என் மலர்
இந்தியா

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
மேக் இன் இந்தியா மூலம் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் - மத்திய பட்ஜெட்டில் தகவல்
25,000 கி.மீ. தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது
புது டெல்லி:
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளுக்கான அம்ரித் கல் பொருளாதாரத்தின் அடித்தளத்தை அமைக்க முயற்சிக்கிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா' மூலம் 6 மில்லியன் புதிய வேலைகளை உருவாக்க முடியும்.
2021-22 பட்ஜெட்டில் பொது முதலீடு மற்றும் மூலதனச் செலவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2022-23ல் தேசிய நெடுஞ்சாலைகள் 25,000 கி.மீ. தூரம் அமைக்கப்படும் .
மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம் .
வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை.
400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story






