என் மலர்
மத்திய பட்ஜெட் - 2022
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் விவரங்கள் அடங்கிய டெப்லெட் உடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துவிட்டு பாராளுமன்றம் வந்தார்.
புதுடெல்லி:
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சக அதிகாரிகளுடன் பாராளுமன்றம் வந்துள்ளார்.
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களை கவர கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வருமான வரி உச்சரவம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படுமா?, வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா? என பல்வேறு எதிர்பார்ப்புகள் மத்திய பட்ஜெட் குறித்து எழுந்துள்ளன.
முன்னதாக, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் விவரங்கள் அடங்கிய டெப்லெட் (Tablet) உடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.
கொரோனா தொற்று இருந்தபோதிலும் விவசாயிகள் 2020-21-ம் ஆண்டில் 30 கோடி டன் உணவு தானியங்களையும், 33 கோடி தோட்டக்கலை பொருட்களையும் உற்பத்தி செய்துள்ளனர் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.
பாராளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.
ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்:
* ஒரு வருடத்துக்குள் 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளோம். 70 சதவீதத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.
* எதிர்காலத்தில் சுகாதார நெருக்கடிக்கு நாட்டை தயார் படுத்தும் விதமாக ரூ.64 ஆயிரம் கோடியிலான பிரதம மந்திரி ‘ஆயுஷ்மாட் பாரத்’ சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் அமைக்கப்படுகிறது.
* ‘ஹர்கர் ஜல்’ திட்டத்தின் கீழ் 6 கோடிக்கு அதிகமான கிராம குடும்பங்கள் குடிநீரை பெறுகின்றன.
* இந்தியாவின் விவசாய ஏற்றுமதி ரூ.3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
* கொரோனா தொற்று இருந்தபோதிலும் விவசாயிகள் 2020-21-ம் ஆண்டில் 30 கோடி டன் உணவு தானியங்களையும், 33 கோடி தோட்டக்கலை பொருட்களையும் உற்பத்தி செய்துள்ளனர்.
* 433 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை அரசு கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் 50 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
* பிரதமரின் கிசான் திட்டம் மூலம் 11 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் ரூ.1.80 லட்சம் கோடி பெற்றுள்ளனர். விவசாயத் துறையில் இது பெரிய மாற்றமாகும்.
* பாலின சமத்துவத்தை கொண்டுவர பெண்களின் திருமண வயதை 21 ஆக அரசு உயர்த்தி உள்ளது.
* 2016-ம் ஆண்டு முதல் 56 வெவ்வேறு துறைகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது 6 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுத்தது.
* இந்த நிதியாண்டில் முதல் 7 மாதங்களில் இந்தியா 48 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிய நேரடி முதலீட்டில் பெற்றது. இது நாட்டின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாகும்.
* பாதுகாப்பு ஒப்பந்தங்களில் மேக் இன் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆயுதப்படைகள் பயன்படுத்தும் 209 பொருட்கள் இறக்குமதி செய்யப்படாது.
* கதிசக்தி மாஸ்டர் பிளான் இந்தியாவில் பல மாதிரி போக்குவரத்தில் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது.
* பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக 2070-ம் ஆண்டுக்குள் இந்தியா நிகர பூஜ்ஜிய உமிழ்வை இலக்காக கொண்டுள்ளது.
* 2014 மார்ச்சில் 90 ஆயிரமாக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் தற்போது 1.40 லட்சம் கி.மீட்டருக்கு அதிகமான நெடுஞ்சாலையை பெற்றுள்ளது.
* 10 புதிய மெட்ரோ ரெயில் பாதைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 8 மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான பயணிகள் பயன் அடைவார்கள்.
* ரூ.4,500 கோடி முதலீட்டில் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பகுதிகள் மற்றும் ஆடை பூங்காக்கள் அரசால் அமைக்கப்படுகிறது.
* டெல்லி-மும்பையை இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான விரைவு சாலை விரைவில் முடிக்கப்படும். 21 கிரீன் பீல்டு விமான நிலையங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
* கடந்த 7 ஆண்டுகளில் 24 ஆயிரம் கி.மீட்டர் ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாக மதிப்பதில்லை - ராகுல் காந்தி வருத்தம்
நாடு முழுவதும் 23 பசுமை வழிச்சாலை திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளன. டெல்லி முதல் மும்பை வரையிலான எக்ஸ்பிரஸ் வே திட்டம் விரைவில் நிறைவடையும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-
இந்தியா தனது 75-வது சுதந்திரதின ஆண்டை கொண்டாடி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் வணக்கங்கள். வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டன. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா திகழ்கிறது. கொரோனா தடுப்பூசி நம் நாட்டிலேயே தயாரித்ததால் நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
ஒரு வருடத்துக்குள் 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளோம். கொரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த காலங்களை விட தற்போது இந்தியாவில் சுகாதார கட்டமைப்பில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை மக்கள் சுகாதார திட்டங்களை பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்தது. உலகிற்கு ஏராளமான மருந்து பொருட்களை இந்தியா கொடுத்து உதவி இருக்கிறது.
சமுதாயத்தில் சமநிலை இருக்க வேண்டும் என அம்பேத்கரின் எண்ணத்தை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. நேரடி மானியம் மூலம் ஏழைகள் பணம் பெறுவதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது.
கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் ஏராளமான பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்து இருக்கிறது.
கொரோனா கட்டுப்பாடுகளில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாயிகளுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தி பொருட்கள் 33 சதவீதம் உயர்ந்துள்ளது.
பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் சரியான காலத்தில் வழங்கப்பட்டது.
மத்திய அரசு அமைத்துள்ள உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் விவசாயிகளுக்கு பெரிய உதவியை வழங்கியுள்ளது. சிறு விவசாயிகளுக்கு உதவுவதுதான் மத்திய அரசின் திட்டங்களின் நோக்கமாகும். சிறுதானியங்களை உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. நாடு முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரம்பரியமான மழைநீர் சேகரிப்பு முறைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக’’ என்ற குறளின்படி பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டம் பெண்கள் முன்னேற வழிவகை செய்துள்ளது. இஸ்லாமிய பெண்கள் பெரும் சவால்களை சந்தித்து வந்த முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள் பயிற்சிகளை பெற்றுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
‘ஸ்டார்ட் அப்’ திட்டங்கள் இந்தியாவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. ‘ஸ்டார்ட் அப்’ திட்டங்கள் மூலம் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொழில்நுட்ப உற்பத்தி துறையில் இந்தியா தற்போது உலக அளவில் முதன்மையான இடத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக சிறு-குறு, நடுத்தர தொழில்கள் இருக்கின்றன. சிறு-குறு தொழில் துறையினர் சரியான காலத்தில் சரியான நிதிகளை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்கிறது.
அலைபேசி உருவாக்கும் முக்கியமான மையங்களில் இந்தியாவும் உலகளாவிய அளவில் முன்னிலையில் உள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் 13 லட்சம் சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலன் அடைந்துள்ளன.
உள்நாட்டு கட்டமைப்பு மேம்படுத்துதலை முழு அளவில் செயல்படுத்தி வருவதால் அனைத்து துறைகளும் வேகமான வளர்ச்சியை பெற்று வருகின்றன. கிராமப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் 23 பசுமை வழிச்சாலை திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளன. டெல்லி முதல் மும்பை வரையிலான எக்ஸ்பிரஸ் வே திட்டம் விரைவில் நிறைவடையும். கடந்த ஓராண்டில் மட்டும் 33 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சாலைகள் போடப்பட்டுள்ளன.
ஆளில்லா ரெயில்வே சேவையை மேற்கொள்ளும் திட்டங்கள் விரைவாக நடைபெற்று வருகிறது.
நாட்டிலேயே மிகப்பெரிய பசுமை வழி விமான நிலையம் நொய்டாவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் ஏராளமான புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. பாதுகாப்புத் துறையில் சுயசார்பு முறையில் செயல்படுவதை அரசு உறுதி செய்து வருகிறது.
‘டிரோன்’ தொழில் நுட்பத்தில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிலாளர் மற்றும் வங்கிகள் சார்ந்த விதிகள் சீர்படுத்தப்பட்டுள்ளன.
பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவிகள் செய்துள்ளதாக ஐ.நா. பாராட்டி உள்ளது.
சூரிய ஒளி மின்சக்தியை அதிக அளவில் பயன்படுத்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை மேம்படுத்துவதற்காக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மேம்படுத்துவதற்காக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அருணாச்சலபிரதேசத்தின் இட்டா நகரில் விரைவில் புதிய விமான நிலையம் தொடங்கப்பட இருக்கிறது. நக்சல் பாதிப்புகள் அதிகம் இருந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதில் புதிய சகாப்தம் தொடங்கி இருக்கிறது.
நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டு இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 126-ல் இருந்து 70 ஆக குறைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெயில் மற்றும் விமான இணைப்புகளை அதிக அளவில் செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.

அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியதை அடுத்து இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அவரது உரையின் விபரம் வருமாறு:
நாட்டின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து ஏராளமான திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. பாதுகாப்பு துறைக்கான தளவாட பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.தேஜஸ் போர் விமானம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது
உலகிலேயே இந்தியாவின் தொழில்துறை சிறந்து விளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு துறையிலும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி வசூல் கடந்த ஒரு சில மாதங்களில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.

திருவள்ளுவரின் கற்க கசடற எனும் குறளுக்கு இணங்க புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளூர் மொழிகள் ஊக்குவிக்கப்படுகின்றன,முக்கியமான நுழைவுத் தேர்வுகளை இந்திய மொழிகளில் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஏழைகளுக்கு இலவச உணவு பொருள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்படுத்தப் பட்டுள்ளது.சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது .கொரோனாவை கட்டுப் படுத்துவதில் இந்திய தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவை அரசு தாக்கல்செய்துள்ளது.பெண்கள் அதிகாரமளித்தல் மத்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்.இவ்வாறு தமது உரையில் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாராக இருக்கிறோம்: பிரதமர் மோடி உறுதி
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் பிரதமர் மோடி.
பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்துகிறார். நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த செசனுக்கு அனைத்து எம்.பி.க்களையும் வரவேற்கிறேன். இன்றைய உலகளாவிய சூழ்நிலையில் இந்தியாவுக்காக ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்த அமர்வு நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து உலகில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. விவாதங்கள் மற்றும் திறந்த மனதுடன் விவாதங்கள் ஆகியவை உலகளாவிய தாக்கத்திற்கு ஒரு முக்கிய வாய்ப்பாக மாறும்.
அனைத்து எம்.பி.க்களும், அரசியல் கட்சிகளும் திறந்த மனதுடன் தரமான விவாதங்களை நடத்தி நாட்டை விரைவாக வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வ உதவுவார்கள் என்று நம்புகிறேன்.
பல மாநில தேர்தல்கள் அமர்வுகளையும் விவாதங்களையும் பாதிக்கும் என்பது உண்மைதான். ஆனால் அனைத்து எம்.பி.க்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன், தேர்தல்கள் தொடரும். ஆனால் பட்ஜெட் அமர்வு முழு ஆண்டுக்கான திட்டத்தை வகுக்கிறது. இந்த அமர்வை நாம் எவ்வளவு பயனுள்ளதாக ஆக்குகிறோமோ, அது ஆண்டின் பிற்பகுதியில் நாட்டை பொருளாதார உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும். நாடாளுமன்ற திறந்த மனதோடு தங்களது கருத்துகளை முன் வைக்கலாம். அனைத்து பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாராக இருக்கறோம்.’’ என்றார்.