என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

X
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
திருவள்ளுவரின் குறளுக்கு இணங்க புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது - பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை
By
மாலை மலர்31 Jan 2022 7:00 AM GMT (Updated: 1 Feb 2022 3:08 AM GMT)

அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியதை அடுத்து இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அவரது உரையின் விபரம் வருமாறு:
நாட்டின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து ஏராளமான திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. பாதுகாப்பு துறைக்கான தளவாட பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.தேஜஸ் போர் விமானம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது
உலகிலேயே இந்தியாவின் தொழில்துறை சிறந்து விளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு துறையிலும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி வசூல் கடந்த ஒரு சில மாதங்களில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.

திருவள்ளுவரின் கற்க கசடற எனும் குறளுக்கு இணங்க புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளூர் மொழிகள் ஊக்குவிக்கப்படுகின்றன,முக்கியமான நுழைவுத் தேர்வுகளை இந்திய மொழிகளில் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஏழைகளுக்கு இலவச உணவு பொருள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்படுத்தப் பட்டுள்ளது.சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது .கொரோனாவை கட்டுப் படுத்துவதில் இந்திய தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவை அரசு தாக்கல்செய்துள்ளது.பெண்கள் அதிகாரமளித்தல் மத்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்.இவ்வாறு தமது உரையில் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாராக இருக்கிறோம்: பிரதமர் மோடி உறுதி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
