என் மலர்
சண்டிகர்
- சண்டிகார் மாநிலத்தில் உள்ளது பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையம்.
- கடந்த 30-ந் தேதி பிரதமர் மோடி பேசிய 100-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது.
சண்டிகார் :
சண்டிகார் மாநிலத்தில் உள்ளது பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையம். மத்திய அரசு கல்வி நிறுவனமான இங்கு கடந்த 30-ந் தேதி பிரதமர் மோடி வானொலியில் பேசிய 100-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி ஒலிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லூரியில் படிக்கும் முதல் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் கண்டிப்பாக இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. கலந்து கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இருந்தபோதிலும், 36 மாணவிகள், அந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களில் 28 பேர் மூன்றாம் ஆண்டு மாணவிகள், 8 பேர் முதலாம் ஆண்டு மாணவிகள் என்று தெரியவந்தது.இதையடுத்து இந்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீசு ஒட்டப்பட்டது. அவர்கள் எச்சரிக்கப்பட்டபடி, ஒரு வாரத்திற்கு விடுதியைவிட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது என்று கல்லூரி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
- அம்ரித்பால் சிங்கை தப்பியோடிய குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.
- அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.
சண்டிகர்:
பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் இருந்து வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங்கை வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்தனர். அவரை மீட்க அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றை ஏந்திய ஆதரவாளர்களுடன் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். இதனால், பஞ்சாப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் எழுந்துள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.
அம்ரித்பால் சிங்கை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். ஆனாலும் அவர் போலீசில் சிக்காததால், அவர் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே, அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளரான பாப்பல்பிரீத் சிங், ஹோஷியார்பூரில் இருந்து சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி போலீசாரிடம் இருந்து அம்ரித்பால் தப்பியதில் இருந்து பாப்பல்பிரீத் அவருடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், அம்ரித்பால் சிங்கின் மற்றொரு முக்கிய கூட்டாளியான ஜோகா சிங் என்பவரை சர்ஹிந்த் பகுதியில் வைத்து பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர்.
இதனை டி.ஐ.ஜி. எல்லை சரக நரீந்தர் பார்கவ் உறுதி செய்துள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன், அம்ரித்பால் சிங்குடன் ஜோகா சிங் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் போலீசார் வெளியிட்டு தேடி வந்தனர்.
கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அம்ரித்பாலுடன் ஜோகா சிங் உதவியாக இருந்து வந்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர். அம்ரித்பாலை கடந்த மார்ச் 27-ம் தேதி பஞ்சாப்புக்கு திரும்ப கொண்டு வந்துவிட உதவியதுடன், நேரடி தொடர்பிலும் இருந்து வந்துள்ளார். அம்ரித்பாலுக்கு தேவையான தங்குமிடம் மற்றும் வாகன வசதிகளையும் அவர் செய்து கொடுத்துள்ளார் என பார்கவ் கூறியுள்ளார்.
- அட்டாரி வாகா எல்லை இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
- இங்கு இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படைவீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
இந்நிலையில், 74-வது குடியரசு தினத்தையொட்டி சர்வதேச எல்லையையொட்டி பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய ராணுவத்தினர் இனிப்பு பரிமாறிக்கொண்டனர்.
பஞ்சாப் மாநில எல்லையான வாகாவிலும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் பகிர்ந்தனர்.
- நள்ளிரவு 1 மணியளவில் போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது.
- காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது
சண்டிகர்.
பஞ்சாப் மாநிலத்தில் தரன்தரன் என்ற மாவட்டம் இருக்கிறது. பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே இந்த மாவட்டம் உள்ளது.
தரன்தரன் மாவட்டத்தில் அம்ரித்சர்-பதின்டா நெடுஞ்சாலையில் ஷர்கலி நகரில் போலீஸ் நிலையம் இருக்கிறது. இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் இந்த போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது.
போலீஸ் நிலையத்தின் சுவர், ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு போலீஸ் நிலையத்திற்குள் கையெறி குண்டு விழுந்தது. இந்த தாக்குதலால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
போலீஸ் நிலையத்தின் ஜன்னல், கதவு கண்ணாடி, சுவர் இந்த தாக்குதலில் சேதமடைந்தது. காலிஸ்தான் தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டாவின் சொந்த ஊர் ஷர்கலி ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பாகிஸ்தானில் உயிரிழந்தான்.
கடந்த மே மாதம் பஞ்சாப் போலீஸ் நுண்ணறிவு பிரிவு தலைமை அலுவலகத்தில் நடந்த ராக்கெட் லாஞ்சர் தாக்குதலில் ஹர்விந்தர் சிங்குக்கு தொடர்பு இருந்தது.
இதனால் தரன்தரன் மாவட்டத்தில் போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் தாக்குதலுக்கு காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் பின்னால் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லையோர மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதல் குறித்து புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. தடய நிபுணர்களும் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- காவி, வெள்ளை, பச்சை மற்றும் கருநீலம் என ஆடைகளை அணிந்து இருந்தனர்.
- மூவர்ணக் கொடி வடிவத்தில் நின்று கின்னஸ் சாதனை படைத்தனர்.
நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, சண்டிகர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சண்டிகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5,885 மாணவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து நின்று மனிதவடிவ பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கினர்.
இல்லந்தோறும் தேசிய கொடி ஏற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தையொட்டி நடைபெற்ற இதில் பங்கேற்ற மாணவர்கள், காவி, வெள்ளை, பச்சை மற்றும் கருநீலம் என தனித் தனியே ஆடைகளை அணிந்து வந்திருந்தனர்.
மனிதர்களை கொண்டு காற்றில் அசையும் தேசிய கொடியின் உருவம் அந்த மைதானத்தில் உருவாக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு நிறுவனம் செய்த முந்தைய சாதனையை இந்த புதிய சாதனை முறியடித்தது.
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
என்ஐடி அறக்கட்டளை மற்றும் சண்டிகர் பல்கலைக்கழகம் ஒன்றிணைத்து, தேசபக்தியின் உணர்வைக் கொண்டாடி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய விதம் முற்றிலும் பாராட்டுக்குரியது என ஆளுநர் புரோஹித் தெரிவித்துள்ளார்.
- மல்யுத்த வீரர் காளி கர்னாலுக்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்தது.
- இவ்விவகாரம் தொடர்பாக லூதியானா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
சண்டிகர் :
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில், பிரபல மல்யுத்த வீரர் காளி அங்குள்ள சுங்கச்சாவடி ஊழியர்களிடம் முரட்டுத்தனமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியுள்ளது. சம்பவத்தின் போது, சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர், காளியிடம் அடையாள அட்டையை கேட்டதாக தெரிகிறது. ஆனால் அப்போது அவர் தன்னை அறைந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால், சுங்கச்சாவடி ஊழியர்கள் காளியின் காரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். காருக்குள்ளே இருந்த காளி, சுங்கச்சாவடியை திறக்குமாறு ஊழியர்களிடம் கூறினாலும் அவர்கள் அதை செய்ய மறுத்துள்ளனர். அதனால் காரில் இருந்து இறங்கிய காளி அவர்களுடன் கோபமாக பேசுகிறார். அதனை தொடர்ந்து, காளிக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.
ஊழியர்களில் ஒருவர், நாங்கள் உங்களை காலணிகளால் அடிப்போம் என்று கூறுகிறார். மல்யுத்த வீரர் காளி, தனது காரில் லூதியானா வழியாக கர்னாலுக்குச் சென்று கொண்டிருந்தபோது பானிபட்-ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லடோவல் என்ற இடத்தில் ஒரு போலீஸ் அதிகாரி முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தது.
இதுகுறித்து காளி கூறுகையில், "சுங்கச்சாவடி ஊழியர்கள் என்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பினர். என்னை சுற்றி வளைத்து தவறாக நடந்துகொண்டனர். நேற்று, பஞ்சாபின் பில்லூரில் உள்ள சுங்கவரி ஊழியர் எனது காரை நிறுத்தி, செல்பிக்காக தவறாக நடந்து கொண்டார். நான் செல்பியை மறுத்தபோது, அவர்கள் இரக்கமின்றி இனவெறி கருத்துக்களைக் கூறினர். கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தினர்" என்று காளி கூறினார்.
இந்த நிலையில், மல்யுத்த ரசிகர்களால் பிரபலமாக 'தி கிரேட் காளி' என்று அழைக்கப்படும் மல்யுத்த வீரர் தலிப் எஸ் ராணா என்ற இயற்பெயர் கொண்ட காளி, இன்று இவ்விவகாரம் தொடர்பாக லூதியானாவில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அங்கு அவர் அளித்துள்ள புகாரில், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள நான் மறுத்ததால், சுங்கவரி ஊழியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காளி, "என்னிடம் தவறாக நடந்து கொண்ட டோல் பிளாசா ஊழியரைத் தவிர்க்க என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். என்னை தகாத வார்த்தைகளால் திட்டி தூண்டிவிட முயன்றார். நான் கர்னாலுக்குச் செல்லும் போது இந்தச் சம்பவம் நடந்தது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது" என்று கூறினார்.
- மதிய உணவு வேளை நேரத்தில் மைதானத்தில் ஏராளமான மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
- காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி.
பஞ்சாப் தலைநகர் சண்டிகர் செக்டார் 9 பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மதிய உணவு வேளை நேரத்தில் மைதானத்தில் ஏராளமான மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கிருந்த பெரிய மரம் ஒன்று மாணவர்கள் மீது திடீரென விழுந்தது. இதில், மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு தற்போது 48 வயதாகிறது.
- குர்பிரீத் கவுர் என்ற டாக்டரை பகவந்த் மான் மணக்கிறார்.
சண்டிகார் :
நடிகராக இருந்து அரசியலில் குதித்து, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து, இப்போது பஞ்சாப் மாநிலத்தின் முதல்-மந்திரியாக உயர்ந்துள்ளவர் பகவந்த் மான் (வயது 48). இவருக்கு ஏற்கனவே இந்தர்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் திருமணமாகி, சீரத், தில்ஷன் என 2 குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர்.
தற்போது இந்தர்பிரீத் கவுர், குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசிக்கிறார். இந்த நிலையில் பகவந்த் மானுக்கு 2-வது திருமணத்துக்கு அவரது தாயார் ஹர்பால் கவுரும், சகோதரி மான்பிரீத் கவுரும் ஏற்பாடு செய்துள்ளனர். குர்பிரீத் கவுர் என்ற டாக்டரை சண்டிகாரில் இன்று பகவந்த் மான் மணக்கிறார்.
மணவிழாவில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியோ ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளதாக சண்டிகாரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பேனா, மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
- மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்து முடிவு எட்டப்படவில்லை.
சண்டிகர்:
47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் 2 ஆம் நாளான இன்று பல்வேறு பொருட்களுக்கான வரிகளை அதிரடியாக உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சில தோல் பொருட்களுக்கனா வரி 5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பேனா, மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ஒப்பந்த பணிகளுக்கான ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும், அஞ்சலக சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி அஞ்சல் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.
அதேசமயம், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்து முடிவு எட்டப்படவில்லை.
அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- கூட்டாளியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
- ஐஏஎஸ் அதிகாரியின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாக சஞ்சய் பாப்லி லஞ்சம் வாங்கியதாக ஜூன் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கழிவுநீர் கால்வாய் அமைக்க டெண்டர் வழங்கியதில் 7 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சஞ்சய் பாப்லி மீது பஞ்சாப் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக அவரது கூட்டாளி சந்தீப் வாட்ஸ் என்பவரும் ஜலந்தரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சண்டிகரில் உள்ள சஞ்சய் பாப்லி வீட்டில் நேற்று அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஸ்டோர் ரூமில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் உள்பட மொத்தம் 12 கிலோ தங்கம், மூன்று கிலோ வெள்ளி, 4 ஆப்பிள் ஐபோன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இதனிடையே, ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் போப்லியின் மகன் துப்பாக்கிச் சூட்டில் சனிக்கிழமை உயிரிழந்தார். இதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இது குறித்த விசாரணையில் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரி சாஹல் தெரிவித்துள்ளார்.







