என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாக மதிப்பதில்லை - ராகுல் காந்தி வருத்தம்

    இந்த வெட்கக்கேடான உண்மையை ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    கடந்த வாரம், டெல்லியின் கஸ்தூரிபா நகரில் இளம் பெண் ஒருவர் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டதுடன். கடுமையாக தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் டெல்லி போலீசார் பதினொரு பேரை கைது செய்தனர். 

    பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை சந்தித்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், மேலும் பலரை கைது செய்யவும் டெல்லி காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறியிருந்தார். 

    இந்த நிலையில் இளம் பெண் தாக்கப்படும் வீடியோ குறித்து  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    கசப்பான உண்மை என்னவென்றால், பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை.இந்த வெட்கக்கேடான உண்மை ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். 20 வயது பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ இதை அம்பலப்படுத்துகிறது.சமூகத்தில் குழப்பமான போக்கு, மிகவும் கவலைக்கிடமான முகத்தை அம்பலப்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×