என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் செல்போன் டவரை திருடிச்சென்ற கும்பல்
    X

    பீகாரில் செல்போன் டவரை திருடிச்சென்ற கும்பல்

    • பிர்போர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 29 அடி உயர செல்போன் டவர் உள்ளது.
    • கொள்ளை போன டவரின் மதிப்பு ரூ.8 லட்சத்து 32 ஆயிரம் ஆகும்.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பிர்போர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 29 அடி உயர செல்போன் டவர் உள்ளது. இந்த குடியிருப்பில் நுழைந்த கும்பல் தங்களை செல்போன் டவர் நிறுவனத்தின் ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். செல்போன் டவரை பழுதுநீக்க வந்ததாகவும் கூறினார்கள். இதையடுத்து குடியிருப்புவாசிகள் அவர்களை உள்ளே அனுமதித்தனர்.

    இந்த நிலையில் அந்த கும்பல் சுமார் 4 மணி நேரத்தில் கழற்றி திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து செல்போன் டவர் நிறுவனத்துக்கு வீட்டு உரிமையாளர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த செல்போன் டவர் நிறுவன ஊழியர்கள் டவர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளை போன டவரின் மதிப்பு ரூ.8 லட்சத்து 32 ஆயிரம் ஆகும். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×