என் மலர்
மகாராஷ்டிரா
- சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர்.
- ராகுல் நர்வேகர் 160-க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று சபாநயகராக தேர்வாகியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாக செயல்பட்டு, பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். புதிய முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதல் மந்திரியாக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இதையடுத்து ஷிண்டே தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.
சட்டசபை கூட்டத்தின் முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி சார்பில் அக்கட்சியின் எம்எல்ஏ ராகுல் நர்வேகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராகுல் நர்வேகர் 160-க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று சபாநயகராக தேர்வாகியுள்ளார்.
- மகாராஷ்டிராவில் இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.
- ஷிண்டே தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாக செயல்பட்டு, பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். புதிய முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதல் மந்திரியாக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இதையடுத்து ஷிண்டே தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. இதற்காக காலையிலேயே சட்டசபைக்கு வந்த ஷிண்டே அணியினர், சட்டசபை கட்சி அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். 'சிவசேனா சட்டமன்றக் கட்சியின் அறிவுறுத்தலின்படி அலுவலகம் மூடப்பட்டுள்ளது' என வெள்ளை பேப்பரில் எழுதி கதவில் ஒட்டினர்.
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று அரசுக்கான ஆதரவை தெரிவிப்பதற்காக ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் மும்பை வந்து சேர்ந்தனர். சட்டசபை கூட்டத்தின் முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிடுகின்றனர். நாளை அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
- சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த 29-ம் தேதி இரவு முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
- மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கோவாவில் இருந்து மும்பை வந்து சேர்ந்தார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இதன்மூலம் அம்மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்மந்திரியாக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் புதிய அரசு நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கோவாவில் இருந்து மும்பை வந்து சேர்ந்தார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி ஏக்நாத் ஷிண்டேவை அக்கட்சியில் இருந்து நீக்கினார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
- ஜாவேத் இளம்பெண்ணை கடத்தி சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினார்.
- ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்தார். இதனால் ஜாவேத் வலுக்கட்டாயமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
மும்பை:
மும்பையை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு ஜாவேத் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி போனில் பேசி வந்தனர்.
சம்பவத்தன்று ஜாவேத் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு ரெயில் நிலையத்துக்கு வருமாறு கூறினார். இதை நம்பி அந்த பெண் அங்கு சென்றார்.
உடனே ஜாவேத் அந்த பெண்ணை கடத்தி சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்தார். இதனால் ஜாவேத் வலுக்கட்டாயமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் ஜாவேத்தின் நண்பர்கள் 3 பேரும் அங்கு வந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக பெண்ணின் தந்தை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
- உங்களுக்கு என் மீது கோபம் இருந்தால், என் மீது காட்ட வேண்டும்.
- ஆரேகாலனியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து உள்ளேன்.
மும்பை
மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. எனினும் தேர்தல் முடிவுக்கு பிறகு சிவசேனா முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டுகளுக்கு கேட்டது. இதனால் ஏற்பட்ட மோதலால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி முறிந்தது. மேலும் சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.
இந்தநிலையில் சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை திரட்டி பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தார். இந்தநிலையில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பா.ஜனதா, முதல்-மந்திரி பதவியை ஏக்நாத் ஷிண்டேக்கு வழங்கியது. இதனால் பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்து உள்ளார்.
இதுதொடர்பாக பா.ஜனதாவுக்கு முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கேள்வி கணைகளை தொடுத்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
சிவசேனா தொண்டன் என கூறிகொள்பவரை பா.ஜனதா முதல்-மந்திரி ஆக்கி உள்ளது. ஆனால் 2019-ல் சிவசேனாவுக்கு சூழற்சி முறையில் முதல்-மந்திரி பதவி தருவது தொடர்பான ஒப்பந்தமே நடக்கவில்லை என மறுத்தது ஏன்?. அப்போது பா.ஜனதா அதற்கு ஒப்புக்கொண்டு இருந்தால் அதிகார மாற்றம் அழகாகவும், கண்ணியமாகவும் நடந்து இருக்கும். தற்போது அடுத்த 2½ ஆண்டுகளுக்கு கூட உங்கள் முதல்-மந்திரி இல்லை. இதில் உங்களுக்கு என்ன கிடைத்தது?. அமித்ஷாவும் நானும் பேசியது போல நடந்து இருந்தால், அதிகார மாற்றம் நல்ல முறையில் நடந்து இருக்கும். நானும் முதல்-மந்திரி ஆகி இருக்க மாட்டேன். மகாவிகாஸ் அகாடியும் அமைக்கப்பட்டு இருக்காது.
2½ ஆண்டுகளுக்கு முன் சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் முதுகில் குத்தியவர்கள், ஏக்நாத் ஷிண்டேயை சிவசேனா முதல்-மந்திரி என கூறி தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர் சிவசேனா முதல்-மந்திரி இல்லை. சிவசேனா இல்லாமல், சிவசேனா முதல்-மந்திரி இருக்க முடியாது. நீங்கள் (பா.ஜனதா) எனக்கு துரோகம் செய்தது போல, ஆரேகாலனி விவகாரத்தில் மும்பைக்கும் செய்துவிட வேண்டாம்.
மெட்ரோ பணிமனை திட்டத்தை காஞ்சூர் மார்க்கில் இருந்து ஆரேகாலனிக்கு மாற்றும் புதிய அரசின் முடிவு வருத்தமளிக்கிறது. உங்களுக்கு என் மீது கோபம் இருந்தால், என் மீது காட்ட வேண்டும். மும்பையின் இதயத்தில் குத்த வேண்டாம். ஆரேகாலனி யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. மெட்ரோ பணிமனை காஞ்சூர்மார்க்கில் இருக்கட்டும். ஆரேகாலனியில் வேண்டாம். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்னுடன் உள்ளனர். ஆரேகாலனியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து உள்ளேன். வனவிலங்குகள் அந்த காட்டில் உள்ளன. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி, மக்களின் வாக்குகளை வீணாக்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜே.பி. நட்டா தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவியேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
- சிவசோவை உடைத்து மீண்டும் மாநிலத்தில் பா.ஜனதா அதிகாரத்தை கைப்பற்ற தீவிரமாக ஈடுபட்டவர் பட்னாவிஸ்.
மும்பை :
ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா ஆதரவுடன் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்து உள்ளனர். நேற்று ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்று கொண்டனர். முன்னதாக ஏக்நாத் ஷிண்டேயை புதிய முதல்-மந்திரி என அறிவித்த போது, தேவேந்திர பட்னாவிஸ் மாநில அரசில் அங்கம் வகிக்க மாட்டேன் என கூறினார்.
பின்னர் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவியேற்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.
சிவசோவை உடைத்து மீண்டும் மாநிலத்தில் பா.ஜனதா அதிகாரத்தை கைப்பற்ற தீவிரமாக ஈடுபட்டவர் தேவேந்திர பட்னாவிஸ். எனவே முதல்-மந்திரி பதவி வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் மும்பை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதற்காக கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்ளவில்லை.
இந்தநிலையில் 3-ந் தேதி, 4 ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு சட்டபேரவை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் தேவேந்திர பட்னாவிஸ் மும்ரமாக இருப்பதால் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.
- ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
- துணை முதல்மந்திரியாக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இதன்மூலம் அம்மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்மந்திரியாக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
- நில மோசடி வழக்கில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையில் இன்று ஆஜரானார்.
- அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குடியிருப்பு வளாகத்தை மாற்றி கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கூடுதல் அவகாசம் கேட்டு சஞ்சய் ராவத் பதில் அனுப்பியிருந்தார். இதனால் ஜூலை 1ம் தேதி ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ வேட்புமனு தாக்கல்.
- சட்டசபை கூட்டத் தொடரை நடத்துவது குறித்து ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை.
மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே, வரும் 4ம் தேதி அம்மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இரண்டு நாட்கள் சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்வு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேக்கர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக அம்மாநில சட்டசபையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சபாநாயகர் பதவிக்கு போட்டி இருந்தால் வரும் 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 4ம் தேதி முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தங்கள் அணியில் 170 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், எங்களுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்றும் கூறினார்.
தமது ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை மும்பை வருவதாகவும், ஜூலை 3, 4 தேதிகளில் சட்டசபை கூட்டத்திற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- பால் தாக்கரேவால் ஈர்க்கப்பட்டு சிவசேனாவில் இணைந்தார் ஏக்நாத் ஷிண்டே.
- உத்தவ் தாக்கரேயின் வலதுகரம் ஏக்நாத் ஷிண்டே பால்தாக்கரே குடும்பத்தின் தீவிர விசுவாசி.
மும்பை :
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு பல உதாரணங்களை நமது நாடு கண்டுள்ளது.
அந்த வகையில் தான் சிவசேனா அதிருப்தி அணி தலைவரான 58 வயது ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக யாருமே எதிர்பாராத வகையில் பதவி ஏற்றுள்ளார். அதிலும் ஆட்டோ டிரைவராக வாழ்க்கையை தொடங்கிய அவர், இன்று அரசியல் சாசனத்தின் உயரிய பதவிகளில் ஒன்றான முதல்-மந்திரி பதவியை எட்டி பிடித்துள்ளார். இவர் மகாராஷ்டிரா சத்தாரா மாவட்டத்தில் உள்ள ஜவாலி தாலுகாவை சேர்ந்தவர்.
இவரது குடும்பம் வாழ்வாதாரத்திற்காக மாநில தலைநகர் மும்பை நோக்கி 1970-களில் இடம்பெயர்ந்தது. மும்பையை அடுத்த தானே நகரில் குடிபுகுந்தனர். ஏக்நாத் ஷிண்டே 11-ம் வகுப்பு வரை தானேயில் உள்ள பள்ளியில் படித்தார். பின்னர் படிப்பை நிறுத்திய அவர், சிறிது காலம் ஆட்டோ டிரைவராக இருந்தார். அந்த நேரத்தில் பால் தாக்கரேவால் ஈர்க்கப்பட்டு சிவசேனாவில் இணைந்தார். மண்ணின் மைந்தர் உரிமைக்காக சிவசேனா நடத்திய போராட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு வந்தார்.
அந்த நேரத்தில் தானேயில் பலம்வாய்ந்த சிவசேனா தலைவராக இருந்த ஆனந்த் திகேவுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 1997-ம் ஆண்டு ஆனந்த் திகே மூலமாக தானே மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஏக்நாத் ஷிண்டேவுக்கு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி கொண்ட அவர் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஏக்நாத் ஷிண்டேயின் மனைவி பெயர் லதா. இந்த தம்பதிக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே தற்போது கல்யாண் நாடாளுமன்ற தொகுதி சிவசேனா எம்.பி.யாக உள்ளார். ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி அணியை உருவாக்கிய நிலையில், தந்தையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் சொந்த ஊரில் நடந்த படகு விபத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் இளைய மகன்கள் திபேஷ் (வயது 11), சுபந்தா (7) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஏக்நாத் ஷிண்டேவின் வாழ்க்கையில் பேரிடியாக அமைந்தது. அப்போது, அவர் அரசியலில் இருந்து விலகி செல்ல இருந்தார். அந்த நேரத்தில் ஆனந்த் திகே, ஏக்நாத் ஷிண்டேவுக்கு உறுதுணையாக இருந்து அவரை மீண்டும் அரசியல் பாதையில் பயணிக்க செய்தார்.
இதற்கிடையே 2004-ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக ஏக்நாத் ஷிண்டே தேர்வானார். அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பால் தாக்கரே கொடுத்து இருந்தார். அதன்பிறகு ஏக்நாத் ஷிண்டே தானே மாவட்டத்தில் சிவசேனாவின் பலம் வாய்ந்த தலைவராக உருவெடுத்தார். கடந்த 2014-ம் ஆண்டு மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்வு ஆனார்.
அப்போது அமைந்த பா.ஜனதா- கூட்டணி ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டே மந்திரி ஆனார். அவருக்கு பொதுப்பணித்துறை, சுகாதாரம் ஆகிய முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு, 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வானார். உத்தவ் தாக்கரேயின் வலதுகரம் ஏக்நாத் ஷிண்டே பால்தாக்கரே குடும்பத்தின் தீவிர விசுவாசி. கட்சி பணிக்கு உத்தவ் தாக்கரேக்கு வலதுகரமாக இருந்தார். இதனால் உத்தவ் தாக்கரே ஆட்சியில் முக்கிய இலாகாவான நகர்புற மேம்பாட்டு துறை ஏக்நாத் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டது
இந்தநிலையில் கட்சியிலும், ஆட்சியிலும் தான் ஓரங்கட்டப்படுவதாக ஷிண்டே உணர்ந்தார். உத்தவ் தாக்கரே அவரது மகன் ஆதித்ய தாக்கரேயை கட்சியிலும், ஆட்சியிலும் வளர்த்து விட்டதும், அவர்கள் இருவரும் தனது இலாகாக்களில் தலையிட்டு வந்ததும் ஏக்நாத் ஷிண்டேக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. உத்தவ் தாக்கரே மீது மனகசப்புகள் ஏற்பட்டது.
மேலும் உத்தவ் தாக்கரே தனது சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்களை பல்வேறு காரணங்களால் நேரில் சந்திப்பதை தவிர்த்து வந்த நிலையில், உத்தவ் தாக்கரேயின் விசுவாசியாக கருதப்பட்ட ஏக்நாத் ஷிண்டேவிடம் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். இந்தநிலையில் தான் யாரும் எதிர்பாராத வகையில் அவர் பா.ஜனதாவுடன் இணைந்து மகாராஷ்டிரா ஆட்சி கனியை தனது வசமாக்கி உள்ளார்.
2019-ம் ஆண்டு தேர்தலில் சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே தான் தேர்வு செய்யப்பட்டார். சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தபோது ஏக்நாத் ஷிண்டே தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் கூட்டணி ஆட்சியை திறம்பட நடத்தி செல்ல உத்தவ் தாக்கரே தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேட்டுக்கொண்டார். எனவே அப்போது ஏக்நாத் ஷிண்டே ஏமாற்றம் அடைந்தார். தற்போது பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக ஏக்நாத் ஷிண்டேக்கு அந்த பதவி கிடைத்து இருக்கிறது.
- தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியான நிலையில் கடைசி நேரத்தில் திருப்பம் ஏற்பட்டது.
- கட்சி தலைமை கேட்டுக்கொண்டதையடுத்து, அமைச்சரவையில் சேர பட்னாவிஸ் சம்மதம் தெரிவித்தார்.
மும்பை:
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு இன்று புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆளும் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.
அதன்பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கினர். பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது.

துணை முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ்
ஆனால், கடைசி நேரத்தில் திருப்பம் ஏற்பட்டது. இன்று மாலையில், தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பட்னாவிஸ் அறிவித்தார். அதேசமயம் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறினார். அதன்பின்னர் கட்சி தலைமை கேட்டுக்கொண்டதையடுத்து, அமைச்சரவையில் சேர பட்னாவிஸ் சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
- பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.
- தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
மும்பை:
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி தந்த நிலையில், பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளை பாஜக தொடங்கியது.
பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், சிவசேனா அதிருப்தி குழுவின் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது. ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பட்னாவிஸ் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உள்ளார் என்று இன்று மதியம் வரை தகவல் வெளியானது.
ஆனால், இன்று மாலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.
இன்று இரவு 7.30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என பட்னாவிஸ் கூறினார். புதிய அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன், ஷிண்டேவின் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பேன் என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார்.






