என் மலர்
பஞ்சாப்
- ஊழலுக்கு எதிரான புகார்களை பஞ்சாப் விஜிலென்ஸ் ஆய்வு செய்கிறது.
- பஞ்சாப்பை ஆளும் ஆம் த்மி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசில், ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளின் ஆடியோ அல்லது வீடியோக்களை அனுப்புவதற்கு மக்களை அனுமதிக்கும் ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து, ஊழலுக்கு எதிரான புகார்களை பஞ்சாப் விஜிலென்ஸ் ஆய்வு செய்கிறது.
அதன்படி, ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனில் இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும், ஊழலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தினமும் 2500 புகார்கள் பெறப்படுவதாக பஞ்சாப்பை ஆளும் ஆம் த்மி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில், எங்கள் கனவு-- ஊழல் இல்லாத பஞ்சாப் என்று குறிப்பிட்டிருந்தது.
- குப்பை கொட்டுவதை நிறுத்தும்படி மாநகராட்சி பலமுறை அறிவுறுத்தியும் கேட்கவில்லை.
- சண்டிகர் செக்டார்-2ல் 44, 45, 6 மற்றும் 7 ஆகிய எண்கள் முதல்வரின் இல்லத்தின் ஒரு பகுதியாகும்
சண்டிகர்:
பஞ்சாப் முதல்வரின் சண்டிகர் இல்லத்திற்கு 10000 ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை செலுத்தும்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பட்டாலியன் துணைக் கண்காணிப்பாளர் ஹர்ஜிந்தர் சிங் பெயரில் சலான் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சி அனுப்பி உள்ள சலானில், 'வீட்டு எண்-7, செக்டார்-2, சண்டிகர்' என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்ளூர் பாஜக கவுன்சிலர் மகேஷிந்தர் சிங் சித்து கூறுகையில், "முதல்வரின் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குப்பைகளை வீட்டுக்கு வெளியே கொட்டுவதாக பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் புகார் தெரிவித்தனர். குப்பை கொட்டுவதை நிறுத்தும்படி மாநகராட்சி பலமுறை அறிவுறுத்தியும் கேட்கவில்லை. இதனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.செக்டார்-2ல் 44, 45, 6 மற்றும் 7 ஆகிய எண்கள் முதல்வரின் இல்லத்தின் ஒரு பகுதியாகும்" என்றார்.
- 2007 முதல் 2012 வரை பஞ்சாப் விதான் சபாவின் சபாநாயகராகவும் பணியாற்றினார்.
- இவரது மறைவுக்கு சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டசபை சபாநாயகரும், மூத்த எஸ்ஏடி தலைவருமான நிர்மல் சிங் கஹ்லோன் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.
நிர்மல் சிங்கின் மறைவை உறுதி செய்த அகாலி தளத்தின் மூத்த தலைவர் தல்ஜித் சிங் சீமா தனது டுவிட்டர் பக்கத்தில், " குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஃபதேகர் சூரியன் அருகே உள்ள தாதுஜோத் கிராமத்தில் கஹ்லோனின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கஹ்லோன் 1997 முதல் 2002 வரை அகாலி அரசாங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கான அமைச்சராக இருந்தார். அவர் 2007 முதல் 2012 வரை பஞ்சாப் விதான் சபாவின் சபாநாயகராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில், இவரது மறைவுக்கு சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "மூத்த அகாலி தலைவரும் முன்னாள் பஞ்சாப் விதான் சபா சபாநாயகருமான நிர்மல் சிங் கஹ்லோனின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். கஹ்லோன் நம் அனைவருக்கும் உத்வேகம் அளித்தவர். அவருடைய புத்திசாலித்தனமான ஆலோசனை எப்போதும் தவறவிடப்படும். இந்த நேரத்தில் கஹ்லோன் குடும்பத்திற்கு ஆதரவாக நிற்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
- பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது சிறுவன் வழி தவறி சர்வதேச எல்லைக்கு வந்தது தெரிந்தது.
- இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லையான பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் சிறுவன் ஒருவன் அழுது கொண்டிருந்தான். இதை பார்த்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அச்சிறுவனை மீட்டனர்.
பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது சிறுவனான அவன் வழி தவறி சர்வதேச எல்லைக்கு வந்தது தெரிந்தது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சிறுவனை அவனது தந்தை மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- ஆம் ஆத்மி அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது.
- இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.
பஞ்சாபில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். இது தற்போது பஞ்சாப் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முந்தைய அரசாங்கங்கள் தேர்தல்களின் போது வாக்குறுதிகளை அளித்தன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் நேரத்தில் ஐந்து ஆண்டுகள் கடந்துவிடும். ஆனால் எங்கள் அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது. இன்று பஞ்சாப் மக்களுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு உத்தரவாதத்தை நிறைவேற்றப்போகிறோம். இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கடைசி பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
- பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து இந்தப் பாடல் 33 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.
சண்டிகர்:
பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு இசையமைத்த இந்த பாடல் சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாயைப் பற்றிப் பேசுகிறது. இந்த இசை வீடியோ கடந்த ஜூன் 23 அன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாபி பாடகரான சித்து மூஸ் வாலாவின் கடைசி பாடலான பஞ்சாபின் தண்ணீர் பிரச்சினை குறித்து பேசும் எஸ்ஒய்எல் (SYL) என்ற பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து இந்தப் பாடல் தற்போது வரை 2.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் 33 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- முதுகுத்தண்டில் நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
- அமரீந்தர சிங் நாளை வீடு திரும்பிவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் லோக் காங்கிரஸ் நிறுவனரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங். இவர், கடந்த 2002 - 2007 மற்றும் பின்னர் 2017 - 2021 உட்பட ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் முதல்வராக பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், முதுகுத்தண்டில் நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமரீந்தர் சிங் நலமுடன் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் நாளை வீடு திரும்பிவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நநேர்திர மோடி அமரீந்தர் சிங்கிற்கு தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு நலம் விசாரித்துள்ளார்.






