என் மலர்
பீகார்
- பீகாருக்கு மத்திய அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்.
- நம்மைப்போன்ற ஏழை மாநிலங்கள், தங்களைத்தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைதான் உள்ளது.
பாட்னா:
மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவதாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
பீகாரில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்த ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார், கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென கூட்டணி மாறினார். அவர் பா.ஜ.க. கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியில் சேர்ந்து புதிய அரசை அமைத்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவர் பாட்னாவில் நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவரிடம் எழுப்பிய கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மத்திய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்:- ஒருவர் என்ன எதிர்பார்க்க முடியும்? பீகாருக்கு மத்திய அரசு பெரிய அளவில் உதவ வேண்டும், சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வைத்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
கேள்வி:- மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்து நீங்கள் வெளியேறிய பிறகு நிலைமை மோசமாக மாறிவிட்டதா?
பதில்:- நாங்கள் கூட்டணியில் ஒன்றாக இருந்தபோதும் அவர்கள் மாநிலத்துக்கு என்று எதையும் செய்தது இல்லை. அவர்கள் அதைத்தான் இப்போதும் செய்கிறார்கள். ஏழ்மை நிலையில் உள்ள மாநிலங்களை முன்னேற்றாமல், அவர்கள் நாட்டை முன்னேற்றுவது குறித்து எப்படி எண்ண இயலும் என்பது எனக்கு வியப்பை அளிக்கிறது.
அவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. அவர்கள் அரசியல் ஆதாயம் எதிர்பார்க்கிற இடங்களில் மட்டுமே தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் அரசியல் லாபங்கள் குறித்து மிகையாக மதிப்பிடுவதுபோல தெரிகிறது.
நம்மைப்போன்ற ஏழை மாநிலங்கள், தங்களைத்தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைதான் உள்ளது. முன்பு மத்திய நிதி இல்லாதபோது அதைக் கடன் வாங்கி ஈடுகட்டினோம். இப்போது அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதுபோன்ற மத்திய அரசின் தலையீட்டை நாங்கள் ஒருபோதும் பார்த்தது கிடையாது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
- சிவான் மாவட்டத்தில் உள்ள பாலா கிராமத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 3 பேரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
சிவான்:
பீகாரில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பீகாரில் சரண், சிவான் மற்றும் பெகுசாரய் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
25-க்கும் மேற்பட்டோருக்கு பார்வை பறிபோனது. இந்த விவகாரம் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சிவான் மாவட்டத்தில் உள்ள லகாரி நபிகஞ்ச் பகுதியில் உள்ள பாலா கிராமத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 3 பேரை அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். மற்றொருவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுதவிர 20-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ரெயில் மீது மர்ம மனிதர்கள் கற்களை வீசினார்கள்.
- ரெயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது.
பலராம்பூர்:
பீகார் மாநிலம் காதிகாம் மாவட்டம் பலராமபூர் பகுதியில் இன்று காலை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது இந்த ரெயில் மீது மர்ம மனிதர்கள் கற்களை வீசினார்கள். இதில் ரெயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. அதிர்ஷ்ட வசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நடனமாட மறுத்த ஒரு சிறுமியை 2 வாலிபர்கள் கடத்திச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
- சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள் தீயை அணைத்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் பகுரா கிராமத்தில் ஒரு திருமண விழா நடைபெற்றது. திருமண விழாவில் பெண்கள், சிறுமிகள் பலர் நடனமாடினார்கள். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் தங்களுடன் நடனமாடுமாறு பெண்களையும், சிறுமிகளையும் கட்டாயப்படுத்தினார்கள். அதற்கு அவர்கள் மறுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்கள் மறுநாள் காலையில் நடனமாட மறுத்த ஒரு சிறுமியை கடத்திச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள் தீயை அணைத்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்குமார் (18), பிரதீக்குமார் (20) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பிர்போர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 29 அடி உயர செல்போன் டவர் உள்ளது.
- கொள்ளை போன டவரின் மதிப்பு ரூ.8 லட்சத்து 32 ஆயிரம் ஆகும்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பிர்போர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 29 அடி உயர செல்போன் டவர் உள்ளது. இந்த குடியிருப்பில் நுழைந்த கும்பல் தங்களை செல்போன் டவர் நிறுவனத்தின் ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். செல்போன் டவரை பழுதுநீக்க வந்ததாகவும் கூறினார்கள். இதையடுத்து குடியிருப்புவாசிகள் அவர்களை உள்ளே அனுமதித்தனர்.
இந்த நிலையில் அந்த கும்பல் சுமார் 4 மணி நேரத்தில் கழற்றி திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து செல்போன் டவர் நிறுவனத்துக்கு வீட்டு உரிமையாளர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த செல்போன் டவர் நிறுவன ஊழியர்கள் டவர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளை போன டவரின் மதிப்பு ரூ.8 லட்சத்து 32 ஆயிரம் ஆகும். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்புப் படை படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன
- தண்ணீர் அதிகமாக இருக்கும் பிரதான கால்வாயில் சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.
சாப்ரா:
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி நதிவழி சொகுசு கப்பலான கங்கா விலாஸ் கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் வங்காளதேசம் வழியாக அசாமில் உள்ள திப்ருகரை சென்றடையும். அனைத்து ஆடம்பர வசதிகளுடன், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன், 18 அறைகள் கப்பலில் உள்ளன. இது தவிர, 40 பணியாளர்கள் தங்கும் வசதியும் உள்ளது.
இந்த சொகுசு கப்பல் பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த போது தரை தட்டி நின்றதாகவும், கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அவர்கள் தொல்லியல் தளமான சிராந்த் சரண் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கங்கா விலாஸ் கப்பல், சாப்ராவில் சிக்கவில்லை என்று இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் கூறி உள்ளது.
'சொகுசு கப்பல் திட்டமிட்டபடி பாட்னாவை அடைந்தது. சாப்ராவில் கப்பல் சிக்கியதாக வெளியான செய்தியில் முற்றிலும் உண்மை இல்லை. திட்டமிட்டபடி கப்பல் அதன் பயணத்தைத் தொடரும்' என சஞ்சய் பந்தோபாத்யாய் கூறியதாக மேற்கோள் காட்டி இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
'நான் கூறிய தகவலை உள்ளூர் ஊடகவியலாளர்கள் தவறாக புரிந்துகொண்டு செய்தி வெளியிட்டுள்ளார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்புப் படை படகுகள் அந்த இடத்தில் இருந்தன என்று நான் சொன்னேன். கப்பலுக்கு எந்தவித தடங்கலும் இல்லை', என சாப்ரா அதிகாரி சதேந்திர சிங் கூறினார்.
'நதி ஆழமாக இல்லாத பகுதியில் சுற்றுலா தலத்தைப் பார்க்கவேண்டுமானால், கப்பலை ஆழமான பகுதியில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் சென்றுவர, ஆழமற்ற பகுதியில் பயணிக்கும் படகுகளைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக இருக்கும் பிரதான கால்வாயில் கப்பல் நிறுத்தப்பட்டது. இதுதான் இங்கு நடந்தது. இது வழக்கமான நடைமுறை. இது சாதாரண விஷயம்தான்' என அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.
- ஆழமற்ற நதியில் பயணித்த போது கப்பல் தரை தட்டி நின்றது.
- கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி நதிவழி சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி தொடங்கி வைத்த அந்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியது.
பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த போது கப்பல் தரை தட்டி நின்றது. கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் தொல்லியல் தளமான சிராந்த் சரண் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சொகுசு கப்பல் வங்காளதேசம் வழியாக அசாமில் உள்ள திப்ருகரை சென்றடையும். அனைத்து ஆடம்பர வசதிகளுடன், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன், 18 அறைகள் கப்பலில் உள்ளன. இது தவிர, 40 பணியாளர்கள் தங்கும் வசதியும் உள்ளது.
- பீகார் மாநிலத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
- மாநில மக்கள் தொகை மட்டுமல்லாது சாதிவாரி பொருளாதார நிலை குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.
பீகார் மாநிலத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணி முதல் கட்டமாக இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரையும். 2-ம் கட்ட பணி ஏப்ரல் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்த பணியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இது குறித்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியதாவது:-
இந்த கணக்கெடுப்பு மூலம் மாநில மக்கள் தொகை மட்டுமல்லாது சாதிவாரி பொருளாதார நிலை குறித்தும் அறிந்து கொள்ள முடியும். பிற்பட்டவர்களை அறிந்து அவர்களை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் அடைய செய்யும் நோக்கத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே இறுதியில் இந்த பணி இறுதி கட்டத்தை அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிதிஷ்குமார் ‘சமாதான யாத்திரை’ என்ற யாத்திரையை தொடங்கினார்.
- இந்த யாத்திரை, பிப்ரவரி மாதம்வரை நடக்கும்.
பாட்னா :
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி நடந்து வருகிறது.
பா.ஜனதா கூட்டணியில் இருந்த பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், கடந்த ஆகஸ்டு மாதம் அதில் இருந்து விலகி, ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் கைகோர்த்தார்.
பின்னர், செப்டம்பர் மாதம் டெல்லி சென்று, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து கூறினார். காங்கிரசின் பாதயாத்திரை முடிந்த பிறகு அதுபற்றி முடிவு செய்வதாக சோனியாகாந்தி உறுதி அளித்தார்.
இந்தநிலையில், நிதிஷ்குமார் 'சமாதான யாத்திரை' என்ற யாத்திரையை நேற்று தொடங்கினார். அப்போது அவரிடம், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு நிதிஷ்குமார் கூறியதாவது:-
எனது அரசு தொடங்கிய வளர்ச்சி திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்வதில்தான் இப்போது மிகவும் அக்கறையாக இருக்கிறேன். மாநிலம் முழுவதும் பயணம் செய்யப்போகிறேன்.
வளர்ச்சி திட்டங்கள் முடிவடைந்து இருந்தால், மகிழ்ச்சி அடைவேன். முடிவடையாவிட்டால், அவற்றை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவேன்.
இந்த யாத்திரை, பிப்ரவரி மாதம்வரை நடக்கும். அதன்பிறகு பீகார் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும். மார்ச் மாத இறுதிவரை கூட்டத்தொடர் நடக்கும்.
அதைத்தொடர்ந்து, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான வாய்ப்புகளை கவனிப்பேன். அந்த பணியை புதிதாக மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேஜ்பிரதாப் யாதவிடம் ரூ.3 கோடியே 20 லட்சம் சொத்து உள்ளது.
- மந்திரிகளில் பெரும்பாலானோர் நிதிஷ்குமாரை விட பணக்காரர்களாக உள்ளனர்.
பாட்னா :
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், தனது மந்திரிகள் அனைவரும் ஆண்டின் கடைசி நாளில் தங்களது சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்படி, அவர் உள்பட அனைத்து மந்திரிகளின் சொத்து மற்றும் கடன் விவரங்கள் பீகார் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
நிதிஷ்குமார் கையில் ரூ.28 ஆயிரத்து 135 ரொக்கமும், வங்கிகளில் ரூ.51 ஆயிரத்து 856-ம் உள்ளது. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.16 லட்சத்து 68 ஆயிரம். அசையா சொத்துகள் மதிப்பு ரூ.58 லட்சத்து 85 ஆயிரம். மொத்த சொத்து மதிப்பு ரூ.75 லட்சத்து 53 ஆயிரம். ஒரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.18 ஆயிரம் அதிகரித்துள்ளது.
டெல்லியில் துவாரகா பகுதியில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் அவருக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது.
லாலுபிரசாத் யாதவின் மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவிடம் ரூ.75 ஆயிரம் ரொக்கமும், அவருடைய மனைவி ராஜஸ்ரீயிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் உள்ளது.
லாலுவின் மற்றொரு மகனும், சுற்றுச்சூழல் துறை மந்திரியுமான தேஜ்பிரதாப் யாதவிடம் ரூ.3 கோடியே 20 லட்சம் சொத்து உள்ளது.
மந்திரிகளில் பெரும்பாலானோர் நிதிஷ்குமாரை விட பணக்காரர்களாக உள்ளனர்.
- பிரதமர் வேட்பாளராக போட்டியிட தமக்கு விருப்பம் இல்லை என விளக்கம்.
- எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் உறுதியுடன் இருப்பதாக தகவல்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், பிரதமர் வேட்பாளராக யார் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த பட்டியலில் சந்திரசேகர ராவ், சரத்பவார், நிதிஷ்குமார் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், பிரதமர் வேட்பாளராக போட்டியிட தமக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தாம் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டணி கட்சியான காங்கிரஸ், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால், தமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய இந்தியாவின் தேச தந்தை பிரதமர் மோடி என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் கூறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், புதிய இந்தியாவின் புதிய தந்தை, தேசத்திற்காக என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். சுதந்திர போராட்டத்திற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
- பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
- கொரோனா தொற்று உறுதியான 4 பேரும் தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து பீகார் வந்த 4 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மியான்மர், தாய்லாந்தில் இருந்து தலா ஒருவர், இங்கிலாந்தை சேர்ந்த இருவர என மொத்தம் 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவ அதிகாரி மருத்துவர் ரஞ்சன் சிங்கின் கூறுகையில், கொரோனா உறுதியான 4 பேருக்கும் தொற்று தீவிரமானவையாக இல்லை. இருப்பினும், நோய் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருவதாக கூறினார்.






