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரெயில்வே கோட்ட கால்பந்து போட்டி: சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை அணி வெற்றி பெற்றது.
  சேலம்:

  தெற்கு ரெயில்வே கோட்டங்களுக்கு  இடை யிலான  ரெயில்வே பாது காப்புப் படையினருக்கான கால்பந்து போட்டி சென்னையில் உள்ள ஐ.சி.எப். மைதானத்தில்  நடைபெற்றது. 

  இதில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு  மற்றும் சென்னை ஐ.சி.எப். ரெயில்வே பாதுகாப்பு படை அணிகள் பங்கேற்றன.

  இறுதி ஆட்டத்தில் சேலம் மற்றும் பாலக்காடு  அணிகள் மோதின. இதில் சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. மேலும், சேலம் ரெயில்வே பாது காப்பு படை காவலர் ஸ்ரீ ஜேம்ஸ் ராஜா சிங் சிறந்த கோல்கீப்பராக விருது பெற்றார்.

  வெற்றி பெற்ற சேலம் ரயில்வே பாதுகாப்பு படை அணியினர் உதவி பாதுகாப்பு ஆணையர் ஸ்ரீ ரதீஷ் பாபு தலைமையில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர்   ஸ்ரீ கவுதம் ஸ்ரீனிவாசை சந்தித்தனர், அவர்களுக்கு  கோட்ட மேலாளர் பூங்கொத்து கொடுத்து  வாழ்த்து தெரிவித்தார்.
  Next Story
  ×