என் மலர்
செய்திகள்

செல்போன் பாட்டுபோல் உள்ளது- விஜயகாந்த் பேச்சு பற்றி துரைமுருகன் கிண்டல்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசுவது செல்போனில் ஒலிக்கும் பாட்டு போன்று இருப்பதாக தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் கிண்டலாக கூறினார்.#MKStalin #DuraiMurugan #Vijayakanth
ஆலந்தூர்:
தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குட்கா வழக்கு விசாரணையில் உண்மை வெளிவரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, ஆசிரியர்கள் போராட்டம் அனைத்தையும் பார்க்கும்போது இங்கு ஒரு செயல்படாத அரசு இருப்பதுதான் தெரிகிறது.
அவர்களை பொறுத்தவரை அடுத்து தேர்தலில் நிற்க வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. இருக்கும் நாட்களில் அறுவடை செய்து விட்டு போய்விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த ஆட்சியில் எதையும் எதிர்பார்க்க முடியாது.
எது வேண்டுமென்றாலும், எந்த காரியம் ஆனாலும் நாமே சாதிக்க வேண்டும்.

மம்தா பானர்ஜிக்கு தி.மு.க. சார்பில் வாழ்த்து மட்டும்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவு தெரிவிப்பது பற்றி செயற்குழு, பொதுக்குழுதான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயகாந்த், மு.க.ஸ்டாலின் பற்றி தெரிவித்துள்ள கருத்து குறித்து நிருபர்கள் கேட்டதும், “விஜயகாந்த் என்றாலே தெரியாதது போல் யாரு விஜயகாந்தா...? செல்போனில் போடும் பாட்டு பற்றி எல்லாம் கேட்காதீர்கள்” என்றார். #MKStalin #DuraiMurugan #Vijayakanth

Next Story