என் மலர்tooltip icon

    மத்திய பட்ஜெட் - 2022

    மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5 சதவீதமாக குறைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
    புது டெல்லி:

    மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்ததாவது:-

    பெரு நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும்.

    மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5 சதவீதமாக குறைக்கப்படும்.

    ஆடை தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும்.

    வைரங்கள், ரத்தினங்கள் மீதான சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும்.

    கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும்.

    மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5 சதவீதமாக குறைக்கப்படும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
    பாதுகாப்பு துறைக்கு தேவையான ராணுவ தளவாடங்களில் 60 சதவீதத்தை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    புதுடெல்லி:

    2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாதுகாப்பு துறையில் இறக்குமதிகள் குறைக்கப்படும். இத்துறையில் சுயசார்பு இந்தியாவை உருவாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    பாதுகாப்பு துறைக்கு தேவையான ராணுவ தளவாடங்களில் 60 சதவீதத்தை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

    3.8 கோடி குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடுத்தர மக்களின் வீட்டு வசதி திட்டங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    2022-2023-ம் நிதியாண்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    3.8 கோடி குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்த ரெயில்கள் கொண்டுவரப்படுகின்றன.

    புதுடெல்லி:

    2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் 2023-க்குள் 2 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு ரெயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

    உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரெயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகளுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

    நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்த ரெயில்கள் கொண்டுவரப்படுகின்றன.

    சிறந்த ஆற்றல் திறன் கொண்ட புதிய தலைமுறை வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 100 பிரதம கதி சக்தி ரெயில் முனையங்கள் அமைக்கப்படும்.

    சிறு விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரெயில்வே புதிய தயாரிப்புகளை உருவாக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்... 5ஜி மொபைல் சேவைகள் கொண்டு வரப்படும்- மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

    ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
    புது டெல்லி:

    மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசி வருவதாவது:-

    5ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டுவரப்படும். தொலைத்தொடர்பு துறையில் 5ஜி அடிப்படையில் சேவை வழங்க இந்த ஆண்டு அலைக்கற்றை ஏலம் விடப்படும்.

    ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் விற்பனை விரைவில் தொடங்கும்.

    ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும். டிஜிட்டல் கரன்சி மூலம் இனைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் பணத்திற்காக புதிய மத்திய வங்கி ஏற்படுத்தப்படும். 25 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்கள் அமைக்கப்படும்.

    மின்சார வாகனங்களுக்காக ஊரக பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். எலக்ட்ரிக் வாகங்களுக்கான பேட்டரிகளை மாற்றும் வசதி கொண்டு வரப்படும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
    இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் முக்கிய வங்கி அமைப்புடன் இணைக்கப்படும் என்று மத்திய நிதிமந்திரி அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற 
    மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

    அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க, திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகளை அமைக்கும். 

    சிப் இணைக்கப்பட்ட இ-பாஸ்போர்ட்கள் வெளியிடப்படும்.

    நகர்ப்புற திட்டமிடலுக்காக உயர்மட்ட குழு அமைக்கப்படும்.

    அடுத்த கட்டமாக எளிதாக தொழில் செய்ய நடவடிக்கைகள் தொடங்கப்படும்.

    இந்தியாவில் உள்ள அனைத்து 1.5 லட்சம் தபால் நிலையங்களும் முக்கிய வங்கி அமைப்புடன் இணைக்கப்படும்.

    இது நிதி வைப்பு மற்றும் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஏ.டி.எம்.கள் மூலம் கணக்குகளை கையாள உதவும்.

    தபால் அலுவலக வங்கி கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணப் பரிமாற்றத்தை ஆன்லைன் மூலம் பெற முடியும்.

    குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

    தற்போது, ​​தபால் நிலையங்கள், இந்தியா போஸ்டல் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் சேமிப்பு கணக்கு சேவைகள் மற்றும் பேமெண்ட் வங்கி சேவைகளை வழங்குகின்றன.

    இவ்வாறு மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1 முதல் 12 வகுப்புகளுக்கு அனைத்து பிராந்திய மொழிகளில் துணைக் கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    புது டெல்லி:

    பாராளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாரமான்  தாக்கல் செய்து பேசினார்.
    அதன் விபரம் வருமாறு :

    கல்வியை வழங்க டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டங்களான 
    மிஷன் சக்தி, மிஷன் வாத்சல்யா, அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 போன்ற 
    திட்டங்களை மத்திய அரசு முழுமையாகச் சீரமைத்துள்ளது

    இயற்கை, பூஜ்ஜிய பட்ஜெட் மற்றும் இயற்கை விவசாயம், நவீன விவசாயம் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேளாண் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களைத் திருத்துவதற்கு மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.

    கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட கல்வி இழப்பை ஈடுசெய்ய
    1-வகுப்பு-1-டிவி சேனல் 200 டிவி சேனல்களாக விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் 1 முதல் 12 வகுப்புகளுக்கு அனைத்து பிராந்திய மொழிகளில் 
    துணைக் கல்வியை வழங்க முடியும்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த வளர்ச்சியை வழங்க 
    மூன்று திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    இதற்காக 23 தேசிய மனநல மையங்கள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
    புது டெல்லி:

    மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசி வருவதாவது:-

    கொரோனா பெருந்தொற்று எல்லா வயதினருக்கும் மனநலப் பிரச்சினைகளை அதிகப்படுத்தியுள்ளது. இதை சரி செய்வதற்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங் பெறும் வகையில் தேசிய மனநல சுகாதார திட்டம் தொடங்கப்படும். 

    இதற்காக நோடல் மையம் மற்றும் பெங்களூர் ஐஐடியின் தொழில்நுட்ப உதவியுடன் 23 தேசிய மனநல மையங்கள் அமைக்கப்படும்.

    112 மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு நீக்கம், சுகாதார மேம்பாட்டு திட்டம் அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
    25,000 கி.மீ. தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது
    புது டெல்லி:

    2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார் 

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த  பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளுக்கான அம்ரித் கல் பொருளாதாரத்தின் அடித்தளத்தை அமைக்க முயற்சிக்கிறது.

    ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது.

    மேக் இன் இந்தியா' மூலம் 6 மில்லியன் புதிய வேலைகளை உருவாக்க முடியும்.

    2021-22 பட்ஜெட்டில் பொது முதலீடு மற்றும் மூலதனச் செலவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

    2022-23ல் தேசிய நெடுஞ்சாலைகள் 25,000 கி.மீ. தூரம் அமைக்கப்படும் .

    மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம் .

    வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை.

    400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ‘ஒன் ஸ்டேசன், ஒன் பிராடக்ட்’ திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
    புது டெல்லி:

    மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசி வருவதாவது:-

    சிறுகுறு தொழில்களுக்கான அவசர கடன் உறுதி திட்டம் மார்ச் 2023-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகிறது.

    நாடு  முழுவதும் ரசாயனமற்ற இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

    நாடு முழுவதும் 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். ‘ஒன் ஸ்டேசன், ஒன் பிராடக்ட்’ திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
    ஏழை, நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறினார்.
    புது டெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசி வருவதாவது:-

    கதிசக்தி திட்டத்தின் கீழ் போக்குவரத்து கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

    பிரதமரின் கதிசக்தி உற்பத்தி அதிகரிப்பு போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம்- பொதுத்துறை முதலீட்டை அதிகரிப்பதே நோக்கம்.

    ஏழை, நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என நிர்மலா சீதாரமான் கூறினார்.
    புது டெல்லி:

    2022-23 நிதியாண்டுக்கான பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாரமான்.  

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    நாம் கொரோனா காலக்கட்டத்தில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறோம்.

    தொலைநோக்கு திட்டங்களுடன் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம்.

    டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    மத்திய பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    ×