என் மலர்
தெலுங்கானா
- தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
- கிங் பிஷர் பீரை விரும்பி குடித்து வந்த மது பிரியர்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மதுக்கடை நடத்துபவர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பீர் மது பிரியர் ஒருவர் நேற்று ஜெகத்யாலா கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் தெலுங்கானாவில் உள்ள புறநகர் பகுதிகளில் கிங்பிஷர் பீர் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மதுபான கடைகளில் கிங் பிஷர் பீர் விற்பனை செய்யப்படுவது இல்லை.
இதனால் கிங் பிஷர் பீரை விரும்பி குடித்து வந்த மது பிரியர்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். எனவே நகர்ப்புறங்களிலும் பீர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
மனுவை வாங்கி படித்த கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மதுக்கடைகளில் கிங்பிஷர் பீர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக மனுதாரரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
- இந்தியா உள்பட உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.
- பணியில் இருந்து நீக்கப்பட்டவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது. ஏற்கனவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த ஹர்ஷ் விஜய் வர்கியா என்பவரை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கி உள்ளது.
சிறந்த பணியாளர் என்று விருது வாங்கிய அவரை பணியில் இருந்து கூகுள் நீக்கியது தொடர்பாக, ஹர்ஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "நான் ஏன்?" "திறமைக்கு இடம் இல்லையா...?" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
- வாலிபர் நடனமாடி மயங்கி விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
- பிப்ரவரி 22-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது 24 வயது போலீசார் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.
திருப்பதி:
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் முத்யம் (வயது 19). இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் உள்ள பார்டி கிராமத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்றார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இசை நடனம் என திருமண வரவேற்பு நிகழ்ச்சி களை கட்டியது. இதனால் வாலிபர் முத்யம் கொண்டாட்ட மனநிலையில் இருந்தார்.
அப்போது விருந்தினர்கள் முன்னிலையில் ஒரு பிரபலமான இசைக்கு நடனமாடினான்.
இதனை உறவினர்கள் வெகுவாக ரசித்தனர். மேலும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். நடனமாடிக்கொண்டிருந்த போது, முத்யம் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.
விருந்தினர்கள் அவரை பைன்சா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
வாலிபர் நடனமாடி மயங்கி விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
4 நாட்களில் தெலுங்கானாவில் இதுபோன்ற 2-வது சம்பவம் நடந்துள்ளது.
பிப்ரவரி 22-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது 24 வயது போலீசார் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.
இந்த சம்பவங்களால் தெலுங்கானாவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- தலையில் பலத்த காயமடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாளுக்கியா சர்க்கிளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு நேற்று ஒரு இளம்பெண் வந்தார். அவர் செல்போனில் பேசியபடியே குடியிருப்பில் வசிக்கும் நபரை பார்க்க வேண்டும் என்று காவலாளிடம் கூறினார்.
இதையடுத்து காவலாளியும் உள்ளே செல்ல அனுமதித்தார். இந்த நிலையில் குடியிருப்பின் 11-வது மாடிக்கு சென்ற அந்த பெண் திடீரென்று கீழே குதித்தார். கீழே நின்ற சிவப்பு நிற கார் மீது அவர் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மேலிருந்து கீழே விழுந்ததில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.
இதுபற்றிஅறிந்ததும் ஐகிரவுண்டு போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவர் சஞ்சய் நகரை சேர்ந்த பிரக்ருதி (வயது 18) என்றும், அவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்ததும் தெரிந்தது.
அவர் என்ன காரணத்திற்காக சஞ்சய் நகரில் இருந்து சாளுக்கியா சர்க்கிளுக்கு வந்து தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. அதுகுறித்து மாணவியின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரக்ருதி தற்கொலை செய்து கொள்ள லிப்ட் வழியாக செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராகுல்காந்தி எப்போதும் சீனாவைப் பற்றி பேசுகிறார்.
- இந்திய படைகளை இழிவாக காட்டும் போக்கை காங்கிரஸ் இன்னும் கைவிடவில்லை.
ஐதராபாத் :
மத்திய மந்திரி அனுராக் தாக்குர், ஐதராபாத் சென்றார். ஐதராபாத் அருகே கட்டப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு மையத்தை திறந்து வைத்தார்.
அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அனுராக் தாகூர் கூறியதாவது:-
ராகுல்காந்தி எப்போதும் சீனாவைப் பற்றி பேசுகிறார். ஆனால், அவரது குடும்பத்துக்கு சொந்தமான ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனா அளித்த நன்கொடை பற்றி அவர் எதுவும் பேசுவது இல்லை.
அந்த நன்கொடை பற்றி கேட்ட கேள்விக்கு அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. சீனா நமது எல்லை பகுதியை ஆக்கிரமிக்க முயன்றபோது, அவர் சீன அதிகாரிகளுடன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதற்கும் இதுவரை பதில் அளிக்கவில்லை.
சீன ஆக்கிரமிப்புக்கு நமது பாதுகாப்பு படைகள் உரிய பதிலடி கொடுக்கும்போது, நமது படைகளை ராகுல்காந்தி இழிவுபடுத்துகிறார்.
இந்திய படைகள் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து ராகுல்காந்தியும், அவருடைய கட்சியினரும் சந்தேகம் எழுப்புகிறார்கள். படையினரின் மனஉறுதியை சீர்குலைக்க பார்க்கிறார்கள். இந்திய படைகளை இழிவாக காட்டும் போக்கை காங்கிரஸ் இன்னும் கைவிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுமக்கள் செல்போன் எண்ணுடன் பதிவுசெய்து, திரையில் தோன்றும் கட்டளைகளைப் பின்பற்றி அதனை தொடர வேண்டும்.
- உடல் நலனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் போன்ற பிற விவரங்களையும் வழங்குகிறது.
திருப்பதி:
ஒரு காலத்தில் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் உடல் எடையிடும் எந்திரம் இருந்தது, அது உங்கள் எடையை உங்களுக்குத் தெரிவிக்கும் மற்றும் அன்றைய நாளுக்கான ராசி பலனையும் கொடுக்கும்.
வண்ண விளக்குகளுடன் ஜொலிக்கும் இந்த எந்திரத்தில் ஏறி நின்று எடை மட்டுமின்றி தங்களின் ராசி பலனை அறியவும் ஆர்வத்துடன் காசு போட்டு பரிசோதனை செய்து கொள்வார்கள். காலம் மாற, இந்த எந்திரங்கள் அரிதாகிவிட்டன.
எடை தெரிந்து கொள்வது மட்டுமின்றி பிற முக்கியத் தேவைகளையும் கண்டறியும் அதேபோன்ற எந்திரங்களை மீண்டும் தெலுங்கானா மாநிலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
எடை போடும் எந்திரம் போல தயாரிக்கப்பட்ட இது தானாக செயல்படும்.
பொதுமக்கள் செல்போன் எண்ணுடன் பதிவுசெய்து, திரையில் தோன்றும் கட்டளைகளைப் பின்பற்றி அதனை தொடர வேண்டும்.
"உடல் எடை, உயரம், ரத்த அழுத்தம் போன்றவற்றை தெரிவிக்கும். மிக முக்கியமாக, இது உடல் கொழுப்பைப் பற்றிய விவரங்களையும், உடற்பயிற்சி நிலைகளில் எங்கே இருக்கிறீர்கள், எங்கு இருக்க வேண்டும். மேலும் உடல் நலனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் போன்ற பிற விவரங்களையும் வழங்குகிறது.
மேலும் சில நிமிடங்களில் வாட்ஸ்அப்பில் உடல் ஆய்வு குறித்து விரிவான அறிக்கையை அனுப்பி வைக்கும்.
சுகாதார சோதனைகளை வேடிக்கையாக இந்த எந்திரம் வெளிக்காட்டும்.இது முற்றிலும் தெலுங்கானாவில் தயாரிக்கப்பட்டது மற்றும் பயன்படுத்த எளிதானது.
இந்த எந்திரங்கள் ஐதராபாத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் கிடைக்கின்றன, அவற்றை அனைத்து பஸ் நிலையங்களில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- குழந்தை தப்பிக்க முயல போராடும்போது, நாய்கள் சிறுவனின் ஆடைகளை இழுக்கத் தொடங்குகின.
- சிறுவன் இறந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருநாய்கள் 5 வயது சிறுவனை சுற்றி வளைத்து கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்பர்பேட்டையில் உள்ள சிறுவனின் தந்தை காவலாளியாக பணிபுரிந்த வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த சம்பவத்தின் நடுங்க வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளானபோது பிரதீப் என்ற குழந்தை தனது தந்தையுடன் வேலைக்கு சென்றுள்ளார். அந்த வீடியோவில், குழந்தை தனியாக நடந்து செல்வது போல் உள்ளது. சிறிது நேரத்தில், மூன்று நாய்கள் குழந்தையை நோக்கி வந்து சூழ்ந்து கடிக்க தொடங்கின. பயந்துபோன சிறுவன் ஓட முயற்சிக்கிறான். ஆனால் நாய்கள் சிறுவனை நெருங்கி தரையில் தள்ளுகின்றன.
குழந்தை தப்பிக்க முயல போராடும்போது, நாய்கள் சிறுவனின் ஆடைகளை இழுக்கத் தொடங்குகின. ஒவ்வொரு முறையும் சிறுவன் எழுந்திருக்க முயலும்போதும் நாய்கள் தாக்கி கீழே தள்ளி விடுகின்றன.
பின்னர், சிறுவனை நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறின. பெரிய நாய்கள் குழந்தையை கடித்து ஒரு புறம் இழுத்துச் செல்லும்போது மூன்று சிறிய நாய்கள் பின்தொடர்கின்றன. குழந்தை, சம்பவ இடத்திலேயே இறந்தது வீடியோவில் பதிவாகி உள்ளது.
சிறுவன் இறந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- நீண்ட நேரம் ஆகியும் மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்திற்கு வரவில்லை.
- மணப்பெண்ணின் தந்தை மணமகன் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை மற்றும் உறவினர்களை திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவர் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்தது.
மணமகனின் வீட்டார் பெண்ணின் வீட்டாரிடம் கட்டில், மெத்தை, பீரோ, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக கேட்டு இருந்தனர்.
அதன்படி மணப்பெண்ணின் வீட்டார் அவர்கள் கேட்டதை விட குறைவான பொருட்களை திருமணத்திற்கு முந்தின நாள் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் அவர்கள் கொண்டு வந்த கட்டில் உள்ளிட்ட பர்னீச்சர்கள் பழைய பொருட்களாக இருந்தது.
மணப்பெண்ணின் உறவினர்கள் மண்டபத்தில் விருந்து சமைத்து தங்களது உறவினர்களுடன் மாப்பிள்ளை வீட்டாருக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதையடுத்து மணப்பெண்ணின் தந்தை மணமகன் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை மற்றும் உறவினர்களை திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அப்போது மணமகனின் வீட்டார் நாங்கள் கேட்ட சீர்வரிசை பொருட்களை தரவில்லை. மேலும் நீங்கள் கொண்டு வந்துள்ள கட்டில், பீரோ உள்ளிட்ட பர்னீச்சர்கள் ஏற்கனவே பயன்படுத்தியது போல் பழையதாக உள்ளது.
இந்த திருமணத்தில் எங்களது மகனுக்கு விருப்பமில்லை என அநாகரிகமாக பேசி திருப்பி அனுப்பினர்.
அப்போது மணமகளின் தந்தை பர்னீச்சர் பொருட்கள் புதியதாக வாங்கி தருவதாகவும் தற்போது திருமணத்தை நிறுத்த வேண்டாம். இல்லை என்றால் உறவினர்கள் முன்னிலையில் அவமானம் ஆகிவிடும் என பலமுறை கெஞ்சி பார்த்தும் அவர்கள் மனம் இறங்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந் மணப்பெண்ணின் தந்தை வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக மணமகன் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இளம் பெண்ணின் செல்போன் என்னை வாங்கிவிட்டு இரவு நேரங்களில் போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள விகார பாத், பீரன் செருவு பகுதியை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார்.
இதனால் இளம் பெண் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார். இளம் பெண் வேலைக்குச் சென்று வரும்போது தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சுமித் குமார் சர்மா (33) என்பவர் இளம் பெண்ணை பின் தொடர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். எப்படியோ இளம் பெண்ணின் செல்போன் என்னை வாங்கிவிட்டு இரவு நேரங்களில் போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இளம் பெண் வேலைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பாச்சுபள்ளியை சேர்ந்த கார் டிரைவர் சுபம் சர்மா (29) என்பவருடன்சுமித் குமார் சர்மா காரில் சென்று இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் தூக்கி போட்டுக் கொண்டு மறைவான இடத்திற்கு சென்றனர்.
அங்கு வைத்து இளம் பெண்ணிற்கு வாயில் மதுவை ஊற்றினர். இதனால் இளம்பெண் மயக்கம் அடைந்தார். அப்போது இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பின்னர் அவர் அணிந்து இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு காரில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்றனர். இதில் அவர் காயமடைந்தார்.
இதுகுறித்து இளம்பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கார் டிரைவர் சுபம் சர்மா மற்றும் சுமித் குமார் சர்மா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இந்தியாவில் ஆப்கானிஸ்தானாக தெலுங்கானா மாநிலம் மாறி வருகிறது.
- தலிபானாக முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உள்ளார் என ஆந்திர முதல் மந்திரி சகோதரி கூறியுள்ளார்.
ஐதராபாத்:
ஆந்திர முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெகன்மோகனின் ரெட்டி. இவரது சகோதரி ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கானாவில் மெஹபூபாபாத் நகரில் ஷர்மிளா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சந்திரசேகர ராவ் சர்வாதிகாரி, கொடுங்கோலனாக உள்ளார். இங்கு இந்திய அரசியல் சாசனம் அமலில் இல்லை. சந்திரசேகர ராவின் சாசனம் தான் உள்ளது. இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தெலுங்கானா உள்ளது. அதன் தலிபானாக சந்திரசேகர ராவ் உள்ளார் என தெரிவித்தார்.
இதையடுத்து, ஷர்மிளாவைக் கண்டித்து சந்திரசேகர ராவ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது கொடும்பாவியை எரித்ததுடன் மாநிலத்தை விட்டு வெளியேறு என கோஷம் போட்டனர்.
- வைர நகைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுப்பதற்காக விற்பனையாளரும், கார் டிரைவரும் நேற்று மாலை காரில் கொண்டு சென்றனர்.
- ஆர்டர் செய்திருந்த நகைகளை விற்பனையாளர் மட்டும் சென்று கொடுத்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது ரூ.7 கோடி மதிப்பிலான வைர நகைகளுடன் கார் டிரைவர் மாயமானது தெரியவந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மாதப்பூர் மைஹோம் பூஜா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ராதிகா.
இவர் மாதப்பூரில் நகைக் கடை நடத்தி வருகிறார். ஆர்டரின் பெயரில் நகை கடைகளுக்கு மொத்தமாகவும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை சப்ளை செய்து வந்தார். இவரிடம் அக்சய் (வயது 30) என்ற விற்பனையாளரும், சீனிவாஸ் (26) என்ற கார் டிரைவரும் வேலை செய்து வந்தனர்.
நகைக் கடை உரிமையாளரிடம் ஆர்டர் கொடுக்கும் நகைகளை அக்சய் மற்றும் சீனிவாஸ் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று சப்ளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நகை கடை உரிமையாளர் வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த அனுஷா என்பவர் ரூ.50 லட்சத்திற்கு நகைகளை ஆர்டர் செய்து இருந்தார். மதுரா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அனுஷா நகைகளை அங்கு அனுப்பி வைக்குமாறு கூறினார்.
இதையடுத்து அனுஷாவிற்கு கொடுக்கவேண்டிய ரூ 50 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.7 கோடி மதிப்பிலான வைர நகைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுப்பதற்காக விற்பனையாளரும், கார் டிரைவரும் நேற்று மாலை காரில் கொண்டு சென்றனர். அனுஷாவின் உறவினர் வீட்டிற்கு சென்று அவர் ஆர்டர் செய்திருந்த நகைகளை விற்பனையாளர் மட்டும் சென்று கொடுத்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது ரூ.7 கோடி மதிப்பிலான வைர நகைகளுடன் கார் டிரைவர் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து அக்சய் நகைக்கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். எஸ்.ஆர்.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.ஆர்.எஸ் கருவி உதவியுடன் கார் எங்கு உள்ளது என தேடி வருகின்றனர்.
மேலும் கார் டிரைவர் காரை எங்கேயாவது விட்டுவிட்டு நகைகளுடன் தலைமறைவாகி விட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை இளம்பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலைக்கு உடந்தையாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மெஹபூபா பாத் மண்டலம், டோர்னக்கல் புறநகர் தாண்டா பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது தம்பி கோபி. கோபியின் மனைவி குமாரி. கோபி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குமாரி மாமியார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது கோபியின் அண்ணன் ராஜுடன் குமாரிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதில் உடன்பாடு இல்லாத ராஜு இது தவறான உறவு என கூறி வந்தார். இருப்பினும் ராஜுவின் அறிவுரையை பொருட்படுத்தாத குமாரி கணவர் இல்லாத ஆசையை நிறைவேற்ற கோரி அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார்.
ஒரு கட்டத்தில் ராஜு கள்ளத்தொடர்புக்கு மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. தனது ஆசையை நிறைவேற்ற மறுக்கும் மைத்துனரை கொலை செய்ய குமாரி முடிவு செய்தார்.
இதையடுத்து 2 வாலிபர்களை அழைத்து வந்து தூங்கிக் கொண்டு இருந்த ராஜுவை கல்லால் தாக்கி கொலை செய்தார். பின்னர் வாலிபர்கள் உதவியுடன் ராஜுவின் உடலை பள்ளம் தோண்டி புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்தார்.
ராஜு திடீரென காணாமல் போனதால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பஞ்சாயத்து கூட்டி குமாரியிடம் விசாரணை நடத்தினர். முதலில் மறுத்த அவர் பஞ்சாயத்தாரரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை கக்கினார்.
ஆசைக்கு இணங்க மறுத்ததால் மைத்துனரை வாலிபர்கள் உதவியுடன் கல்லால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குமாரியை சராமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரியை கைது செய்தனர்.
மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை இளம்பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






